சுனந்தா புஷ்கர்

சுனந்தா புஷ்கர் (Sunanda Pushkar) (27 சூன் 1964 – 17 சனவரி 2014). காஷ்மீர் பண்டித குடும்பத்தில், இந்திய இராணுவ அதிகாரியான புஷ்கர்நாத்-ஜெயா தாஸ் தம்பதியரின் ஒரே மகள்.[2] துபாய் நாட்டு முதலீட்டு நிறுவனத்தில் விற்பனை மேலாளராகவும், ஒரு தனியார் நிறுவனத்தில் கூட்டு பங்குதாரராகவும் இருந்தவர். இறக்கும்போது, இந்திய அரசியல்வாதியான சசிதரூரின் மனைவி.

சுனந்தா புஷ்கர்
பிறப்புசுனந்தா தாஸ்
(1964-06-27)27 சூன் 1964
டொரண்டோ, கனடா
இறப்பு17 சனவரி 2014(2014-01-17) (அகவை 49)
புது தில்லி, இந்தியா
குடியுரிமைகனடியர்[1]
வாழ்க்கைத்
துணை
1.சஞ்சய் ரைனா (1988)
2.சுஜித் மேனன் (1991-1997)
3.சசி தரூர் (2010-2014)
பிள்ளைகள்1

திருமணங்கள் தொகு

இவர் அரசு கல்லூரியில் தன்னுடன் படித்த சஞ்சய் ரெய்னாவை திருமணம் செய்து கொண்டார்.[3][4] இவர்கள் 1988ஆம் ஆண்டில் திருமண முறிவு செய்து கொண்டனர். பின், சுனந்தா 1989ஆம் ஆண்டில் துபாய்க்கு சென்று, அங்கு சுஜித் மேனன் என்பவரை 1991ஆம் ஆண்டு இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.[5] சுனந்தா-சுஜித் மேனன் இணைக்கு 1992ஆம் ஆண்டில் ஓர் ஆண் குழந்தை பிறந்தது. 2010ஆம் ஆண்டு சுனந்தா புஷ்கர் மூன்றாவதாக சசி தரூரை மணந்தார். [6] .[7]

இறப்பின் மர்மம் தொகு

புது தில்லியிலுள்ள சாணக்கியபுரியில் உள்ள ஹோட்டல் லீலாவதி பாலேசின் 345ஆம் எண் கொண்ட அறையில் 17 சனவரி 2014ஆம் தேதியன்று, உடலில் காயங்களுடன், மர்மமான முறையில் சுனந்தா புஷ்கர் இறந்து கிடந்தார். காவல் துறை வழக்கு பதிவு செய்து, மருத்துவ உடற்கூறாய்வு அறிக்கையின்படி, சுனந்தா புஷ்கர், அதிக போதை மாத்திரைகள் உட்கொண்டதால் இறந்தார் என அறிவித்து வழக்கை முடிவு கட்டியது.[8][9] இவ்வழக்கை மீண்டும் திசம்பர் 2014 முதல் புதுதில்லி காவல்துறை மறுவிசாரணை செய்து, சுனந்தா புஷ்கர் கொலை செய்யப்பட்டு இறந்துள்ளார் என முடிவில் கொலை வழக்கு பதியப்பட்டு, கொலைக்கு காரணமான குற்றவாளிகளை தேடி வருகிறது.[10].

மேற்கோள்கள் தொகு

  1. Allana, Alia (18 April 2010). "Suddenly SUNANDA". இந்தியன் எக்சுபிரசு. http://www.indianexpress.com/news/suddenly-sunanda/607683/0. பார்த்த நாள்: 12 October 2010. 
  2. Jammu to Dubai to Delhi: Who is Sunanda Pushkar whose stake is worth Rs 70 crore?New Indian express
  3. "Sunanda's ex-hubby says he has 'moved on' : North, News — India Today". Indiatoday.intoday.in. 16 April 2010. பார்க்கப்பட்ட நாள் 25 January 2014.
  4. "Sunanda Pushkar — Kashmiri village girl who made it big in life — India — DNA". Dnaindia.com. பார்க்கப்பட்ட நாள் 25 January 2014.
  5. http://www.outlookindia.com/article.aspx?265098 |title=Got A Girl, Named Sue | Vrinda Gopinath |publisher=Outlookindia.com |accessdate=25 January 2014}}
  6. ' + val.created_at + ' (18 January 2014). "Sunanda Pushkar Tharoor — a profile". NDTV.com. பார்க்கப்பட்ட நாள் 25 January 2014.
  7. "Shashi Tharoor weds Sunanda Pushkar". NDTV. 22 August 2010. http://www.ndtv.com/article/india/shashi-tharoor-weds-sunanda-pushkar-46274. 
  8. http://tamil.thehindu.com/india/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D/article5590060.ece
  9. "Sunanda Pushkar died an unnatural sudden death say AIIMS doctors; body cremated". Archived from the original on 2014-10-10. பார்க்கப்பட்ட நாள் 2015-01-12.
  10. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-01-11. பார்க்கப்பட்ட நாள் 2015-01-12.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுனந்தா_புஷ்கர்&oldid=3759929" இலிருந்து மீள்விக்கப்பட்டது