செதேஷ்வர் புஜாரா

இந்தியத் துடுப்பாட்ட வீரர்

செதேஷ்வர் அரவிந்த் புஜாரா (Cheteshwar Arvind Pujara), பிறப்பு: சனவரி 25 1988)[1], இந்தியத் துடுப்பாட்ட அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் உள்ளூர் போட்டிகளில் சௌராட்டிரத்திற்காகவும் மற்றும் இந்திய தேசிய அணிக்காகவும் விளையாடியுள்ளார். வலது கை துடுப்பாட்டக்காரரான இவர் 2005 ஆம் ஆண்டு முதல் முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடி வருகிறார். அக்டோபர் 2010 இல் பெங்களூருவில் நடைபெற்ற தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் அறிமுகம் ஆனார்.[1]

செதேஷ்வர் புஜாரா
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்செதேஷ்வர் அரவிந்த் புஜாரா
பிறப்பு25 சனவரி 1988 (1988-01-25) (அகவை 36)
ராஜ்கோட், குசராத்து, இந்தியா
உயரம்1.79 m (5 அடி 10 அங்)
மட்டையாட்ட நடைவலது கை
பந்துவீச்சு நடைவலது கை நேர்ச்சுழல்
பங்குமட்டையாட்டம்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 266)9 அக்டோபர் 2010 எ. ஆத்திரேலியா
கடைசித் தேர்வு29 பெப்ரவரி 2020 எ. நியூசிலாந்து
ஒநாப அறிமுகம் (தொப்பி 198)1 ஆகத்து 2013 எ. சிம்பாப்வே
கடைசி ஒநாப19 சூன் 2014 எ. வங்காளதேசம்
ஒநாப சட்டை எண்16
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2005–தற்போதுவரைசவுராஷ்டிரா துடுப்பாட்ட அணி (squad no. 15)
2008–2010கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (squad no. 25)
2011–2013ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (squad no. 3)
2014கிங்ஸ் லெவன் பஞ்சாப் (squad no. 266)
2014டெர்பிஷயர் (squad no. 9)
2015யார்க்சியர் (squad no. 72)
2017நாட்டிங்காம்சைர் (squad no. 3)
2018யார்க்சியர் (squad no. 27)
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேது ஒபது முதது பஅ
ஆட்டங்கள் 77 5 203 103
ஓட்டங்கள் 5,840 51 15,771 4,445
மட்டையாட்ட சராசரி 48.66 10.20 53.64 54.20
100கள்/50கள் 18/25 0/0 50/60 11/29
அதியுயர் ஓட்டம் 206* 27 352 158*
வீசிய பந்துகள் 6 239 6
வீழ்த்தல்கள் 0 6 0
பந்துவீச்சு சராசரி 24.50
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- 0
சிறந்த பந்துவீச்சு 2/4
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
51/– 0/– 133/– 39/–
மூலம்: கிரிக்கின்ஃபோ, 15 திசம்பர் 2020

2010 ஆம் ஆண்டின் கோடைகாலத்தில் இந்தியா ஏ அணி இங்கிலாந்து நாட்டிற்குச் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது. இங்கிலாந்திற்கு எதிரான தொடரில் விளையாடும் வாய்ப்பினைப் பெற்றார். அந்தத் தொடரில் அதிக ஓட்டங்கள் எடுத்தார்.[2] ராகுல் திராவிட்மற்றும் வங்கிபுரப்பு வெங்கட சாய் லட்சுமண் ஆகியோரின் ஓய்விற்குப் பின் மத்திய வரிசையில் விளையாடும் வாய்ப்பினைப் பெற்றார்.[2]

2012 ஆம் ஆண்டில் நியூசிலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் விளையடும் வாய்ப்பினைப் பெற்று அதில் நூறு ஓட்டங்கள் அடித்தார். நவம்பர், 2012 இல் அகமதாபாத்தில் நடைபெற்ற இங்கிலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் இவர் முதல் முறையாக இருநூறு ஓட்டங்கள் அடித்தார்.[3] பின் மார்ச், 2013 இல் ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியிலும் இருநூறு ஓட்டங்கள் அடித்தார். இந்த இரண்டு போட்டிகளிலும் ஆட்டநாயகன் விருது வென்றார். மேலும் இரு போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்றது.[4]

