செஞ்சி நாயக்கர்கள்

செஞ்சி நாயக்கர்கள் (Nayaks of Gingee) தமிழ்நாட்டின் செஞ்சி நகரத்தை தலைநகராகக் கொண்டு கி பி 1508 முதல் 1649 முடிய ஆட்சி செய்தனர். முன்னர் விஜய நகரப் பேரரசின் செஞ்சி, தஞ்சாவூர் மற்றும் மதுரை போன்ற பகுதிகளின் ஆளுநர்களாக விளங்கினர். துவக்கத்தில் வடக்கே நெல்லூர் முதல் கொள்ளிடம் ஆறுவரையிலான பகுதிகள் செஞ்சி நாயக்கர்களின் ஆட்சியில் இருந்தது. பின்னர் விஜய நகர பேர்ரசின் ஆரவீடு மரபினர் வேலூரை தலைமை இடமாக கொண்டு ஆளத் தொடங்கியதும். நெஞ்சி நாயக்கரின் ஆட்சி எல்லையானது வாட்டகே பாலாறு, தெற்கே கொள்ளிடம் ஆறு இவற்றுக்கு இடைபட்ட பகுதியில் சுருங்கியது. விஜயநகரப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின்னர் மதுரை நாயக்கர்கள் மற்றும் தஞ்சை நாயக்கர்கள் தன்னாட்சியுடன் ஆட்சி புரிந்ததைப் போன்று செஞ்சி நாயக்கர் கிருஷ்ணப்ப நாயக்கர் 1509 முதல் தன்னாட்சியுடன் ஆட்சி செய்து வந்தார். பின்னர் இவரது வழித்தோன்றல்கள் செஞ்சியை கி பி 1649-இல் செஞ்சியை பிஜப்பூர் சுல்தான் கைப்பற்றும் வரை ஆண்டனர்.

செஞ்சி நாயக்கர்கள்
1509–1649
தலைநகரம்செஞ்சி
பேசப்படும் மொழிகள்தமிழ், தெலுங்கு
அரசாங்கம்முடியாட்சி
மன்னர் 
வரலாறு 
• தொடக்கம்
1509
• முடிவு
1649
முந்தையது
பின்னையது
சோழப் பேரரசு
[[விஜயநகரப் பேரரசு]]
அடில் ஷாகி வம்சம்
[[பிரித்தானிய இந்தியா]]

செஞ்சி நாயக்கர்கள் தொகு

  1. கிருஷ்ணப்ப நாயக்கர் (1509–1521)[1]
  2. சென்னப்ப நாயக்கர்
  3. கங்கம நாயக்கர்
  4. வேங்கட கிருஷ்ணப்ப நாயக்கர்
  5. வேங்கடராமா பூபால நாயக்கர்
  6. திரியம்பக கிருஷ்ணப்ப நாயக்கர்
  7. வரதப்ப நாயக்கர்
  8. இராமலிங்க நாயனி வாரு
  9. வேங்கட பெருமாள் நாயுடு
  10. பெரிய ராமபத்திர நாயுடு
  11. இராமகிருஷ்ணப்ப நாயுடு (- 1649)

வரலாற்றாய்வாளர் சி. எஸ். சீனிவாசாச்சாரி கூற்றுப்படி[2]

  1. வையப்ப நாயக்கர்
  2. கிருஷ்ணப்ப நாயக்கர்
  3. அச்சுத விஜய ராமச்சந்திர நாயக்கர்
  4. முத்தியாலு நாயக்கர்
  5. வெங்கடப்ப நாயக்கர்
  6. வரதப்ப நாயக்கர்
  7. அப்பா நாயக்கர்

செஞ்சி நாயக்கர் தோற்றம் தொகு

வரலாற்றாளர் சஞ்சய் சுப்ரமணியம் மற்றும் ப்ரென்னிக் கூற்றுப்படி கோனேரி செட்டி என்பவரின் மகனான துபாகி கிருஷ்ணப்ப நாயக்கர், செஞ்சியை தலைநகரமாகக் கொண்டு ஆண்ட நாயக்க மன்னர்களுள் முதலாமவர் என்கின்றனர்.[3] இதற்கு மாறாக வரலாற்றாளர் பர்டன் இசுடெய்ன் கூற்றுப்படி, கிருஷ்ணதேவராயர் படைத் தளபதியான வையப்ப நாயக்கரின் மகன் துபாகி கிருஷ்ணப்ப நாயக்கர் என்று குறிப்பிடுகிறார்.[4] எனினும் கோனேரி செட்டியும் வையப்ப நாயக்கரும் ஒரே நபராக இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

ஆட்சிப் பகுதிகள் தொகு

வட தமிழ்நாட்டின் தற்போதைய செஞ்சி வேலூர், சென்னை, திருவண்ணாமலை, புதுச்சேரி, நெல்லூர், சித்தூர், சந்திரகிரி ஆகிய பகுதிகள் செஞ்சி நாயங்காரக்களின் ஆளுகையில் இருந்தது. 16-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வேலூர்க் கோட்டையை இழந்தனர்.

வழித்தோன்றல் தொகு

செஞ்சியை ஆண்ட நாயக்க மன்னரான துபாகி கிருஷ்ணப்ப நாயக்கரின் வழித்தோன்றலான சங்கரைய நாயுடு, சென்னப்ப நாயக்கன் பாளையத்தின் ஜமீன்தாராகவும், சென்னை மாகாண சட்டப்பேரவை உறுப்பினராகவும் இருந்துள்ளார்.[5]

இதனையும் காண்க தொகு

மேற்கோளகள் தொகு

  1. Subrahmanyam, Sanjay (2001). Penumbral Visions: Making Polities in Early Modern South India. University of Michigan Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780472112166. https://books.google.co.uk/books?id=4Ju6z8PbTuAC. 
  2. Chidambaram S. Srinivasachari, தொகுப்பாசிரியர் (1943). A History of Gingee and Its Rulers. Annamalai University. பக். 78-84, 96, 121-122. https://books.google.co.in/books?id=1KE5AQAAIAAJ. 
  3. Burton Stein (1989). The New Cambridge History of India: Vijayanagara. Cambridge University Press. பக். 57–. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-521-26693-2. https://books.google.com/books?id=OpxeaYQbGDMC&pg=PA57. 
  4. Vuppuluri Lakshminarayana Sastri, தொகுப்பாசிரியர் (1920). Encyclopaedia of the Madras Presidency and the Adjacent States. University of Minnesota. பக். 453. https://books.google.co.in/books?id=Z2o_AQAAMAAJ. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=செஞ்சி_நாயக்கர்கள்&oldid=3905035" இலிருந்து மீள்விக்கப்பட்டது