சுபாசினி கிரிதர்

பரத நாட்டியக் கலைஞர், பட்டையக் கணக்காளர்

சுபாசினி கிரிதர் (Subhashni Giridhar, பிறப்பு: 27, ஏப்ரல் 1965) என்பவர் இந்திய பாரம்பரிய நடனமான பரதநாட்டிய நடனக் கலைஞரும் பட்டய கணக்காளருமாவார்.

சுபாசினி கிரிதர்
சி. ஏ. சுபாசினி கிரிதர்
பிறப்பு27 ஏப்ரல் 1965 (1965-04-27) (அகவை 58)
தமிழ்நாடு, சென்னை
இருப்பிடம்இந்தியா, தெலங்கானா ஐதராபாத்து
பணிபரத நாட்டியக் கலைஞர் மற்றும் பட்டையக் கணக்காளர்
செயற்பாட்டுக்
காலம்
1990–தற்போதுவரை
வாழ்க்கைத்
துணை
புரிசை கிரிதர் (1995–தற்போதுவரை)
பிள்ளைகள்1
வலைத்தளம்
Subhashni.in

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் பின்னணி தொகு

சுபாசினி கிரிதர் சிறுவயதிலிருந்தே நடனத்தின் மீது ஆர்வம் கொண்டவராக இருந்தார். மேலும் புகழ்பெற்ற குருக்களிடமிருந்து பாரத நாட்டியத்தின் தஞ்சாவூர் பாணியில் பயிற்சி பெற்றார். குறிப்பாக 'கலைமாமணி' மறைந்த குரு ஏ. டி கோவிந்தராஜ் பிள்ளை, பின்னர் 'கலைமாமணி' மறைந்த குரு டி. கே. மகாலிங்கம் பிள்ளை மற்றும் மாதுங்காவின் புகழ்பெற்ற ஸ்ரீ ராஜராஜேஸ்வரி பாரத நாட்டிய கலா மந்திரின் குரு வசந்த் குமார் ஆகியோரிடம் நாட்டியம் பயின்றார். 8 வயதிலிருந்தே நடனத்தைக் கற்றுக் கொண்ட இவர், தனது முதல் மேடை அரங்கேற்றத்தை   - 26, ஜனவரி, 1990 அன்று மேற்கொண்டார்.

நடன வாழ்க்கை தொகு

1990 இல் இவரது அரங்கேற்றத்திற்குப் பிறகு, பல தனி ஆடல் நிகழ்சிகளை வழங்கி வருகிறார். தேசிய அளவிலான நடனக் கலைஞராக இருப்பதால், இவரது சிறப்பு தனி ஆடல் நிகழ்ச்சிகளாக உள்ளன. 1990 ஆம் ஆண்டு முதல் இவர் தனி ஆடல் நிகழ்ச்சிகளை வழங்கி வருகிறார். இவர் நாட்டில் உள்ள பெரிய சபாக்கள் மற்றும் அமைப்புகளில் தன் நடன நிகழ்சிகளை வழங்கியுள்ளார். குறிப்பாக மும்பையில் உள்ள ஸ்ரீ சண்முகானந்தா சபா (1995) மற்றும் புது தில்லி (2016), கலாச்சார அமைச்சகம் (இந்தியா), முலுண்ட் நுண்கலை சங்கம், என். பி. பி. ஏ. லிட்டில் தியேட்டர் மற்றும் கோத்ரேஜ் நடன அகாதமியில் பலமுறை நிகழ்சிகளை நடத்தியுள்ளார். மேலும் இஸ்கானில் நான்கு   - மாதாந்திர திருவிழாக்கள் மற்றும் கிருஷ்ண ஜன்மாஷ்டமி விழா, முலுண்ட் நுண்கலை சங்கம், மகாராஷ்டிரா, தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம் போன்ற மாநிலங்கள் ஏற்பாடு செய்த கலாச்சார விழாக்கள், மகாராஷ்டிரா அரசு கலாச்சார விவகாரங்கள் துறையால் ஏற்பாடு செய்யப்பட்ட 'விவிதா கலா மகோத்சவம்', தமிழ்நாடு அரசு தாஜ் மகால் பேலஸ் மற்றும் டவர் மற்றும் செண்டர் ஓட்டலில் ஏற்படு செய்த 'பொங்கல் திருவிழா' , ஆந்திர பிரதேச அரசு சுற்றுலா துறையினால் ஷில்பராமத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட விழாவில், ஐதராபாத்தின், ரவீந்திர பாரதியில் நடத்தப்பட்ட ஐ. சி. எஸ். ஐ, எஸ். ஐ. சி. ஏவின் பிராந்திய மாநாடு, கலசாகரம், சிக்கந்தராபாத் மற்றும் மும்பை ஆந்திர மகா சபாவின் நடன விழா போன்றவற்றில் தன் ஆடல் நிகழ்ச்சிகளை வழங்கியுள்ளார். நடனக் கலைஞராக சுபாசினி 25 ஆண்டுகள் நிறைவு செய்தார். இந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில் இவர் பொட்டி ஸ்ரீராமுலு தெலுங்கு பல்கலைக்கழகத்தில் ஆடினார்.

இவர் 'சுகுண நாட்டியாலயா' என்ற பெயரில் நடனப் பள்ளியை நடத்தி வருகிறார். இவருக்கு பரத நாட்டியத்தைத் தொடர வழிகாட்டிய இவரது சகோதரியான மறைந்த சுகுணாவின் பெயரில் அமைத்துள்ளார். இந்த அகாடமியிலிருந்து வரும் பணம் ஒரு அறக்கட்டளையால் நிர்வகிக்கப்படுகிறது. இந்த அறக்கட்டளை பணம் வறியவர்களுக்கு கல்வி வழங்குவதற்காக இருக்கிறது.

கல்வி வாழ்க்கை தொகு

இவர் ராப்போடர் வணிகக் கல்லூரியில் வணிகத்தில் முதுகலை பட்டம் பெற்றுள்ளார். மேலும் பட்டய கணக்காளராக உள்ளார். இவர் 2003 முதல் இந்திய பட்டய கணக்காளர் கழகத்தின் சக உறுப்பினராக உள்ளார். 2004 ஆம் ஆண்டில், இவர்   இந்திய பட்டய கணக்காளர் கழகத்தில் இருந்து தகவல் மற்றும் தணிக்கை அமைப்புப் பிரிவில் டிசா என்ற மேற் தகுதி பட்டயத்தை பெற்றார். இவருக்கு 'ஷ்ரிங்கர் மணி' என்ற பட்டமும், இந்தியா முழுவதுக்குமான சிறந்த நடனக் கலைஞர் என்ற விருதை சுர் சிங்கர் சம்சாத் வழங்கியுள்ளது. இவர் மும்பையில் பட்டய கணக்காளராக இருந்து வருகிறார்.

குறிப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுபாசினி_கிரிதர்&oldid=3701978" இலிருந்து மீள்விக்கப்பட்டது