சுப்மன் கில்

இந்தியத் துடுப்பாட்டக்காரர்

சுப்மன் கில் (Shubman Gill பிறப்பு:செப்டம்பர் 8, 1999) இந்தியத் துடுப்பாட்ட அணி வீரர் ஆவார்.[1] வலதுகை மட்டையாளரான இவர் பஞ்சாப் அணி சார்பாக முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடி வருகிறார். 2017- 2018 ஆம் ஆண்டில் நடைபெற்ற ரஞ்சிக் கோப்பைத் தொடரில் வங்காள அணிக்கு எதிராக அறிமுகமானார். அறிமுகப் போட்டியில் அரைநூறு ஓட்டங்களும் இரண்டாவது போட்டியில் 29 ஓட்டங்களையும் எடுத்தார்[2][3]. 2019இல் நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் இவர் சர்வதேச ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் அறிமுகமானார்.

சுப்மன் கில்
2019இல் கில்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்சுமன் கில்
பிறப்பு8 செப்டம்பர் 1999 (1999-09-08) (அகவை 24)
பசில்கா, பஞ்சாப், இந்தியா
பட்டப்பெயர்பிரின்ஸ், சுபா
உயரம்5 அடி 10 அங்குலம்
மட்டையாட்ட நடைவலக்கை
பந்துவீச்சு நடைவலக்கை எதிர்ச்சுழல்
பங்குதுவக்க மடையாளர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 297)திசம்பர் 26 2020 எ. ஆத்திரேலியா
கடைசித் தேர்வு9 மார்ச்சு 2023 எ. ஆத்திரேலியா
ஒநாப அறிமுகம் (தொப்பி 227)31 சனவரி 2019 எ. நியூசிலாந்து
கடைசி ஒநாப22 மார்ச்சு 2023 எ. ஆத்திரேலியா
ஒநாப சட்டை எண்77
இ20ப அறிமுகம் (தொப்பி 101)3 சனவரி 2023 எ. இலங்கை
கடைசி இ20ப1 பெப்ரவரி 2023 எ. நியூசிலாந்து
இ20ப சட்டை எண்77
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2017–தற்போது வரைபஞ்சாப் துடுப்பாட்டச் சங்கம்
2018–2021கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
2022–தற்போது வரைகுஜராத் டைட்டன்ஸ்
2022கிளாமோர்கன் கவுண்டி அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தே.து ஒ.ப.து ப.இ.20 மு.த.து
ஆட்டங்கள் 15 24 6 42
ஓட்டங்கள் 890 1311 202 3,432
மட்டையாட்ட சராசரி 34.23 65.55 40.06 52.80
100கள்/50கள் 2/4 4/5 1/0 10/16
அதியுயர் ஓட்டம் 128 208 126* 268
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
10/– 15/– 2/– 27/–
மூலம்: Cricinfo, 25 மார்ச்சு 2023

ஆரம்பகால வாழ்க்கை தொகு

கில் செப்டம்பர் 8, 1999 இல் பசில்கா, பஞ்சாபில் பிறந்தார். இவரின் தந்தை லக்விந்தர் சிங் துடுப்பாட்ட வீரராக வேண்டும் என விரும்பினார். ஆனால் அது நிறைவேறாமல் போகவே தனது மகனை துடுப்பாட்ட வீரராக்க நினைத்தார். பின் பஞ்சாப் துடுப்பாட்ட வாரிய அரங்கிற்கு அருகில் வாடைக்கு குடிபெயர்ந்தனர்.[4]

மூன்று வயது முதல் துடுப்பாட்டம் விளையாடியதாகவும், அந்தக் காலகட்டத்தில் பொம்மைகள் வேண்டாமென்று மட்டை மற்றும் பந்துகள் கேட்டதாகவும் அதனுடனே தூங்கியதாகவும் இவரது தந்தை லக்வந்தர் சிங் கூறினார்.[5]

