சும்மார் பகூர்

சும்மார் பகூர் அல்லது சுமார் பாகூர் (Chumar Bakhoor or Chumar Bakur) என்பது இரத்தினம் என்றழைக்கப்படும் மணிக்கல் நிறைந்த ஒரு சுரங்கப் பகுதியாகும். பாக்கித்தானின் கில்கித்-பால்டிசுதான் எனப்படும் வடக்கு நிலங்கள் பகுதியிலுள்ள நகர் மாவட்டத்தின் சுமயர் பள்ளத்தாக்கில் 5,520 மீட்டர் உயரத்தில் இச்சுரங்கம் அமைந்துள்ளது. [1] புவியியல் ரீதியாக ஓயும்-நகர் உடன் இப்பகுதி நெருக்கமான தொடர்பிலுள்ளது. மத்திய சுமயரில் இருந்து நடந்து செல்கையில் 4000 மீட்டர் உயரத்திலுள்ள தீப்பாறைகளை அடைய சுமார் 4 முதல் 5 மணி நேரம் பிடிக்கிறது.

Chumar Bakhoor
சுமர் பாகூர்
பெயரிடுதல்
தாயகப் பெயர்சும்மர் பகூர் Error {{native name checker}}: parameter value is malformed (help)
புவியியல்
அமைவிடம்சுமயர் சமவெளி, பாக்கித்தான்

சும்மார் பகூரில் உள்ள இரத்தின வைப்புக்கள் 1984 ஆம் ஆண்டில் உள்ளூர் வேட்டைக்காரர் முகம்மது சாவால் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டன என்று பௌவெட் மற்றும் சா ஆகியோரின் கூற்றை ஆதாரமாகக் கொண்டு அப்பியானி நிறுவனம் கூறுகிறது. [2]C[3] சும்மார் பகூரில் இரத்தினங்களைத் தவிர நீலப்பச்சை மணிக்கற்கள், புளோரைட்டு [4], அபடைட்டு, கால்சைட் மற்றும் குவார்ட்சு போன்ற பல்வேறு விலைமதிப்பற்ற மற்றும் பகுதி விலைமதிப்புள்ள இரத்தினங்கள் உள்ளன.

சும்மார் பகூர் கணவாய் சுமயர் பள்ளத்தாக்கை நகர் மாவட்டத்தின் தலைமையிடமான நகர் காசு நகருடன் இணைக்கிறது.

மேற்கோள்கள் தொகு

  1. Appiani, Roberto (2007). "Pink fluorite from an exceptional new find at Chumar Bakhoor, Pakistan". The Mineralogical Record 38 (2): 95–101. 
  2. Appiani, Roberto (2007). "Pink fluorite from an exceptional new find at Chumar Bakhoor, Pakistan". The Mineralogical Record 38 (2). 
  3. Iftikhar, Malik; David, Cohen; Alistair, Dunlop (2004). Geochemical aspects of uranium in the Sumayar valley, northern areas of Pakistan. 37. p. 1-25. http://nceg.uop.edu.pk/GeologicalBulletin/Vol-37-2004/Vol-37-2004-Paper1.pdf. 
  4. Jacobson, Mark Ivan (2013). "Fluorite in Granitic Pegmatites". Rocks & Minerals 88 (2): 134–147. doi:10.1080/00357529.2013.747913. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சும்மார்_பகூர்&oldid=3092585" இலிருந்து மீள்விக்கப்பட்டது