சுவெத்லேனா யிதோமிர்சுகாயா

சுவெத்லானா யாக்கொவ்லெவ்னா யித்தோமிர்சுகாயா (Svetlana Yakovlevna Jitomirskaya, பிறப்பு: யூன் 4, 1966) உக்ரைனிய கணிதவியலாளர் ஆவார். இவர் கணித இயற்பியலிலும் இயங்கியல் அமைப்புகளிலும் ஆய்வு செய்கிறார்.[1][2]

சுவெத்லானா யித்தொமிர்சுகயா
Svetlana Jitomirskaya
பிறப்புசூன் 4, 1966 (1966-06-04) (அகவை 57)
கார்கீவ், உக்ரைன், சோவியத் ஒன்றியம்
துறைகணிதம்
பணியிடங்கள்கலிபோர்னியா பல்கலைக்கழகம் (இர்வைன்)
கல்வி கற்ற இடங்கள்மாஸ்கோ அரசுப் பல்கலைக்கழகம்
ஆய்வு நெறியாளர்யாக்கோவ் சினாய்
விருதுகள்கணிதவியலில் ரூத் லிட்டில் பரிசு (2005)

யித்தோமிர்சுகயா சோவியத் ஒன்றியம், உக்ரைன், கார்கீவ் நகரில் பிறந்தவர். இவரது பெற்றோர்கள் இருவரும் கணிதவியல் பேராசிரியர்கள் ஆவர்.[1] சுவெத்லானா தனது முனைவர் பட்டத்தை மாசுக்கோ அரசுப் பல்கலைக்கழகத்தில் 1991 ஆம் ஆண்டில் யாக்கோவ் சினாய் என்பவரின் மேற்பார்வையின் கீழ் பெற்றார்.[3] பின்னர் கலிபோர்னியா பல்கலைக்கழகம் (இர்வைன்), கணிதத் துறையில் விரிவுரையாளராகப் பணியில் சேர்ந்தார். 1994 இல் இணைப் பேராசிரியராகவும், 2000 ஆம் ஆண்டில் பேராசிரியராகவும் பதவியுயர்வு பெற்றார்.[2]

2005 இல் இவருக்கு அமெரிக்கக் கணிதக் கழகத்தின் ரூத் லிட்டில் சாட்லர் பரிசு வழங்கப்பட்டது.[4]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 O'Connor, John J.; Robertson, Edmund F., "சுவெத்லேனா யிதோமிர்சுகாயா", MacTutor History of Mathematics archive, புனித ஆண்ட்ரூசு பல்கலைக்கழகம்.
  2. 2.0 2.1 Jitomirskaya's CV
  3. கணித மரபியல் திட்டத்தில் சுவெத்லேனா யிதோமிர்சுகாயா
  4. "2005 Satter Prize" (PDF), Notices of the American Mathematical Society, 52 (4): 447–448, April 2005.

வெளி இணைப்புகள் தொகு