சுக்கோவ் வெடிப்புச் செயல்முறை

சுக்கோவ் வெடிப்புச் செயல்முறை (Shukhov cracking process) என்பது ஒரு வெப்ப வெடிப்புச் செயல்முறையாகும். விளாடிமிர் சுக்கோவ் மற்றும் செர்கை காவ்ரிலோவ் ஆகியோர் இச்செயல்முறையை உருவாக்கினர். பெட்ரோ வேதியியல் தொழிற்சாலைகளுக்கு முக்கியத் தேவையாகக் கருதப்படும் முதல் வெப்ப வெடிப்பு நுட்பங்களை சுக்கோவ் வடிவமைத்து கட்டினார். இவருடைய காப்புரிமை (சுக்கோவ் வெடிப்புச் செயல்முறை-உருசியப் பேரரசு காப்புரிமை எண்.12926, நாள் 1891 ஆம் ஆண்டு நவம்பர் 27 முதல்). இச்செயல்முறை செயற்படத் தொடங்கிய பின்னர் செந்தர எண்ணெய் செயல்முறை காப்புகள் (பர்டன் செயல்முறை-அமெரிக்க காப்புரிமை எண் 1,049,667, நாள் 1913 சனவரி 7) எண்ணெய் சுத்திகரிப்பு தொடர்பானவை பயனற்றதாகப் போயின. 1937 ஆம் ஆண்டில் சுக்கோவின் வெடிப்புச் செயல்முறையானது வினையூக்க வெடிப்பாக மாற்றியமைக்கப்பட்டது. இன்றளவிலும் டீசல் உற்பத்திக்கு வினையூக்க வெடிப்பு செயல்முறையே பயன்படுத்தப்படுகிறது.

விளாடிமிர் சுக்கோவின் வெடிப்புச் செயல்முறை தொழிற்சாலை பக்கூ, உருசியா, 1934

மேற்கோள்கள் தொகு