சுவாச நோய் (Respiratory disease) என்பது ஒரு மருத்துவச் சொல்லாகும். இது உயர் உயிரினங்களில் சுவாசக்குழாய், தொண்டை, மூச்சுக்குழாயின் இரு பிரிவுகள், மூச்சு சிறுகுழாய், மூச்சுச் சிற்றறைகள், புடைச்சவ்வவு, புடைக்குழி மற்றும் சுவாசத்துடன் தொடர்புடைய நரம்புகள் மற்றும் தசைகள் போன்ற வாயு பரிமாற்றத்தை மேற்கொள்ளும் உறுப்புக்கள் மற்றும் திசுக்களைப் பாதிக்கும் நோயியல் நிலையில் உள்ளடக்கப்பட்டுள்ளது. சுவாசநோய்கள் சாதாரண சளி போன்ற சுயமாக கட்டுப்படுத்தும் நோய்களில் இருந்து பக்றீரியா நிமோனியா, நுரையீரல் இரத்தக்குழாய் அடைப்பு மற்றும் நுரையீரல் புற்றுநோய் போன்ற வாழ்க்கையை அச்சுறுத்தும் நோய்கள் வரை காணப்படுகின்றன.

சுவாச நோய்
Respiratory Disease
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள்
சிறப்புPulmonology
ஐ.சி.டி.-10J00.-J99.
ஐ.சி.டி.-9460-519
ம.பா.தD012140

நுரையீரலைப் பற்றிய ஆய்வு நுரையீரலியல் எனப்படும். நுரையீரல் நோயில் சிறப்பு பெற்ற வைத்தியர், நுரையீரல் நோய் சிகிச்சை வல்லுநர், மார்பு மருத்துவ வல்லுநர் அல்லது நெஞ்சுக்கூடு மருத்துவ வல்லுநர்  என அறியப்படுகின்றது.

நோய் ஏற்படுத்தும் உறுப்பு அல்லது திசு அடிப்படையில், அறிகுறிகளின் அடிப்படையில், நோய் ஏற்படும் காரணங்களின் அடிப்படையில் போன்ற பல்வேறு வழிகளில் சுவாசநோய்கள் வகைப்படுத்தப்படுகின்றன.

நுரையீரல் அழற்சி நோய் தொகு

இவ்நோயானது உயர் அழுத்த வெள்ளணுக்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் வகைப்படுத்தப்படும். ஈளைநோய், நீர்மத்திசு அழற்சி, வளித்திசுப்படுத்தல், நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் அல்லது கடுமையான மூச்சுத்திணறல் நோய் என்பன நுரையீரல் அழற்சி நோயின் உதாரணங்களாகும். [1] ஈளைநோயானது கொடிய நுரையீரல் நோய்களில் ஒன்றாகும். ஈளைநோய் என்பது சுவாசப்பாதையில் ஏற்படும் தொற்றாகும். இது சுவாசக்குழாய் மற்றும் சுவாசப்பை சிறுகுழாயில் உள்ள மென்மையான தசைகளின் மீதான கட்டுப்பாட்டை இழக்க வழிவகுக்கின்றது. தூசு அல்லது புகை போன்றவற்றின் உறுத்தலுக்கு ஆளாகும் போது ஈளை நோயாளிகளின் சுவாசக்குழாயை சுற்றியுள்ள மென்மையான தசைகள் வேகமாகவும் பலமாகவும் சுருங்கத்தொடங்குவதுடன் சுவாசிப்பதற்கு சிரமத்தையும் ஏற்படுத்துகின்றது.[11]

கட்டுப்படுத்தக்கூடிய நுரையீரல் நோய்கள் தொகு

 
நாடு ரீதியாக(100,000 மக்களில்) சுவாச நோயின் வயது வாரியாக இயலாமை – சரி செய்யப்பட்ட வாழ்க்கை விகிதங்கள்.

