சுவா (பிஜி)

பிஜி நாட்டின் தலை நகரம்

சுவா (ஆங்கில மொழி: Suva) பிஜி நாட்டின் தலைநகரமும் நசினுவிற்குப்பிறகு அந்நாட்டின் இரண்டாவது பெரிய நகரமும் ஆகும். இது விட்டி லெவு தீவின் தென்கிழக்குக் கரையில் அமைந்துள்ளது.

சுவா
सुवा
பிஜியின் தலைநகரம்
Suva central business district
Suva central business district
குறிக்கோளுரை: Valataka na Dina (Fight for the Right)
பிஜியின் நகரம் சுவா
பிஜியின் நகரம் சுவா
நாடுபிஜி பிஜி
தீவுவிடி லிவு
Divisionமத்திய பிரிவு பிஜி
அரசு
 • வகைசுவா நகர சபை
பரப்பளவு
 • நகரம்2,048 km2 (790.5 sq mi)
மக்கள்தொகை (2009)
 • நகரம்88,271
 • அடர்த்தி43/km2 (110/sq mi)
 • நகர்ப்புறம்175,399
நேர வலயம்1200 GMT (ஒசநே+12)
இணையதளம்www.suvacity.org

2007 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி சுவாவின் மக்கள்தொகை 85,691.[1] சுவாவின் புறநகர்ப்பகுதிகளை உள்ளிட்ட சுவா பெருநகர்ப் பகுதி, லாமி, நசினு மற்றும் நவுசோரி ஆகிய பகுதிகளின் மொத்த மக்கள்தொகை 330,000. இது பிஜி நாட்டின் மொத்த மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பங்காகும். லாமியை விடுத்து இந்தப்பெருநகர் வளாகம் சுவா-நவுசோரி நடைக்கூடம் எனப்படுகின்றது.

1877 ஆம் ஆண்டில் லோமாவிட்டி மாகாணத்தின் லெவுகாவில் இருந்து சுவாவை பிஜியின் தலைநகராக மாற்ற முடிவு செய்யப்பட்டது. காலனியின் நிர்வாகம் 1882 இல் லெவுகாவிலிருந்து சுவாவிற்கு மாற்றப்பட்டது. 2007 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, சுவா நகரத்தின் மொத்த மக்கள தொகை 85,691 ஆகும்.[2] 2007 ஆம் ஆண்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி சுயாதீன புறநகர்ப் பகுதிகள் உட்பட, கிரேட்டர் சுவா நகர்ப்புறத்தின் மக்கள் தொகை 172,399 ஆகும்.[2] சுவாவின் எல்லை நகரங்களான லாமி, நாசினு மற்றும் நவ்சோரி ஆகியவற்றுடன் மொத்த நகர்ப்புற மக்கள் தொகை 330,000 ஆகும். இது நாட்டின் மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கைக் கொண்டுள்ளது. பிஜியின் அரசியல், பொருளாதார மற்றும் கலாச்சார மையமாக சுவா திகழ்கின்றது. இந்நகரம் தென் பசிபிக் பொருளாதார மற்றும் கலாச்சார தலைநகராகவும் உள்ளது.

வரலாறு தொகு

1874 ஆம் ஆண்டில் பிரித்தானியா பிஜி தீவுகளை கைப்பற்றியதை தொடர்ந்து 1877 ஆம் ஆண்டில் லெவுகாவில் இருந்து சுவாவிற்கு தலைநகரை மாற்ற முடிவு செய்தனர். 1882 ஆம் ஆண்டில்  இந்த இடமாற்றம் உத்தியோகபூர்வமாக நடைப்பெற்றது. 1909 ஆம் ஆண்டு நகராட்சி அரசியலமைப்பு கட்டளைச் சட்டத்தின் பிரகடனத்தைத் தொடர்ந்து 1910 ஆம் ஆண்டில் சுவா 1910 இல் நகராட்சி அந்தஸ்தைப் பெற்றது. இந்த நகரம் ஆரம்பத்தில் ஒரு சதுர மைல் கொண்டதாக காணப்பட்டது. 1952 ஆம் ஆண்டில் முவானிகா, சம்புலா வார்ட்டுகள் இணைக்கப்பட்டு 13 சதுர கிலோமீட்டராக விரிவுபடுத்த பட்டது.[3] அதே ஆண்டில் அக்டோபரில் சுவா நகரமாக அறிவிக்கப்பட்டது. பின்னர் தமாவ மற்றும் கன்னிங்ஹாம் இணைக்கப்பட்டு நகரத்துடன் சேர்ந்து அவை கிரேட்டர் சுவா பகுதி எனப்படும் பெருநகரப் பகுதியை உருவாக்குகின்றன. தென் பசிபிக் போட்டிகள் மூன்றாவது முறையாக 2003 ஆம் ஆண்டில் இந்தகரத்தில்  நடைபெற்றது.