சர்வதேச போட்டிகள் தொகு

பெப்ரவரி, 2017இல் நடைபெற்ற 19 வயதிற்கு உட்பட்டோருக்கான போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக அறிமுகமானார்.[6][7][8] 2019இல் நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் இவர் சர்வதேச ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் அறிமுகமானார்.[9] ஆகத்து 2019 இல் முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் மிக இளம் வயதில் இரு நூறு ஓட்டங்கள் அடித்தவர் எனும் சாதனை படைத்தார்.[10] பிரையன் லாரா அகாதமியில் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில் 204 ஓட்டங்கள் எடுத்தார். அப்போது இவருக்கு வயது 19 ஆண்டுகள் 334 நாட்கள் ஆகும்.[11] தென்னாப்பிரிக்கட் துடுப்பாட்ட அ னிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டத் தொடரில் இந்திய அணியில் இடம்பெற்றார். ஆனால், விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை.[12] நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் இந்திய அ அணியின் தலைவரானார்.[13]

சான்றுகள் தொகு

  1. "Shubman Gill". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 25 பெப்ரவரி 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "Ranji Trophy 2017: Bengal inch closer to quarterfinal berth with innings victory over Punjab". PTI. https://indianexpress.com/article/sports/cricket/ranji-trophy-2017-bengal-inch-closer-to-quarterfinal-berth-with-innings-victory-over-punjab-4945137/. 
  3. "Ranji Trophy 2017: Punjab in command with Shubman Gill, Anmolpreet Singh tons". PTI. https://indianexpress.com/article/sports/cricket/ranji-trophy-2017-punjab-in-command-with-shubman-gill-anmolpreet-singh-tons-4954353/. 
  4. "'I sat inside the washroom when my bidding was on'". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 28 சனவரி 2018.
  5. "Shubman Gill: The boy who silences men post Under 19 World Cup win". The New Indian Express. http://www.newindianexpress.com/sport/cricket/2018/feb/13/shubman-gill-the-boy-who-silences-men-post-under-19-world-cup-win-1772496.html. 
  6. "Shubman Gill stars as India U-19 beat England by 7 wickets" (in en). Hindustan Times. 3 பெப்ரவரி 2017. http://www.hindustantimes.com/cricket/shubman-gill-stars-as-india-u-19-beat-england-by-7-wickets-take-2-1-series-lead/story-8skWEp6qIRDM2tRmIQ0cpN.html. 
  7. "Shubman Gill, Prithvi Shaw slam tons to help India hammer England, clinch U-19 ODI series" (in en-US). Firstpost. 6 பெப்ரவரி 2017. http://www.firstpost.com/sports/shubman-gill-prithvi-shaw-slam-tons-to-help-india-hammer-england-clinch-u-19-odi-series-3269408.html. 
  8. "Shubman Gill was terrific, says U-19 coach Dravid - Times of India". The Times of India. http://timesofindia.indiatimes.com/sports/cricket/news/shubman-gill-was-terrific-says-u-19-coach-dravid/articleshow/57045134.cms. 
  9. "India vs New Zealand 4th ODI: Shubman Gill debuts, Khaleel Ahmed replaces Mohammed Shami". The Indian Express (in ஆங்கிலம்). 31 சனவரி 2019. பார்க்கப்பட்ட நாள் 31 சனவரி 2019.
  10. "Shubman Gill creates history with double ton; India A close in on win against West Indies A". The Hindustan Times. 9 August 2019. பார்க்கப்பட்ட நாள் 9 August 2019.
  11. "Shubman Gill becomes youngest to score first-class double ton for an Indian representative side". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 9 August 2019.
  12. "Shubman Gill gets maiden call-up to India Test squad, Rohit Sharma picked as opener". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 12 September 2019.
  13. "Hanuma Vihari and Shubman Gill to lead India A teams in New Zealand, Hardik Pandya and Prithvi Shaw included". India Today. பார்க்கப்பட்ட நாள் 23 December 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுப்மன்_கில்&oldid=3930075" இலிருந்து மீள்விக்கப்பட்டது