சுவாசநோய் குறியுள்ள கைக்குழந்தைகளைப்போன்ற முழுமையற்ற நுரையீல் விரிவாக்கம் மற்றும் நுரையீரலின் விறைப்பு தன்மை அதிகரித்தல் போன்றவற்றினால் ஏற்படுத்தப்படும் கட்டுப்படுத்தக்கூடிய நுரையீரல் நோய்களாவன நுரையீரல் இணக்கத்தின் அடிப்படையில் வகைப்படுத்தப்படும் சுவாச நோய்களின் ஒரு வகையாகும்.[2]

சுவாசப்பாதை தொற்றுநோய்கள் தொகு

நோய் தொற்றானது சுவாசத்தொகுதியின் எந்த ஒரு பகுதியையும் பாதிக்கும். சுவாசப்பாதை தொற்று நோய்களாவன மேல் சுவாசக்குழாய் தொற்றுநோய்கள் மற்றும் கீழ் சுவாசக்குழாய் தொற்று நோய்கள் என பாரம்பரியமாக பிரிக்கப்படுகின்றது.

 மேல் சுவாசக்குழாய் தொற்றுநோய்கள்  தொகு

சாதாரண சளியானது மிகவும் பொதுவாக மேல் சுவாசக்குழாய் தொடர்பான நோய்களில் ஒன்றாகும். மேல்சுவாசக்குழாயின் உறுப்புக்களில் நோய் தொற்று காரணமாக ஏற்படும் காற்றுப்புரையழ்ற்சி, உள்நா அழற்சி, அடித்தொண்டை அழற்சி, குரல்வளை அழற்சி போன்றன மேல்சுவாசக்குழாய் தொற்றுநோய்கள் எனப்படுகின்றன.

கீழ் சுவாசக்குழாய் தொற்றுநோய்கள் தொகு

பற்றீரியா காரணமாக நுரையீரலில் ஏற்படும் தொற்றுநோயான நிமோனியாவானது  மிகவும் பொதுவான கீழ் சுவாசக்குழாய் தொடர்பான தொற்றுநோய்களில் ஒன்றாகும். காச நோயானது நிமோனியாவிற்கு முக்கிய காரணியாக உள்ளது. கடுமையான சுவாசநோய் மற்றும் நியுமோசிஸ்டிஸ் நிமோனியா போன்ற நோய்கள் வைரசு, பங்கசு போன்ற நோய்க்கிருமிகள் ஏற்படுத்தும் நிமோனியாவிற்கு உதாரணமாகும். நுரையீரல் கட்டி போன்ற பல சிக்கல்களை நிமோனியா உருவாக்குகின்றது. நோய் தொற்றினால் ஏற்படுத்தப்பட்ட நுரையீரல் கட்டியானது நுரையீரலில் உள்ள சுற்றுக்குழி அல்லது புடைக்குழி வரை பரவக்கூடியது.

வாய்ச்சுகாரதாரத்தில் உள்ள குறைபாடு கீழ் சுவாசக்குழாய் தொடர்பான நோய்க்கான காரணியாக அமையலாம். சமீபத்திய ஆய்வுகள் பசைநோயில் இருந்து பற்றீரியாக்கள் மூச்சுக்குழாயினுடாக சுவாசப்பையை சென்றடைவதாக கூறுகின்றன..[1][2]

வீரியம் மிக்க கட்டிகள் தொகு

கண்டுபிடிக்கப்பட்ட 15% அனைத்து புற்றுநோய்களுக்கும் 30% ஆன அனைத்து புற்றுநோய் இறப்பிற்கும் பொறுப்பாக உள்ள ஒரு முக்கிய சுகாதாரப்பிரச்சினை குறிப்பாக முதன்மையான நுரையீரல் புற்றுநோய் போன்ற சுவாசத்தொகுதியின் வீரியம் மிக்க கட்டிகளாகும். புகையிலை புகைப்பிடித்தல் பெரும்பான்மையான சுவாசக்தொகுதி புற்று நோய்கள் ஏற்படுவதற்கான காரணமாகும்.

சுவாசத்தொகுதி புற்று நோயின் முக்கிய உயிரணு வகைகளாவன

  • சிறிய உயிரணு நுரையீரல் புற்றுநோய்
  • சிற்றறை அல்லாத நுரையீரல் புற்றுநோய்
    • சுவாசப்பை நாளப்புற்றுநோய்
    • நுரையீரல் செதின் உயிரணு புற்றுநோய்
    • பெரிய உயிரணு நுரையீரல் புற்றுநோய்
  • பிற நுரையீரல் புற்றுநோய்கள் (குடல் மஞ்சள் கட்டி, மென்தசைகூர் அணுப்புற்றுநோய், தோலின் கரும் புற்றுநோய்)
  • நிணநீர் சுரப்பி புற்றுநோய்
  • தலை மற்றும் கழுத்துப்புற்றுநோய்
  • நுரையீரல் இடைத்தோற்புற்றுநோயானது எப்போதும் கல்நார் தூசியின் வெளிப்பாடு காரணமாக ஏற்படுகின்றது.

