சுரிகை[சான்று தேவை] என்பது ஒரு கத்தி, குத்துவாள், வாள் அல்லது கூர் வடிவ சுரிகை ஆயுதமாகும், இது ஒரு துமுக்கி, தெறாடி அல்லது ஒத்த வேட்டெஃகத்தின் முகவாய் முடிவில் பொருந்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது, இதனால் சமரில் சுடுகலனானது தேவைக்கேற்ப ஈட்டி போன்ற ஆயுதமாக மாறுகிறது. 17 ஆம் நூற்றாண்டு முதல் முதலாம் உலகப் போர் வரை, இது காலாட்படை தாக்குதல்களுக்கான முதன்மை ஆயுதமாகக் கருதப்பட்டது. இன்று, இது ஒரு துணை ஆயுதமாக அல்லது கடைசி முயற்சியாக கருதப்படுகிறது.

1941 ஆம் ஆண்டில் பிரித்தானிய காலாட்படை வீரர் அவருடைய துமுக்கியோடு இணைக்கப்பட்ட பாங்கம் 1907 சுரிகையுடன்

வரலாறு தொகு

 
17 ஆம் நூற்றாண்டின் சீன முகவாய்-தாணித்தல் தெறாடியோடு ஒரு பிடுங்கல் சுரிகை இணைக்கப்பட்டுள்ளது சித்தரிக்கப்பட்டுள்ளது. ஆயுதத்தின் அறிவுறுத்தல் கையேடு மற்றும் விதப்புகள் மேலே காட்டப்பட்டுள்ளன.

ஆங்கிலேயரின் பயோனெட் என்ற சொல் 16 ஆம் நூற்றாண்டின் இரண்டாம் பாதியில் இருந்து வருகிறது, ஆனால் அந்த நேரத்தில் சுரிகைகள் வேட்டெஃகங்களின் முனைகளுக்கு பொருத்தக்கூடிய கத்திகளா, அல்லது வெறுமனே ஒரு வகை கத்தியா என்பது தெளிவாகத் தெரியவில்லை. எடுத்துக்காட்டாக, கோட்கிரேவின் 1611 அகராதியானது பயோனெட்டை  "ஒரு வகையான சிறிய தட்டையான குத்துவாள், எண்ணைப்பலகையில் தீட்டப்பட்ட கத்தி; அல்லது இடையில் தொங்கவிடத்தக்க ஒரு பெருமைமிகு கத்தி" என்று விரித்துரைக்கிறது. அதேபோல், 1655 ஆம் ஆண்டில் பியோர் பொரெல் என்பவர் ஒரு பயோனெட் என்று அழைக்கப்படும் ஒரு வகையான நீண்ட கத்தி பேயோனில் உண்டாக்கப்பட்டது என்று மட்டுமே எழுதியுள்ளார், ஆனால் மேலதிக விளக்கத்தை அளிக்கவில்லை.[1]

தமிழில் இதற்கான பெயரான 'சுரிகை' என்பது 1987 இன் பிற்பகுதியில் ஈழத்தில் விடுதலைப் புலிகளால் வழங்கப்பட்டது ஆகும். அக்கால கட்டத்தில் அவர்கள் இதனை 'சனியன்' என்றும் சுட்டினர்.

வகைகள் தொகு

பிடுங்கல் சுரிகை தொகு

 
17 ஆம் நூற்றாண்டு பிடுங்கல் சுரிகை

கோறைச் சுரிகை தொகு

 
ஒரு சுரிகையின் கோறை
 
19 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் கூர் கோறைச் சுரிகை

வாள் சுரிகைகள் தொகு

 
சேசுபொட் மரையாணி-இயக்க துமுக்கி மற்றும் வாள் சுரிகை.
 
சேசுபொடின் சுரிகை ஒன்றுசேர்த்தல் முறைமை

பன்நோக்கு சுரிகைகள் தொகு

 
பிரித்தானிய பாங்கம் 1875 சேணேவி குறுதுமுக்கிக்கான சினைடர் அரி-பின் சுரிகை(உறையுடன்)
 
யு.எஸ். சுரிகை மாதிரி1873 கொத்துக்கரண்டி
 
அமெரிக்க படைத்துறை சுரிகைகள்; மேலிருந்து கீழாக, அவை M1905, M1, M1905E1 வெட்டுமுனை சுரிகை(M1905 இன் வெட்டு விருத்து), மற்றும் M1 குறுதுமுக்கிக்கான M4 சுரிகை.


குறிப்புகள் தொகு

 

  1. H. Blackmore, Hunting Weapons, p. 50
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுரிகை&oldid=3607487" இலிருந்து மீள்விக்கப்பட்டது