சென்டினல் மக்கள்

இந்தியாவில் உள்ள ஓர் இனக்குழு

சென்டினல் மக்கள் (Sentinelese, Sentineli, Senteneli, Sentenelese) தெற்கு அந்தமானில் உள்ள வடக்கு சென்டினல் தீவில் ஒரு சிறு கிராமத்தில் வாழ்ந்துவரும் பழங்குடியின மக்கள். வெளி உலகத் தொடர்பின்றி, வெளி உலக மக்களையும் பார்க்க விரும்பாமல் அந்தமான் தீவின் அடர்ந்த காடுகளில் வாழ்கின்றனர்.[1]

சென்டினல் பழங்குடியினர்
மொத்த மக்கள்தொகை
(ஏறத்தாழ 250
2001 மக்கட்தொகை கணக்கெடுப்புபடி: 39)
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
வடக்கு சென்டினல் தீவில் மட்டும், இந்தியா
மொழி(கள்)
அந்தமான் மொழிகளில் ஒன்றான சென்டினல் மொழி
சமயங்கள்
இதுவரை தெரியவில்லை
தொடர்புள்ள இனக்குழுக்கள்
அந்தமான் ஜாரவா பழங்குடியினர், ஒன்கே மக்கள், அந்தமானியப் பழங்குடிகள்
சென்டினல் பழங்குடி மக்களின் உருவ மரச்சிற்பம்
சென்ண்டினல் பழங்குடி மக்களின் உருவ மரச்சிறபம்
சென்டினல் பூர்விக குடிமகனின் உருவ மரச்சிற்பம்

இப் பழங்குடிமக்கள் வில் அம்புகளுடன் காட்டு விலங்குகளை வேட்டையாடி உண்டு வாழ்கின்றனர். செண்டினல் பழங்குடியின மக்கள் வெளி உலக மக்களிடம் தொடர்பு கொள்வதை மிகவும் வெறுக்கிறார்கள். 2004-ஆம் ஆண்டில் ஏற்பட்ட சுனாமி பேரலையால் இம்மக்கள் பாதிக்கப்படவில்லை. 2004-இல் மேற்கொள்ளப்பட்ட ஹெலிகாப்டர் மூலம் நடத்திய ஆய்வில் தற்போது செண்டினல் பழங்குடி மக்கள் 250 முதல் 500 வரை உள்ளதாக இந்திய அரசு கணக்கிட்டுள்ளது.[2]

சென்டினல் பழங்குடி மக்கள் அறுபதாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே அந்தமானில் வாழ்ந்து வருவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். செண்டினல் பழங்குடி மக்கள் பேசு மொழி, மற்ற அந்தமான் பழங்குடி மக்கள் பேசும் மொழிகளுக்கும் அதிக வேறுபாடு உள்ளது. செண்டினல் இன மக்கள் ஆப்பிரிக்காவின் கருப்பின மக்களைப் போல உருவமும் நிறமும் கொண்டுள்ளனர். செண்டினல் மக்களை இந்திய அரசு பழங்குடி மக்கள் பட்டியலில் வைத்துள்ளது.[3]

தொடர்புகள் தொகு

1967ல் திரிலோகநாத் பண்டிட் எனும் இந்திய மானிடவியல் அறிஞர் தலைமையிலான குழுவினர், முதன்முதலாக வடக்கு சென்டினல் தீவுக்குச் சென்று இம்மக்களுக்கு தேய்காய்களை வழங்கி நட்பு கொண்டு பழகியவர்.[4][5]