மேலதிகமாக பல புற்றுநோய்கள் இரத்த ஓட்டம் மற்றும் நுரையீரல் நாளம் வழியாக பரவலடைகின்றது என்பதனால் நுரையீரல் உள்ளே ஏற்படும் புற்றநோய் பரவல் பொதுவான ஒன்றாகும். மார்பகப்புற்றுநோயானது நேரடியாக உள்ளக பரவல் வழியாக அல்லது நிணநீர் முடிச்சின் வழியாக பரவலடைகின்றது. கல்லீரலிற்கு புற்றுநோய் பரவலடைந்த பின்பு பெருங்குடல் புற்றநோய் அடிக்கடி நுரையீரலிற்கு பரவலடைகின்றது. ஆண்மைச்சுரப்பி புற்றுநோய், சென்மவணு புற்றநொய் மற்றும் சிறுநீரக உயிரணு புற்றுநோய் என்பனவும் நுரையீரலிற்கு பரவலடைகின்றன.

சுவாசத்தொகுதிப்புற்றுநோய்க்கான சிகிச்சை புற்றநோய் வகையில் தங்கியுள்ளது. வேதியில் மருத்துவம் மற்றும் கதிரியக்க சிகிச்சை இணைந்து நுரையீரலின் ஒரு பகுதி (மடல் நீக்கம், பகுதி நீக்கம் அல்லது ஆப்பு வடிவில் வெட்டல்) அல்லது முழு நுரையீரலும் (நுரையீரல் நீக்கம்) அறுவைச்சிகிச்சை முறையில் நீக்கப்படுகின்றது. நுரையீரல் புற்றநோயில் இருந்து தப்பிப்பிழைப்பதற்கான வாய்ப்பானது ஒட்டுமொத்தமான 14 – 17% புற்றுநோய் கண்டறியப்படுகின்ற நேரத்தில் உள்ள புற்றுநோய் நிலை மற்றும் நுண் உடற்கூற்றில் மீதும் ஓரளவிற்கு தங்கியுள்ளது. நுரையீரல் புற்றுநோய் பரவுவதை சிகிச்சை எப்போதாவது முற்றிலும் குணமாக்கலாம் ஆனால் இது சில அரிய சூழ்நிலைகளில் மட்டும் நடைபெறுகின்றது.

தீங்கற்ற கட்டிகள் தொகு

தீங்கற்ற கட்டிகள் சுவாச நோய்க்கான அரிய காரணங்களாக உள்ளன. தீங்கற்ற கட்டிகளுக்கான உதாரணங்களாவன.

  • நுரையீரலின் முதிர்ந்த திசுவின் மிகையான வளர்ச்சி
  • நுரையீரலின் பிரிப்பு மற்றும் பிறவி ஊனமான சிஸ்டிக் சுரப்புக்கட்டி போன்ற பிறவி ஊனங்கள்

புடைக்குழிய நோய்கள் தொகு

புடைக்குழி நோய்கள் மேலே குறிப்பிட்டுள்ள நுரையீரல் இடைத்தோலியப் புற்றுநோயினுள் அடங்கும்.

புடைக்குழியினுள் உள்ள திரவமானது நுரையீரல் பாய்மச்சுரப்பு என அறியப்படுகின்றது. இந்த நோயானது இதயச் செயலிழப்பு மற்றும் கல்லீரல் இளைநார் வளர்ச்சி போன்ற நிலைமைகளில் திரவமானது இரத்த ஓட்டத்தில் இருந்து புடைக்குழிக்கு மாற்றமடைவதன் காரணமாக ஏற்படலாம். நோய் தொற்று, நுரையீரல் இரத்த குழாய் அடைப்பு, காசநோய், இடைத்தோலியப்புற்றுநோய் மற்றும் பிற நிலைமைகளினால் தானாகவே ஏற்படும் உட்தசை அழற்சி இவற்றிற்கு காரணமாக அமையலாம்.

