சுதெபான் யாகோவ்லெவிச் உருமோவ்சுகி

சுதெபான் யாகோவ்லெவிச் உருமோவ்சுகி (Stepan Yakovlevich Rumovsky) (உருசியம்: Степан Яковлевич Румовский; 29 அக்தோபர் [யூ.நா. 9 நவம்பர்] 1734 – 6 ஜூலை [யூ.நா. 18 ஜூலை] 1812) ஓர் உருசிய வானியலாளரும் கணிதவியலாளரும் ஆவார். இவர் முதலி நாட்டுக்கு வெளியே நன்கு அறியப்பட்ட வானியலாளர் ஆவார்.[1] இவர் பெர்லினில் லியோனார்டு ஆய்லர் அவர்களிடம் கல்வி பயின்றார்.[2][3] இவர் 1756 இல் இருந்து 1812 வரை புனித பீட்டர்சுபர்கு பல்கலைக்கழகத்தில் வானியலும் கணிதவியலும் கற்பித்தார், மேலும் இவர் புனித பீட்டர்சுபர்கு கல்விக்கழகத்தில் பல பதவிகளை வகித்துள்ளார்.இவர் 1766 முதல் 1786 வரை புவிப்பரப்பியல் துறையின் இயக்குநராக இருந்தார். இவர் 1763 இல் இருந்து வான்காணக இயக்குநராகவும் வானியல் பேராசிரியராகவும் தன் இறப்பு வரை இருந்துள்ளார்.[2] இதற்கிடையே, இவர் அறிவியல் கல்விக்கழகத்தின் துணைத்தலைவரானார்.[4] இவர் 1763 இல் சுவீடிய அரசு அறிவியல் கல்விக்கழகத்தின் தகைமை உறுப்பினராகத் தேர்வானார்.[2]

சுதெபான் யாகோவ்லெவிச் உருமோவ்சுகி
பிறப்பு29 அக்டோபர் 1734 (in Julian calendar)
Vladimir Governorate
இறப்பு6 சூலை 1812 (in Julian calendar) (அகவை 77)
சென் பீட்டர்சுபெர்கு
படித்த இடங்கள்
  • Academic University at the St. Petersburg Academy of Sciences
பணிவானியல் வல்லுநர்
வேலை வழங்குபவர்
  • Academic University at the St. Petersburg Academy of Sciences
  • செயின்ட் பீட்டர்ஸ்பேர்க் மாநில பல்கலைக்கழகம்
விருதுகள்Order of St. Vladimir, 3rd class, Order of Saint Anna, 2nd class

இவர் 1803 இல் உருசியப் பள்ளி ஆட்சி வாரியத்தில் இணைந்து பல சீர்திருத்தங்களை மேற்கொண்டார். இவர் 1803 முதல் 1812 வரை கசான் கல்வித்துறையின் கண்காணிப்பாலராக இருந்தபோது வோல்கா வட்டாரத்தில் கசான் பல்கலைக்கழகத்தை உருவாக்குவதில் முதன்மையான பங்கு வகித்தார்.[2]

பணிகள் தொகு

இவர் வானியல், புவிப்புற அளக்கையியல், புவிப்பரப்பியல், கணிதவியல், இயற்பியல் புலங்களில் பல அறிவியல் கட்டுரைகளை வரைந்துள்ளார் இவர் 1786 இல் உருசியாவில் 62 இடங்களுக்கு முதல் வானியல் நிலவரைவியல்ஆயங்கள் அமைந்த அட்டவணையை உருவாக்கி வெளியிட்டார். இது பிறகு Berliner Astronomisches Jahrbuch (1790) இல் மீண்டும் வெளியிடப்பட்டது.[2] இவர் 1760 இல் மாணவருக்கான கணிதவியல் பாட நூலை வெளியிட்டார். பின்னர், இவர் உருசிய மொழி அகரமுதலி வெளியீட்டிலும் ஈடுபடுத்தப்பட்டார். இவர் பல மெய்யியல் நூல்களை உருசியத்தில் மொழிபெயர்த்தார்.[4]

வெள்ளி நோக்கீடுகள் தொகு

பதினெட்டாம் நூற்றாண்டில் புவிக்கும் சூரியனுக்கும் இடையில் அமையும் தொலைவைத் துல்லியமாக அளத்தல் உடனடி இன்றியமையாத வானியல் செயல்பாடாக்க் கருதப்பட்டது. முன்பு எட்மண்டு ஆல்லே புவிக்கும் சூரியனுக்கும் இடையில் வெள்ளி கடக்கும்போது இத்தொலைவை அளத்த்ல் துல்லியமாக அமையும் எனப் பரிந்துரைத்திருந்தார்.அத்தகைய வெள்ளிக் கடப்புகள் 1761 இலும் 1769 இலும் நிகழ்ந்தன. அப்போது ஐரோப்பா முழுவதும் நோக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டன. உண்மையில் மிகத் துல்லியமான புவி-சூரியத் தொலைவு அளவீடுகள் பதிவு செய்யப்பட்டன.[4]

இம்முயற்சி 1761 இல் உருசியாவிலும் ஐரோப்பாவிலும் ஒருங்கினைந்துச் செயல்படுத்தப்பட்ட்து. உருசிய முய்ர்சிக்கு மிகைல் இலமனோசொவ் ஊக்கமூட்டினார். இதற்காக பல தேட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டன குறிப்பாக, சைபீரியாவில் உள்ள செலெங்கின்சுக் தேட்டத்துக்கு உருமோவ்சுகி தலைமையேற்றார்.[4]

இந்த 1761 முடிவுகள் 1769 இல் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்திய நோக்கீடுகளில் பயன்படுத்தப்பட்டன. இந்த ஆண்டில் உருசியப் பேரரசுக்காக உருமோவ்சுகி உருசியாவின் நோக்கீடுகளை ஒருங்கிணைத்தார். உருசியாவில் அணுகமுடிந்த இடங்களில் எல்லாம் மேற்கொள்ளப்பட்டன. உருமோவ்சுகி தானே உருசியாவில் உள்ள கோலாவில் நோக்கிடுகளில் ஈடுபட்டார். பின்னர், இவர் லியோனார்டு ஆய்லர் அவர்களுடன் நோக்கீடுகளின் முழுக் காட்சியைப் பெறுவதற்காக இணைந்துக் கொண்டார்.[4]

மேற்கோள்கள் தொகு

  1. Khramoĭ, A. V. (1969). History of Automation in Russia Before 1917: (Ocherk Istorii Razvitiya Avtomatiki V SSSR; Dooktyabrʹskii Period). Israel Program for Scientific Translations [available from the U.S. Department of Commerce, Clearinghouse for Federal Scientific and Technical Information, Springfield, Va.]. பக். 223. https://books.google.com/books?id=AhMzAAAAMAAJ. 
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 Biographical Encyclopedia of Astronomers. Springer. பக். 992. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-387-30400-7. https://books.google.com/books?id=t-BF1CHkc50C&pg=PA992. 
  3. Clark, William; Golinski, Jan; Schaffer, Simon (1 July 1999). The Sciences in Enlightened Europe. University of Chicago Press. பக். 395. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-226-10940-4. https://books.google.com/books?id=ttGgd6mec1MC&pg=PA395. 
  4. 4.0 4.1 4.2 4.3 4.4 Vorontsov-Velyaminov, Boris. "Очерки истории астрономии в России 6. С.Я. Румовский и другие русские астрономы второй половины XVIII в." (in Russian). «Кабинетъ» — История астрономии. பார்க்கப்பட்ட நாள் 17 November 2013.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)