கிறித்தவ மதப்பரப்புனரின் இறப்பு (2018) தொகு

2018 நவம்பரில் ஜான் அலென் சா என்ற 26-வயது அமெரிக்க கிறித்தவ மதப்பரப்புனர்[6][7][8] சென்டினல் மக்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தவும் அவர்களைக் கிறித்தவத்திற்கு மதம் மாற்றவும் உள்ளூர் மீனவர்களின் துணையுடன் வடக்கு சென்டினல் தீவுக்கு சட்டவிரோதமாக செல்ல முயற்சி செய்தார்.[6][9][10][11] நவம்பர் 14 இல், இத்தீவிற்கு தன்னைக் கொண்டு செல்வதற்காக செல்வதற்கு போர்ட் பிளேர் நகர மீனவர்களுக்கு 25,000 பணத்தைக் கொடுத்துள்ளார்.[12] அதிகாரிகளின் கவனத்தைத் திசை திருப்பும் பொருட்டு, இவர் தனது பயணத்தை இரவிலேயே வைத்துக் கொண்டார்.[7]

நவம்பர் 15 இல், கரையில் இருந்து 500-700 மீட்டர்கள் தொலைவில் அவரை மீனவர்கள் கடலில் இறக்கி விட்டனர்.[13] மீனவர்கள் அவரை அங்கு செல்லவேண்டாம் என வற்புறுத்தியும், அவர் ஒரு சிறிய படகில் தான் கொண்டு வந்திருந்த விவிலிய நூலுடனும், சிறிய அன்பளிப்புப் பொருட்களுடனும் கரைக்குச் சென்றார். அங்கு அவரை தீவு மக்கள் அம்புகள் கொண்டு தாக்கியதை அடுத்து,[7][14] மீனவர்களின் படகிற்கு அவர் திரும்பினார்.[13] சில கிறித்தவப் பாடல்களை அவர் பாடியதாகவும், தீவு மக்கள் கோபமடைந்தார்கள் எனவும் அவர் எழுதியுள்ளார்.[15] அடுத்த நாள் அவர் அங்கு சென்ற போது,[7] அவரது சிறிய படகையும் உடைத்து விட்டார்கள், அவர் நீந்தி வந்து படகை அடைந்தார்.[14]

நவம்பர் 17 இல், தான் தீவில் இருந்து திரும்ப வரமாட்டேன் எனவும், மீனவர்களை சென்று விடுமாறும் கூறி, மூன்றாம் தடவையாகத் தீவுக்குச் சென்றார்.[16] தீவு மக்கள் அவரது கழுத்தைச் சுற்றி கயிறைக் கட்டி, அவரது உடலை இழுத்துச் சென்றதைத் தாம் கண்டதாகத் தெரிவித்த மீனவர்கள், பின்னர் அங்கிருந்து திரும்பி விட்டதாகவும் தெரிவித்தனர். அடுத்தநாள் அவர்கள் அங்கு திரும்பிச் சென்ற போது, ஜானின் உடல் கரையில் இருந்ததைப் பார்த்ததாகத் தெரிவித்தனர்.[14] இதனை அடுத்து, தடை செய்யப்பட்ட தீவுக்கு ஜானைக் கூட்டிச் சென்ற குற்றத்திற்காக காவல்துறையினர் ஏழு மீனவர்களைக் கைது செய்தனர்.[17][18][19][20][21]

