சுவர் ஓவியம்

சுவர் ஓவியம் (mural) என்பது சுவரில், கூரையில் அல்லது பெரிய நிரந்தரமான மேற்பரப்பில் நேரடியாக மேற்கொள்ளப்படும் கலை வேலைப்பாடான ஓவியமாகும். சுவர் ஓவியத்தின் குறிப்பிடத்தக்க தனிச்சிறப்பான பண்பு என்னவெனில், அங்குள்ள இடவெளியின் கட்டட மூலக் கூறுகள் படத்துடன் இசைவாய் உள்வாங்கப்படுவதாகும்.

ஜீன் அன்ரேயின் கூரை ஓவியம், பிரான்சு

சில சுவர் ஓவியங்கள் சுவரில் இணைக்கப்பட்டுள்ள பாரிய திரைச் சீலைகள் மீது வரையப்படுகின்றன. இவ்வாறான ஓவிய வேலைகள் "சுவர் ஓவியம்" என அழைக்கப்படுவதில் கலை உலகில் மாறுபட்ட சில கருத்துக்கள் உள்ளன.[1] ஆயினும் இவ்வாறான நுட்பங்கள் 19ம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து பொதுவாகக் காணப்பட்டு வருகின்றன.[2]

குறிப்புகள் தொகு

வெளி இணைப்புக்கள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Murals
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுவர்_ஓவியம்&oldid=3766127" இலிருந்து மீள்விக்கப்பட்டது