நிலவியல் தொகு

சுவா பிஜியின் தலைநகரம் மற்றும் தீபகற்பத்தில் கட்டப்பட்ட துறைமுக நகரமாகும். நவீன கட்டிடங்கள் மற்றும் பாரம்பரிய காலனித்துவ கட்டிடக்கலையின் கலவையின் பிரதிபலிப்புகள் இங்கு தென்படுகின்றன. இந்த நகரம் விடி லெவுவின் தென்கிழக்கு மூலையில் உள்ள லாக்கலா விரிகுடாவிற்கும், சுவா துறைமுகத்திற்கும் இடையில் ஒரு மலைப்பாங்கான தீபகற்பத்தில் அமைந்துள்ளது. சுவா பிஜியின் முக்கிய துறைமுக நகரம் மற்றும் வணிக, அரசியல் மையமாகும். சுவா ஏறத்தாழ கடலால் சூழப்பட்டு தீபகற்பத்தில் அமைந்திருந்தாலும் சுவாவிற்கு அருகிலுள்ள கடற்கரை பசிபிக் துறைமுகத்தில் 40 கிலோமீட்டர் (25 மைல்) தொலைவில் அமைந்துள்ளது. நகரத்தின் பழைய நாடாளுமன்ற கட்டிடங்கள் உட்பட, குறிப்பிடத்தக்க பகுதிகள் மீட்டெடுக்கப்பட்ட சதுப்புநில சதுப்பு நிலத்தில் கட்டப்பட்டுள்ளன.

காலநிலை தொகு

சுவா கோப்பன் காலநிலை வகைப்பாட்டின் கீழ் அயனமண்டல மழைக்காடு காலநிலையை கொண்டுள்ளது. சுவாவின் சராசரி ஆண்டு மழைவீழ்ச்சி 3,000 மிமீ (118.11 அங்குல) ஆகும். சுவாவின் வறண்ட மாதமான சூலையில் சராசரியாக 125 மிமீ (4.92 அங்குலம்) மழைவீழ்ச்சி பதிவாகின்றது. எவ்வாறாயினும் ஆண்டின் 12 மாதங்களிலும் கணிசமான அளவிலான மழைவீழ்ச்சியை பெறுகின்றது. அயனமண்டல மழைக்காடு காலநிலையை கொண்ட ஏனைய நகரங்களைப் போலவே ஆண்டு முழுவதுமான வெப்பநிலை ஒப்பீட்டளவில் நிலையானது. சராசரியாக அதிகபட்ச வெப்பநிலை சுமார் 28 °C (82 °F) ஆகவும், குறைந்தபட்ச சுமார் வெப்பநிலை 22 °C (72 °F) ஆகவும் காணப்படும். நவம்பர் முதல் மே வரை அதிக மழைப்பொழிவுடனும், ஜூன் முதல் அக்டோபர் வரை சற்று குளிரான மாதங்கள் கணிசமாக வறண்டு காணப்படுகின்றன.

கலாச்சாரம் தொகு

சுவா பன்முக கலாச்சார நகரமாகும். சுவாவின் மக்கள்தொகையில் பூர்வீக பிஜியர்கள் மற்றும் இந்தோ பிஜியர்கள் என்ற இரண்டு முக்கிய இனக்குழுக்கள் பெரும்பகுதியை ஆக்குகின்றனர்.  இந்நகர் ரோட்டுமன்ஸ், லாவன்ஸ், ரம்பியன்ஸ், காகசியர்கள் ஆகிய சிறுபான்மை இன மக்களைக் கொண்டுள்ளது. இங்கு பொதுவான மொழியாக ஆங்கிலமும், பிஜியன், இந்துஸ்தானி ஆகிய மொழிகளும் அந்தந்த சமூகங்களால் அவரவர் மொழிகளும் பேசப்படுகின்றன.

மேற்கோள்கள் தொகு

  1. "Fiji Islands Bureau of Statistics – Population and Demography". Statsfiji.gov.fj. Archived from the original on 19 அக்டோபர் 2012. பார்க்கப்பட்ட நாள் 10 October 2012.
  2. 2.0 2.1 "Fiji Islands Bureau of Statistics – Population and Demography". Archived from the original on 2012-10-19.
  3. Nath, Shyam; Roberts, John L.; Madhoo, Yeti Nisha (2010). "Saving Small Island Developing States: Environmental and Natural Resource Challenges". {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)CS1 maint: multiple names: authors list (link) CS1 maint: numeric names: authors list (link)

குறிப்புகள் தொகு

  • ''Fiji'', by Korina Miller, Robyn Jones, Leonardo Pinheiro – Travel – 2003, published by Lonely Planet, pages 139–141, ''details on Suva City.''
  • ''The Suva City Library'': A Brief History and Development, 1909–1980, by S Baksh – 1980
  • ''Pluralism and Social Change in Suva City'', Fiji, by Alexander Mamak – 1974, Thesis/dissertation; Ethnology (Fiji, Suva City); Suva City, Fiji Islands (Social conditions)
  • ''A History of the Pacific Islands'': Passages Through Tropical Time – Page 162, by Deryck Scarr 2001 – 323 pages.
  • 'Frommer's South Pacific'', by Bill Goodwin – Travel – 2004, pages 258–263

வெளியிணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுவா_(பிஜி)&oldid=3555173" இலிருந்து மீள்விக்கப்பட்டது