செக்கனென்ரே தாவோ

.

செக்கனென்ரே தாவோ
பார்வோன் செக்கனென்ரே தாவோ
எகிப்தின் பாரோ
ஆட்சிக்காலம்கிமு 1560 அல்லது 1558 முதல் கிமு 1555 முடிய, எகிப்தின் பதினேழாம் வம்சம்
முன்னவர்செனக்தென்ரெ அக்மோஸ்
பின்னவர்காமோஸ்
  • Prenomen: Seqenenre
    Sqnj-n-rˁ
    He whom Ra makes brave / He who strikes like Ra[1]
  • M23L2
    N5O34
    N29
    N35
    N35
    A24
  • Nomen: Ta'a
    T3-ˁ3
    Thoth is great
  • G39N5
    X1
    O47
    O29
    D36
    Y1
  • Horus name: Khaemwaset
    Ḫˁj-m-W3st
    He appears in Thebes
  • G5
    N28
    Aa13
    R19t
    N24

துணைவி(யர்)முதலாம் அக்கோதேப், அக்மோஸ் இன்காபி, சித்ஜெகுதி
பிள்ளைகள்காமோஸ், முதலாம் அக்மோஸ், அரசி அக்மோஸ்-நெபர்தாரி, அக்மோஸ்-ஹெனுதெமிபேட், அக்மோஸ்-மெரிதமுன்
தந்தைமுதலாம் செக்கனென்ரே தாவோ
தாய்தேதிசெரி
அடக்கம்தேர் எல் பகாரி
நினைவுச் சின்னங்கள்தேர் எல் பல்லாஸ் நகரத்தில் நிறுவிய அரண்மனை மற்றும் கோட்டை உள்ளது
பார்வோன் செக்கனென்ரே தாவோயின் கோடாரி வெட்டுக் காயம் கொண்ட மம்மியின் தலைப்பகுதி

செக்கனென்ரே தாவோ (Seqenenre Tao (also Seqenera Djehuty-aa or Sekenenra Taa), எகிப்தின் இரண்டாம் இடைநிலைக்காலத்தில், பண்டைய எகிப்தின் ஆண்ட 17-ஆம் வம்சத்தின் எட்டாவது பார்வோன் ஆவார். இவர் பண்டைய எகிப்தை கிமு 1558/1560 முதல் கிமு 1558 முடிய ஆண்டார். இவரது மம்மியின் தலையில் கோடாரியால் தாக்கப்பட்ட வெட்டுக்காயம் கண்டுபிடிக்கப்பட்டது. இவர் பண்டைய அண்மை கிழக்கின் ஐக்சோஸ் இன மக்களுடன் போரிடும் போது, இவரது தலையில் கோடாரியால் தாக்கப்பட்ட வெட்டுக்காயம் ஏற்பட்டிருக்கலாம் தொல்லியல் ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். இவர் பார்வோன் செனக்தென்ரெ அக்மோஸ்-இன் மகனும், வாரிசும் ஆவார். இவரது மகன்களில் பின்னர் எகிப்தின் பார்வோன்களாக இருந்தவர்கள் காமோஸ் மற்றும் முதலாம் அக்மோஸ் ஆவார். செக்கனென்ரே தாவோயின் மம்மி தேர் எல் பகாரி தொல்லியல் களத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இம்மன்னர் தேர் எல் பல்லாஸ் நகரத்தில் அரண்மனை மற்றும் கோட்டையை நிறுவினார் என்பதை தொல்லியல் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது.

1881-இல் தேர் எல் பகாரி தொல்லியல் களத்தில் பார்வோன் செக்கனென்ரே தாவோயின் மம்மி கண்டுபிடிக்கப்பட்டது. எகிப்தின் 18 மற்றும் 19ஆம் வம்ச மன்னர்களான முதலாம் அக்மோஸ், முதலாம் அமென்கோதேப், முதலாம் தூத்மோஸ், இரண்டாம் தூத்மோஸ், மூன்றாம் தூத்மோஸ், முதலாம் ராமேசஸ், முதலாம் சேத்தி, இரண்டாம் ராமேசஸ் மற்றும் ஒன்பதாம் ராமேசஸ் ஆகியவர்களின் கல்லறையில் பார்வோன் செக்கனென்ரே தாவோயின் மம்மி கண்டுபிடிக்கப்பட்டது.

பார்வோன்களின் அணிவகுப்பு தொகு

3 ஏப்ரல் 2021 அன்று எகிப்திய அருங்காட்சியகத்திலிருந்து புகழ்பெற்ற 22 பார்வோன்களின் மம்மிகளை எகிப்திய பண்பாட்டின் தேசிய அருங்காட்சியகத்தில் வைப்பதற்கு சிறப்புடன் ஊர்வலமாக எடுத்துச் செல்லும் போது பார்வோன் செக்கனென்ரே தாவோவின் மம்மியும் எடுத்துச் செல்லப்பட்டது. [2][2]

மேற்கோள்கள் தொகு

  1. Clayton, Peter. Chronicle of the Pharaohs, Thames and Hudson Ltd, paperback 2006. p.94
  2. 2.0 2.1 Parisse, Emmanuel (5 April 2021). "22 Ancient Pharaohs Have Been Carried Across Cairo in an Epic 'Golden Parade'". ScienceAlert. https://www.sciencealert.com/22-ancient-pharaohs-have-been-carried-across-cairo-in-an-epic-golden-parade. 

மேலும் படிக்க தொகு

  • Gardiner, Sir Alan. Egypt of the Pharaohs. (Oxford, 1964).
  • Hayes, William C. Egypt: From the Death of Ammenemes III to Sequenenre II," in Volume 2, Chapter 2 of the "Cambridge Ancient History", Revised Edition (Cambridge, 1965).
  • Pritchard, James B. (Editor). Ancient Near Eastern Texts Relating to the Old Testament. Third Edition, with Supplement. (Princeton, 1969).

வெளி இணைப்புகள் தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=செக்கனென்ரே_தாவோ&oldid=3582680" இலிருந்து மீள்விக்கப்பட்டது