2012 ஆம் ஆண்டில் நடைபெற்ற என். கே. பி. சால்வே சேலஞ்ஜர் கோப்பையில் விளையாடினார். இந்தத் தொடரில் அதிக ஓட்டங்கள் எடுத்தவர் பட்டியலில் முதலிடத்தில் இருந்தார்.[5] இதில் இரண்டு இருநூறுகள் மற்றும் ஐம்பது ஓட்டங்களும் அடங்கும். 11 தேர்வுத் துடுப்பாட்டங்களில் 18 ஆட்டப்பகுதிகளில் (இன்னிங்ஸ்) விளையாடி 1000 ஓட்டஙகளை எடுத்தார். இதன்மூலம் அதிவிரைவாக 1000 ஓட்டஙகளைக் கடந்த வீரர் எனும் சாதனையைப் படைத்தார். 2013 ஆம் ஆண்டின் சிறந்த வீரருக்கான பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் விருதினைப் பெற்றார்.[5]

பெப்ரவரி, 2017 இல் வங்காளதேசத் துடுப்பாட்ட அணிக்கு எதிராக போட்டியின் போது 1,605 ஓட்டங்கள் எடுத்தார்.[6] இதன்மூலம்முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் அதிக ஓட்டங்கள் எடுத்த இந்திய வீரர் எனும் சாதனையைப் படைத்தார். இதற்கு முன் 1964-1965 ஆம் ஆண்டுகளில் சந்து போர்டே என்பவர் 1,604 ஓட்டஙக்ள் எடுத்ததே சாதனையாக இருந்தது.[6] நவம்பர், 2017 இல் 12 ஆவது முறையாக முதல் தரத் துடுப்பாட்டத்தில் இருநூறுகள் எடுத்தார். இதன் மூலம் அதிக முறை இருநூறுகள் அடித்த விஜய் மேர்ச்சன்ட்டின் சாதனையை முறியடித்தார்.[7][8]தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளின் நிபுணர் என புஜாரா பரவலாக அறியப்படுகிறார்.

ஆரம்பகால வாழ்க்கை தொகு

செதேஷ்வர் புஜாரா சனவரி 25, 1988 இல் ராஜ்கோட், குசராத்தில் பிறந்தார். இவரின் தந்தை ஆரோக்கியதாஸ் ராமசாமி புஜாரா, சௌராஷ்டிர அணிக்காக ரஞ்சிக் கோப்பைப் போட்டிகளில் விளையாடியவர். தாய் ரீமா புஜாரா. இவரின் பெற்றோர் புஜாராவின் திறமையை சிறுவயதிலேயே அறிந்து அவரின் தந்தையின் மூலம் பயிற்சி அளித்தனர். இவர் பி பி ஏ இ பட்டம் பெற்றுள்ளார்.

சான்றுகள் தொகு

  1. 1.0 1.1 "Cheteshwar Pujara". பார்க்கப்பட்ட நாள் 14 September 2016.
  2. 2.0 2.1 Marks, Vic (16 November 2012). "India can build their future on Cheteshwar Pujara". The Guardian. Ahmedabad. பார்க்கப்பட்ட நாள் 4 December 2012.
  3. "Spinners strike after Pujara double ton". Wisden India. 15 November 2012 இம் மூலத்தில் இருந்து 16 டிசம்பர் 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131216010557/http://www.wisdenindia.com/match-report/pujara-yuvraj-extend-indias-dominance/35411. 
  4. "India vs Australia, 2nd Test at Hyderabad scorecard". Wisden India. 4 March 2013 இம் மூலத்தில் இருந்து 18 அக்டோபர் 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131018173322/http://www.wisdenindia.com/scorecard/India-v-Australia-Test-Series-2013/2nd-Test/India-vs-Australia/35648.html. 
  5. 5.0 5.1 The Guardian (13 December 2013). "Ashes captains Clarke and Cook both hit a ton and pick up an annual award". https://www.theguardian.com/sport/2013/dec/13/ashes-captains-michael-clarke-alastair-cook. பார்த்த நாள்: 13 December 2013. 
  6. 6.0 6.1 "Pujara breaks record for most runs in an Indian first-class season". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 9 February 2017.
  7. "Pujara back to old ways, scores 12th double-century". ESPN Cricinfo. 2 November 2017. http://www.espncricinfo.com/series/8050/report/1118651/day/2/. பார்த்த நாள்: 2 November 2017. 
  8. "Cheteshwar Pujara goes past Vijay Merchant's all-time double-ton record in FC cricket". Scroll.in. 2 November 2017. https://thefield.scroll.in/856417/cheteshwar-pujara-goes-past-vijay-merchants-all-time-double-ton-record-in-fc-cricket. பார்த்த நாள்: 2 November 2017. 

வெளியிணைப்புகள் தொகு

கிரிக்கின்ஃபோவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு: செதேஷ்வர் புஜாரா

"https://ta.wikipedia.org/w/index.php?title=செதேஷ்வர்_புஜாரா&oldid=3718871" இலிருந்து மீள்விக்கப்பட்டது