சுலக்சனா (நடிகை)

இந்திய நடிகை

சுலக்சனா (Sulakshana, பிறப்பு: 01 செப்டம்பர், 1965) என்பவர் இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகையாவார். இவர் செப்டம்பர் 1, 1965 ஆம் ஆண்டு பிறந்தவர். இவர் தென்னிந்திய மொழிகளான தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் நடித்துள்ளார். காவியத் தலைவி திரைப்படம் மூலம் இரண்டரை வயதிலிருந்து நடிக்கத் தொடங்கினார். 1980 இல் சுபோதையம் என்ற தெலுங்குப் படத்தில் நடிகர் சந்திர மோகனோடு இணைந்து நடித்தார். இவர் தூறல் நின்னு போச்சு என்னும் திரைப்படம் மூலமாக தமிழில் அறிமுகமானர். இவர் 450க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

சுலக்சனா
பிறப்புஶ்ரீதேவி
செப்டம்பர் 1, 1965 (1965-09-01) (அகவை 58)
(ராஜமன்றி), ஆந்திரப் பிரதேசம்
பணிதிரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகை
செயற்பாட்டுக்
காலம்
1980 – 1994
2004-தற்போது

குடும்பம் தொகு

ம. சு. விசுவநாதன் மகனான கோபிகிருஷ்ணன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர்.[1]

ஆதாரங்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுலக்சனா_(நடிகை)&oldid=3329607" இலிருந்து மீள்விக்கப்பட்டது