சுவைதா ஆளுநரகம்

சிரியாவின் மாகாணம்

அஸ்-சுவைதா அல்லது அஸ்-சுவைதா கவர்னரேட் (As-Suwayda Governorate அரபு மொழி: مُحافظة السويداء‎ ) என்பது சிரியாவின் பதினான்கு ஆளுநரகங்களில் (மாகாணங்களில்) ஒன்றாகும். இது நாட்டின் தெற்கே உள்ள ஆளுநரகமாகும், இதன் பரப்பளவு 5,550 கி.மீ² ஆகும். இது வரலாற்று கால ஹவ்ரான் பிராந்தியத்தின் ஒரு பகுதியாக இருந்தது. இதன் தலைநகரம் மற்றும் முக்கிய நகரம் அல்-சுவைடா ஆகும். இதன் மக்கள் தொகையில் பெரும்பான்மையானவர்கள் துருஸ் மக்களாவர்.

அஸ் - சுவைதா ஆளுநரகம்
مُحافظة السويداء
ஆளுநரகம்
சிரியாவில் அஸ் - சுவைதா ஆளுநரகத்தின் அமைவிடம்
சிரியாவில் அஸ் - சுவைதா ஆளுநரகத்தின் அமைவிடம்
ஆள்கூறுகள் (அஸ் - சுவைதா): 32°48′N 36°48′E / 32.8°N 36.8°E / 32.8; 36.8
நாடு சிரியா
தலைநகரம்அஸ் - சுவைதா
மாவட்டங்கள்3
அரசு
 • ஆளுநர்அமர் இப்ராஹிம் ஆஷி
பரப்பளவு
 • மொத்தம்5,550 km2 (2,140 sq mi)
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்3,75,000[1]
நேர வலயம்கி.ஐ.நே. (ஒசநே+2)
 • கோடை (பசேநே)கி.ஐ.கோ. (ஒசநே+3)
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடுSY-SU
மொழிகள்அரபு

புவியியல் ரீதியாக ஆளுநரகமானது கிட்டதட்ட ஜபல் அல்-ட்ரூஸ் எரிமலைப் பகுதியை முழுமையாக கொண்டுள்ளது. மேலும் லெஜாஷ் எரிமலையின் கிழக்கு பகுதியையும், ஹரத் அல்-ஷமா பாலைவனத்தின் வறண்ட கிழக்கு புல்வெளிகளின் ஒரு பகுதியையும் கொண்டுள்ளது.

அஸ்-சுவைதா ஆளுநரக மக்களில் பெரும்பாலோர் வேளாண்மைத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். திராட்சை, ஆப்பிள், ஆலிவ், கோதுமை போன்றவற்றை பயிரிடுகின்றனர். ஆளுநரகத்தில் தெளிவாக வரையறுக்கப்பட்ட நான்கு பருவங்கள் (குளிர்காலம், வசந்த காலம், கோடை, இலையுதிர் காலம்) உள்ளன. இது அஸ்-சுவைதாவுக்கு நல்ல வானிலையை அளிக்கிறது. ஆளுநரகத்தில் பாஸ்லோனியர்கள், சுமேரியர்கள், ஃபீனீசியர்கள், ரோமானியர்கள் போன்றோரின் நாகரிகங்களுடன் தொடர்புடைய பல தொல்லியல் தளங்களைக் கொண்டுள்ளது.

மக்கள் வகைப்பாடும், மக்கள் தொகையும் தொகு

ஆளுநரகத்தின் மக்கள் தொகையானது சுமார் 375,000 (2011 மதிப்பீடு ) ஆகும். [2] சிரியாவில் துருஸ் மக்கள் பெரும்பான்மையாக உள்ள ஒரே ஒரு ஆளுநரகம் இது தான். [3] கணிசமாக கிழக்கு மரபுவழி திருச்சபை சிறுபான்மையினரும், தாரா ஆளுநரகம் மற்றும் சிரியாவின் பிற பகுதிகளிலிருந்து இடம்பெயர்ந்து வந்துள்ள சொற்ப ஆலவிலான முஸ்லிம் அகதிகளும் உள்ளனர். [4]

