சுஜா-உத்-தௌலா

அயோத்தியின் நவாப்

சுஜா-உத்-தௌலா (Shuja-ud-Daulah) என்பவர் 1732 ஜனவரி 19 லிருந்து 1775 ஜனவரி 26 வரை பிரதம அமைச்சராகவும், படைத்தலைவராகவும் மற்றும் அயோத்தியின் நவாபாகவும் இருந்துள்ளார். [1] .

சுஜா-உத்-தௌலா மூன்றாம் பானிபட் போரின்போது முகலாயப் பேரரசின் பிரதம அமைச்சராகப் பணியாற்றினார், அவர் அயோத்தி நவாப், மற்றும் இரண்டாம் ஷா ஆலம் ஆகியோருக்கு தனது வாழ்நாள் முழுவதும் விசுவாசத்துடன் இருந்தார்.
லக்னோவில் உள்ள நவாப் சுஜா-உத்-தௌலாவின் அரண்மனை

ஆரம்ப கால வாழ்க்கை தொகு

சுஜா-உத்-தௌலா முகலாயப் பேரரசர் அகமது ஷா பகதூரின் பிரதம அமைச்சராக இருந்த சப்தர்ஜங்கின் மகனாவார். இவரது தந்தையைப் போலவே துணை அதிகாரிகளை ஒருங்கிணைப்பதற்கான திறன்களுக்காக சிறுவயதிலிருந்தே சுஜா-உத்-தௌலா அறியப்பட்டார். இந்த திறமை இறுதியில் இரண்டாம் ஷா ஆலம் என்பவரால் பிரதம அமைச்சராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு வழிவகுத்தது.

வங்காள நவாபுகளின் பிரதேசங்கள் முதலாம் இராகோஜி போன்ஸ்லே மற்றும் அவரது மராத்தியப் படைகளால் அழிக்கப்பட்டபோது பல்வேறு சந்தர்ப்பங்களில் பிரபலமான அலிவார்டி கானுக்கு சுஜா-உத்-தௌலா உதவி செய்ததாக அறியப்படுகிறது. இதனால் சுஜா-உத்-தௌலா அலிவார்டி கானின் படைவீரர்களிடையே மிகவும் மரியாதைக்குரிய நபராக அறியப்பட்டார்.

அயோத்தியின் நவாப் தொகு

1753 ஆம் ஆண்டில் முகலாய பேரரசின் பிரதம அமைச்சரான அவரது தந்தை சப்தர்ஜங் இறந்த பிறகு, முகலாய பேரரசர் அகமது ஷா பகதூர் அவர்களால் அடுத்த நவாபாக சுஜா-உத்-தௌலா அங்கீகரிக்கப்பட்டார்.

சுஜா-உத்-தௌலா மராத்தியப் பேரரசின் மராத்தா கூட்டாளியான இமாத்-உல்-முல்கை வெறுத்தார். அதன் ஆட்சி சிக்கந்தராபாத் போருக்குப் பிறகு சதாசிவராவ் பாவின் ஆதரவுடன் உருவானது. இமாத்-உல்-முல்க், அகமது ஷா பகதூரை கண்மூடித்தனமாக எதிர்த்தார். பின்னர் இரண்டாம் ஆக்கிர் என்பவரை முகலாய ஏகாதிபத்திய சிம்மாசனத்தில் அமர்த்தினார். இரண்டாம் அலம்கீர் மற்றும் அவரது மகன் இளவரசர் அலி கௌகர் ஆகியோர் பெரும்பாலும் இமாத்-உல்-முல்க்கால் துன்புறுத்தப்பட்டனர், ஏனெனில் அவர்கள் அகமது ஷா துரானியுடனான அமைதியான நிபந்தனைகளை கைவிட மறுத்தனர். மேலும் அவர்கள் மராத்தியர்களுடனான உறவின் காரணமாக இமாத்-உல்-முல்கின் பதவி விலகலைக் கோரினர். .

முகலாய பேரரசின் பிரதம அமைச்சர் தொகு

இரண்டாம் முகலாய பேரரசர் ஆலம்கீர் கொலைக்கு வழிவகுக்கும் ஒரு சதித்திட்டத்தை உணர்ந்த இளவரசர் அலி கௌகர் தில்லியில் இருந்து தப்பி ஓடினார். சுஜா-உத்-தௌலா இளவரசர் அலி கௌகரை வரவேற்று பாதுகாத்தார். பின்னர் இளவரசர் தன்னை இரண்டாம் ஷா ஆலம் என்று அறிவித்து, முகலாய சாம்ராஜ்யத்தின் பிரதம அமைச்சராக சுஜா-உத்-தௌலாவை அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்தார். முகலாய பேரரசின் சிம்மாசனத்தில் மூன்றாம் ஷாஜகான் என்பவரை அமர வைத்து பெரும்பகுதியைக் கொள்ளையடித்த சதாசிவராவ் பாவ் மற்றும் அவரது படைகளை ஷா ஆலம் கடுமையாக எதிர்த்தார்.

பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனியின் ஆதரவுடன் இருந்த மிர் ஜாபரிடமிருந்து முகலாயப் பேரரசின் கிழக்குப் பகுதிகளை திரும்பப் பெற முயற்சிக்கும் ஒரு பயணத்தை வழிநடத்துமாறு இரண்டாம் ஷா ஆலமிற்கு அறிவுறுத்தப்பட்டது. சுஜா-உத்-தௌலா, நஜிப்-உல்-தௌலா மற்றும் மிர்சா ஜவான் பக்த் ஆகியோர் அகமது ஷா துரானியுடன் கூட்டணி சேர்ந்து, 1760 ஆம் ஆண்டில் இரண்டாவது சிக்கந்தராபாத் போரின்போது இவரது படைகளுக்கு உதவினர். பின்னர் மூன்றாம் பானிபட்டு போரின் போது 43,000 பேர் கொண்ட முகலாய இராணுவத்தையும் வழிநடத்தினர். .

பக்சார் போர் தொகு

இந்திய வரலாற்றில் குறைவற்ற திட்டவட்டமான பக்சார் சண்டையில் சுஜா-உத்-தௌலா தனது பங்களிப்பிற்காகப் பெயர் பெற்றவர். பிரித்த்தானிய கிழக்கிந்திய நிறுவனத்தின் வரலாற்றில் ஒரு முக்கிய போரில் சுஜா, முகலாய பேரரசர் இரண்டாம் ஷா ஆலம், வங்காளத்தின் ஆட்சியாளர் மீர் காசிம் ஆகியோர் பிரிட்டிஷ் படைகளால் தோற்கடிக்கப்பட்டனர். இச்சண்டையில் வென்றதன் மூலம் வங்காளத்தில் பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம் ஒரு வலுவான அடித்தளத்தை அமைக்க ஏதுவானது.

இறப்பு மற்றும் அடக்கம் தொகு

சுஜா-உத்-தௌலா 26-01-1775 அன்று அயோத்தியின் அன்றைய தலைநகரான பைசாபாத்தில் இறந்தார். பின்னர் அதே நகரத்தில் புதைக்கப்பட்டார். இவரது கல்லறை ரோஜாத் தோட்டம் (குலாப் பாரி) என்று அழைக்கப்படுகிறது.

குறிப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுஜா-உத்-தௌலா&oldid=2885354" இலிருந்து மீள்விக்கப்பட்டது