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. B. K. Roy, தொகுப்பாசிரியர் (1990). Cartography for development of outlying states and islands of India: short papers submitted at NATMO Seminar, Calcutta, December 3-6, 1990. National Atlas and Thematic Mapping Organisation, Ministry of Science and Technology, Government of India. பக். 203. இணையக் கணினி நூலக மையம்:26542161. 
  2. Indian Census
  3. "List of notified Scheduled Tribes" (PDF). Census India. p. 27. பார்க்கப்பட்ட நாள் 15 December 2013.
  4. The man who spent decades befriending isolated Sentinelese tribe
  5. Andaman: Is it possible to befriend the Sentinelese? This man did
  6. 6.0 6.1 "'God, I don't want to die,' U.S. missionary wrote before he was killed by remote tribe on Indian island". தி வாசிங்டன் போஸ்ட். 21 November 2018. https://www.washingtonpost.com/world/2018/11/21/american-believed-dead-after-encounter-with-remote-indian-tribe-hostile-outsiders/. பார்த்த நாள்: 22 November 2018. 
  7. 7.0 7.1 7.2 7.3 "American is killed by bow and arrow on remote island in India". Seattle Times.
  8. "John Chau on Instagram: "John Allen Chau"". Instagram (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-11-21.
  9. "American killed on remote Indian island off-limits to visitors". Reuters. 21 November 2018. https://www.reuters.com/article/us-india-usa-murder/american-killed-on-remote-indian-island-off-limits-to-visitors-idUSKCN1NQ0QT. 
  10. "American 'killed by arrow-wielding tribe'" (in en-GB). BBC News. 2018-11-21. https://www.bbc.com/news/world-asia-india-46286215. 
  11. "US man killed by remote tribe was trying to spread Christianity" (in en). South China Morning Post. https://www.scmp.com/news/asia/south-asia/article/2174420/why-are-they-so-angry-us-man-john-allen-chau-killed-remote. 
  12. Banerjie, Monideepa (22 November 2018). "American Paid Fishermen Rs. 25,000 For Fatal Trip To Andamans". NDTV. https://www.ndtv.com/india-news/us-tourist-john-chau-paid-fishermen-rs-25-000-for-fatal-trip-to-sentinelese-island-1951387. 
  13. 13.0 13.1 "North Sentinel Island tribespeople believed to have killed trespassing US 'missionary'". CNN. 22 November 2018. https://edition.cnn.com/2018/11/21/asia/andaman-nicobar-us-missionary-killed-intl/index.html. பார்த்த நாள்: 22 November 2018. 
  14. 14.0 14.1 14.2 "US tourist killed by tribe in Andaman and Nicobar's North Sentinel Island, seven arrested in connection with murder - Firstpost". www.firstpost.com. பார்க்கப்பட்ட நாள் 2018-11-21.
  15. "‘God, I don’t want to die,’ U.S. missionary wrote before he was killed by remote tribe on Indian island". The Washington Post. 22 November 2018. https://www.washingtonpost.com/world/2018/11/21/american-believed-dead-after-encounter-with-remote-indian-tribe-hostile-outsiders/?utm_term=.ab2b643acf35. பார்த்த நாள்: 22 November 2018. 
  16. "US man killed by remote tribe was trying to spread Christianity" (in en). South China Morning Post. https://www.scmp.com/news/asia/south-asia/article/2174420/why-are-they-so-angry-us-man-john-allen-chau-killed-remote. 
  17. Sanjib (20 November 2018). "American National killed by Sentinelese Tribes of Andaman - Andaman Sheekha". Andaman Sheekha. Sheekha Bureau. http://www.andamansheekha.com/2018/11/20/american-national-killed-by-sentinelese-tribes-of-andaman/. பார்த்த நாள்: 21 November 2018. 
  18. "US man 'killed by arrow-wielding tribe'". BBC News. 21 November 2018. https://www.bbc.co.uk/news/world-asia-india-46286215. பார்த்த நாள்: 21 November 2018. 
  19. Roy, Sanjib Kumar. "American killed on remote Indian island off-limits to visitors" (in en-US). U.S.. https://www.reuters.com/article/us-india-usa-murder/american-killed-on-remote-indian-island-barred-to-visitors-idUSKCN1NQ0QT. 
  20. "Survival International statement on killing of American man John Allen Chau by Sentinelese tribe, Andaman Islands". Survival International. பார்க்கப்பட்ட நாள் 22 November 2018.
  21. "John Allen Chau: Who was US man killed in remote islands?". BBC. 21 November 2018. https://www.bbc.com/news/world-us-canada-46293221. பார்த்த நாள்: 22 November 2018. 

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சென்டினல்_மக்கள்&oldid=3791825" இலிருந்து மீள்விக்கப்பட்டது