1980 களில் ஆளுநரகத்தின் மக்கள் தொகையில் துருஸ் மக்கள் 87.6%, கிறிஸ்தவர்கள் (பெரும்பாலும் கிரேக்க மரபுவழி திருச்சபை ) 11%, சுன்னி முஸ்லிம்கள் 2% இருந்தனர். [5] 2010 ஆம் ஆண்டில், அஸ்-சுவைடா ஆளுநரகத்தின் மக்கள் தொகையானது சுமார் 375,000 ஆகும். இதில் துருஸ் மக்கள் 90%, கிறிஸ்தவர்கள் 7% , சுன்னி முஸ்லிம்கள் 3% ஆவர். [6] குறைந்த பிறப்பு விகிதம் மற்றும் பிற நாடுகளை நோக்கி வெளியேறுதல் காரணமாக, அஸ்-சுவைதாவில் கிறிஸ்தவர்களின் விகிதம் குறைந்துவிட்டது. [7]

பெரும்பாலான மக்கள் ஆளுநரகத்தின் மேற்குப் பகுதிகளில், குறிப்பாக ஜபல் அட்-துருஸ் மலையின் மேற்கு சரிவுகளில் வாழ்கின்றனர். நாடோடி பெடோயின் பழங்குடியினர் மட்டுமே ஹரத் அல்-ஷமாவின் தரிசு பகுதியில் வாழ்கின்றனர்.

மாவட்டங்கள் தொகு

ஆளுநரகம் மூன்று மாவட்டங்களாக ( மனாதிக் ) பிரிக்கப்பட்டுள்ளது. மாவட்டங்கள் மேலும் 12 துணை மாவட்டங்களாக ( நவாஹி ) பிரிக்கப்பட்டுள்ளன:

நகரங்கள் மற்றும் கிராமங்கள் தொகு

 
சுவேதா நகரத்தின் வான்வழி காட்சி அக்டோபர் 2011

ஆளுநரகத்தில் 3 மாநகரங்கள், 124 கிராமங்கள் மற்றும் 36 குக்கிராமங்கள் உள்ளன. [2]

மாநகரங்கள் தொகு

  • ஷாபா
  • அல்-சுவைதா
  • சல்காத்

கிராமங்கள் தொகு

  • அல்-அஜைலத்
  • அல்-கரியா
  • அல்-கெஃப்ர்
  • அல்-குரையா
  • அரிகா
  • அர்-ரஹா
  • பிரெய்கி
  • டெய்ர் அலபன்
  • டமா
  • ஹோப்ரான்
  • காஃப்ர் அல்லுஹுஃப்
  • லஹேதா
  • எம்.எஸ்.ஏ.
  • முர்டுக்
  • கனாவத்
  • ரிமெட் அல்லுஹுஃப்
  • ரிமெட் ஹஸெம்
  • சம்மா அல் பரதன்
  • சம்மா அல்-ஹனிதாத்
  • சனிரி
  • ஷ்பெக்கி
  • வல்கா

குறிப்புகள் தொகு

  1. The Druze and Assad: Strategic Bedfellows
  2. 2.0 2.1 Statistics from "Archived copy". Archived from the original on 2007-03-29. பார்க்கப்பட்ட நாள் 2007-04-05.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  3. Country Data Page on Syria
  4. Shahba provides refuge for displaced Syrians பரணிடப்பட்டது 2014-04-13 at the வந்தவழி இயந்திரம். 28 September 2012.
  5. Pipes, Daniel (1990). Greater Syria: The History of an Ambition. Oxford University Press. பக். 151. https://archive.org/details/greatersyriahist00pipe_0. 
  6. The Druze and Assad: Strategic Bedfellows
  7. The Druze and Assad: Strategic Bedfellows
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுவைதா_ஆளுநரகம்&oldid=3087539" இலிருந்து மீள்விக்கப்பட்டது