சுவாசப்பையை சுற்றியுள்ள உட்தசையில் உள்ள துளையானது சுவாசப்பையில் உள்ள வளியை புடைக்குழியினுள் செல்ல அனுமதிக்கின்றது. இது சுவாசப்பை காற்று எனப்படுகின்றது. பாதிக்கப்பட்ட நுரையீரல் ஆனது காற்றுப்போன பலூன் போன்று நிலைகுலைகின்றது. பதற்ற நிலையில் ஏற்படும் நுரையீரல் காற்று, புடைக்குழியினுள் உள்ள காற்றானது தப்பிக்க முடியாத நிலையில் ஏற்படுகின்ற தீவிர நோய் வடிவமாகும். அதனால் நுரையீரலானது இதயம் மற்றும் இரத்த நாளங்களை அழுத்துவது வரை பெரிதாக வளர்கிறது. எனவே இது உயிருக்கு ஆபத்தான நிலையை ஏற்படுத்துகின்றது.

நுரையீரல் நாள நோய்கள் தொகு

நுரையீரல் நாள நோய்களாவன நுரையீரல் சுற்றோட்டத்தைப் பாதிக்கின்றது. உதாரணங்களாவன

  • நுரையீரல் இரத்தக்குழாய் அடைப்பு, இரத்த நாளத்தில் உள்ள இரத்த உறைவு உடைந்து இதயம் மற்றும் நுரையீரலில் உள்ள அறைகளினூடாக பயணிக்கின்றன.(இரத்தக்கட்டி அடைப்பு). பெரிய நுரையீரல் கட்டிகள் அபாயகரமானவை. இவை திடீர் மரணத்தை ஏற்படுத்துகின்றது. கொழுப்பு அடைப்பு(குறிப்பாக எலும்புகளில் ஏற்படும் காயத்தின் பின்பு ஏற்படுகின்றது.) பன்னீர் குடநீர் அடைப்பு(பிள்ளை பேற்று வலி மற்றும் பிள்ளைபேற்றின் சிக்கல்களின் உடன் ஏற்படுகின்றது), காற்று அடைப்பு(துளையிடும் மருத்துவ நடைமுறைகள் காரணமாக எற்படும் மருத்துவச் செனிமத்தினால் ஏற்படுகின்றது) போன்ற மற்றப் பொருட்களும் கட்டிகளாக இரத்தக் குழாயினூடாக நுரையீரலுக்குப் பயணிக்கின்றன. ஆனால் இவை மிகவும் அரிது.
  • நுரையீரல் தமனி உயர் அழுத்தம், இது நுரையீரல் தமனியில் உள்ள உயர்ந்த அழுத்தமாகும். இவை பொதுவாக காரணம் அறியப்படாத நோய்களாகும். ஆனால் இவை நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் போன்ற மற்றொரு நோயின் விளைவுகள் காரணமாக ஏற்படக்கூடும். இது இதயத்தின் வலது பக்கத்தில் திரிபு ஏற்படுத்தும் நிலைமைக்கு வழிவகுக்கின்றது.
  • நுரையீரல் வீக்கம், இது மூச்சுச் சிற்றறைகளினுள் உள்ள நுரையீரல் இரத்த நுண்குழாயில் இருந்து திரவம் கசிவதனால் ஏற்படுகின்றது. இது பொதுவாக குருதி அடைப்பு வழி இதயச் செயலிழப்புக்கு காரணமாக அமைகின்றது.
  • நுரையீரல் இரத்தக்கசிவு, நுரையீரலில் உள்ள இரத்த நுண்குழாயில் ஏற்படும் வீக்கம் மற்றும் சேதம் என்பவற்றின் விளைவாக மூச்சு சிற்றறையினுள் இரத்த கசிவு ஏற்படுகின்றது. இது இருமலினூடாக இரத்தம் வெளிவருவதற்கு காரணமாகலாம். தற்சார்பு ஏமக்கோளாறு காரணமாகவும் நுரையீரல் இரத்த கசிவு ஏற்படலாம்.

 பிறந்த குழந்தைகளில் ஏற்படும் நோய்கள்  தொகு

நுரையீரல் குறை வளாச்சி, சுவாச நோய்குறி போன்ற சுவாச நோய்களாவன பிறந்த குழந்தைகளைப் பாதிக்கலாம்.

