செஞ்சால் வனவிலங்கு சரணாலயம்


செஞ்சால் வனவிலங்கு சரணாலயம் (Senchal Wildlife Sanctuary) இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்திலுள்ள டார்சியிலிங் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்தியாவிலுள்ள வனவிலங்கு சரணாலயங்களில் மிகப்பழமையான இச்சரணாலயம் 1915 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. 38.6 கிலோமீட்டர்2 அல்லது 14.9 சதுரமைல் பரப்பளவில் இச்சரணாலயம் விரிந்து கிடக்கிறது. கடல் மட்டத்திலிருந்து சராசரியாக 1500 முதல் 2600 மீ உயரம் அல்லது 4900 முதல் 8500 அடி உயரத்தில் இச்சரணாலயம் அமைந்திருக்கிறது. குரைக்கும் மான், காட்டுப் பன்றி, இமாலய கருப்பு கரடி, சிறுத்தை, காட்டுப்பூனை பொதுவான செம்முகக்குரங்கு , அசாம் குரங்கு, இமாலய பறக்கும் அணில், போன்ற உயரமான மலைவாழ் விலங்குகள் அவற்றின் இயற்கை வாழ்விடங்களில் இருப்பது போலவே இங்கு காணப்படுகின்றன. இவை தவிர இச்சரணாலயத்தில் பறவைகளும் பெருமளவில் காணப்படுகின்றன. செஞ்சால் ஏரிகள் இரண்டு இச்சரணாயத்திற்கும் டார்சியிலிங் நகரத்திற்கும் தேவையான குடிநீரை அளிக்கின்றன.

செஞ்சால் வனவிலங்கு சரணாலயம்
Senchal Wildlife Sanctuary
செஞ்சால் வனவிலங்கு சரணாலயம், டார்சியிலிங்
அமைவிடம்டார்சியிலிங் மாவட்டம், மேற்கு வங்காளம், இந்தியா
பரப்பளவு38.6 km2 (14.9 sq mi)
நிறுவப்பட்டது1915

மேற்கோள்கள் தொகு