நோய் கண்டறிதல் தொகு

ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட பின்வரும் சோதனைகளை செய்வதன் மூலம் சுவாசநோய்கள் கண்டறியப்படுகின்றன.

  • நுரையீரல் புடைக்குழியின் உடல் திசு ஆய்வு
  • இரத்தச்சோதனை
  • நுரையீரல் ஊடு சோதனை
  • மார்பு கதிர்படம்
  • கணனி வரைவி அலகீடு
  • சளி போன்ற சுரப்பில் இருக்கின்ற நுண்ணுயிர்களின் வாழ்க்கைமுறை
  • நுரையீரல் திரவத்தை கண்டறிவதற்கு மீயொலி ஸ்கேனிங் பயனுள்ளதாக இருக்க முடியும்.
  • நுரையீரல் இயக்க சோதனை
  • காற்றோட்டம் - மேற்பரவல் ஸ்கேன்.

தொற்று நோய் தொகு

சுவாச நோய் உலகம் முழுவதும் நோய் மற்றும் மரணத்தை ஏற்படுத்தும் ஒரு பொதுவான மற்றம் முக்கியமான காரணமாக உள்ளது. அமொpக்காவில் ஓவ்வொரு வருடமும் கிட்டத்தட்ட 1 பில்லியன் மக்களிற்கு பொதுவான சளி ஏற்படுகின்றது.[3] 2010ல் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில் அமெரிக்காவில் 18 வயதிற்கு குறைந்த சுமார் 6.8 மில்லியன் நோயாளிகளின் சுவாச கோளாறு காரணமான அவசர வருகைகள் இருந்தது கண்டறியப்பட்டது.[4] 2012;ம் ஆண்டு குழந்தைகள் அடிக்கடி வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கு சுவாச நிலைமகளே காரணமாக இருந்தது..[5]

பிரிட்டனில் சமார் 7 ல் 1 தனிநபர்கள் நாள்பட்ட நுரையீரல் நோய், ஈளை நோய், நாள்பட்ட சுவாச குழாய் அழற்சி மற்றும் திசுக்களில் காற்று பரவிய நிலை உள்ளடங்களான நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் என்பவற்றினால் பாதிக்கப்படுகின்றன.[6]

கனடாவில் சிகிச்சை பெறுவோரில் 10% ற்கும் ஏற்படும் இறப்புகளில் 16% ற்கும் சுவாசப் புற்றுநோய் உட்பட்ட சுவாசநோயகளே பொறுப்பாகும்.[7]

2011ல் அமொpக்காவில் செயற்கை சுவாசத்தின் ஆதரவுடன் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்வாங்கியவர்களில் 93.3ம% சுவாச நோயாளிகளாக இருந்தது.[8]

மேற்கோள்கள் தொகு

  1. "Respiratory Disease & Oral Health". unitedconcordia.com.
  2. American Academy of Periodontology,kpmjkk 2008
  3. "National Institutes of Health – common cold". பார்க்கப்பட்ட நாள் 2008-05-07.
  4. Wier, L. M.; Hao, Y.; Owens, P.; Washington, R. (May 2013). "Overview of Children in the Emergency Department, 2010". HCUP Statistical Brief #157. Agency for Healthcare Research and Quality. Rockville, MD.
  5. Witt WP, Wiess AJ, Elixhauser A (December 2014). "Overview of Hospital Stays for Children in the United States, 2012". HCUP Statistical Brief #186. Rockville, MD: Agency for Healthcare Research and Quality.{{cite web}}: CS1 maint: multiple names: authors list (link)
  6. "British Lung Foundation - Facts about ukinnam respiratory disease". பார்க்கப்பட்ட நாள் 2008-04-19.
  7. "Public Health Agency of Canada - Centre for Chronic Disease Prevention and Control Chronic Respiratory Diseases". பார்க்கப்பட்ட நாள் 2008-05-06.
  8. Barrett ML, Smith MW, Elizhauser A, Honigman LS, Pines JM (December 2014). "Utilization of Intensive Care Services, 2011". HCUP Statistical Brief #185. Rockville, MD: Agency for Healthcare Research and Quality.{{cite web}}: CS1 maint: multiple names: authors list (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுவாச_நோய்&oldid=3679638" இலிருந்து மீள்விக்கப்பட்டது