சென்னை 600028 II

வெங்கட் பிரபு இயக்கத்தில் 2016 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

சென்னை 600028 II: செகண்ட் இன்னிங்ஸ் 2016 ஆம் ஆண்டு வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில் வெளியான தமிழ் திரைப்படம்[2][3]. இப்படம் 2007 ஆம் ஆண்டு வெளியான சென்னை 600028 என்ற தமிழ் திரைப்படத்தின் தொடர்ச்சியாக எடுக்கப்பட்ட இரண்டாம் பாகம்[4][5]. முதல் பாகத்தில் நடித்த நடிகர்கள் அவரவர் கதாபாத்திரங்களில் மீண்டும் நடித்தனர்[6]. இரண்டாம் பாகத்தின் கதைக்கேற்ப மேலும் புதிய கதாபாத்திரங்கள் உருவாக்கப்பட்டு அவற்றில் புதிய நடிகர்கள் நடித்தனர். இப்படத்தை எஸ். பி. பி. சரண், வெங்கட் பிரபு மற்றும் வி. ராஜலக்ஷ்மி தயாரித்தனர்[7][8]. முதல் பாகத்தைப் போல 2016 திசம்பர் 9 ஆம் நாள் வெளியான இரண்டாம் பாகமும் வணிகரீதியில் மிகப்பெரும் வரவேற்பையும் வெற்றியையும் பெற்றது[9][10][11][12].

சென்னை 600028 II: செகண்ட் இன்னிங்ஸ்
ஏ வெங்கட் பிரபு ரீயூனியன்
இயக்கம்வெங்கட் பிரபு
தயாரிப்புஎஸ். பி. பி. சரண்
வி. ராஜலட்சுமி
வெங்கட் பிரபு
கதைவெங்கட் பிரபு
(வசனம்)
கே. சந்துரு
எழிலரசு குணசேகரன்
(வசனம்)
மூலக்கதைசென்னை 600028
படைத்தவர் வெங்கட் பிரபு
திரைக்கதைவெங்கட் பிரபு
கதைசொல்லிவெங்கட் பிரபு
இசைபாடல்கள்
யுவன் சங்கர் ராஜா
பின்னணி இசை
யுவன் சங்கர் ராஜா
பிரேம்ஜி அமரன்
பவதாரிணி
நடிப்புஜெய்
சிவா
பிரேம்ஜி அமரன்
அரவிந்து ஆகாசு
நிதின் சத்யா
விஜய் வசந்த்
அஜய் ராஜ்
மஹத் ராகவேந்திரா
வைபவ்
ஒளிப்பதிவுஇராஜேஷ் யாதவ்
படத்தொகுப்புபிரவீன் கே.எல்.
கலையகம்பிளாக் டிக்கெட் கம்பெனி
கேபிடல் பிலிம் ஒர்க்ஸ்
விநியோகம்அபிசேக் பிலிம்ஸ்
வெளியீடுதிசம்பர் 9, 2016 (2016-12-09)
ஓட்டம்154 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
ஆக்கச்செலவு10 கோடி[1]
மொத்த வருவாய்24 கோடி [1]

கதைச்சுருக்கம் தொகு

முதல் பாகமான சென்னை 600028 படத்தையும் கதாப்பாத்திரங்களையும் படத்தின் தொடக்கத்தில் நினைவூட்டி, பின் காலமாற்றத்திற்கேற்ப கதாபாத்திரங்களின் வாழ்வில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் ஒவ்வொன்றாக விவரிக்கப்படுகிறது. அவர்களின் திருமண வாழ்க்கை, தொழில், குடும்பம் மற்றும் தற்போதைய அவர்களின் நிலை ஆகியவற்றை இயக்குனர் வெங்கட் பிரபு பின்னணிக் குரலில் சொல்கிறார். அதன்பின் இப்படத்தின் கதை துவங்குகிறது.

ரகுவிற்கு (ஜெய்) அவன் காதலித்த அனுராதாவுடன் (சானா அல்தாப்) திருமணம் முடிவாகிறது. திருமணம் தேனி மாவட்டத்திலுள்ள அனுராதாவின் சொந்த கிராமத்தில் நடைபெறுகிறது. அத்திருமணத்திற்கு அவன் நண்பர்கள் அனைவரும் தங்கள் மனைவி மற்றும் குழந்தைகளோடு வருகின்றனர். கார்த்திக் (சிவா) - செல்வி (விஜயலட்சுமி), கோபி (விஜய் வசந்த்) - பூனம் ( அஞ்சேனா கீர்த்தி), பழனி (நிதின் சத்யா) - உமா (கீர்த்திகா), ஏழுமலை (அஜய் ராஜ்) - ஸ்டெல்லா (மகேஸ்வரி சாணக்கியன்) ஆகியோர் தம்பதிகளாகவும், பிரம்மச்சாரியான சீனுவும் (பிரேம்ஜி அமரன்) வருகிறார்கள். அங்கு அவர்களுடைய பழைய நண்பனான அரவிந்தை (அரவிந்த் ஆகாஷ்) சந்திக்கிறார்கள். அரவிந்திற்கு உதவியாக இருப்பவன் ஊர்க்காவலன் (மஹத் ராகவேந்திரா).

அரவிந்திற்கும் அதே கிராமத்தைச் சேர்ந்த மருதுபாண்டி என்கிற மருதுவுக்கும் (வைபவ்) துடுப்பாட்ட விளையாட்டுப் போட்டிகளில் மோதல் ஏற்படுகிறது. மருதுவின் அணியை எதிர்த்து யாரும் வெற்றி பெற்றதில்லை. மருதுவை வீழ்த்துவதற்கான அரவிந்தின் முயற்சிகள் தோல்வியில் முடிகின்றன. எனவே இந்த முறை நடைபெறும் போட்டியில் வெற்றிபெற்றே ஆகவேண்டிய கட்டாயத்தில் இருக்கும் அரவிந்திற்கு அவனது பழைய நண்பர்களைப் பார்த்ததும் ஒரு திட்டம் தோன்றுகிறது. மருது அணியை வீழ்த்தி கோப்பையை வெல்ல தன் அணியில் இணைந்து விளையாடுமாறு நண்பர்களிடம் கோருகிறான். முதலில் அதற்கு மறுப்பு தெரிவிக்கும் நண்பர்கள் பின் போட்டியில் விளையாட சம்மதிக்கிறார்கள். தொடர்ந்து வெற்றி பெற்று அரையிறுதி வரை முன்னேறுகிறார்கள்.

தங்கள் வெற்றியைக் கொண்டாட இரவு விருந்து ஏற்பாடு செய்கிறார்கள். அப்போது மது அருந்திவிட்டு சொப்பனசுந்தரியுடன் (மனிஷா யாதவ்) ஆடிப்பாடி மகிழ்கிறார்கள். மறுநாள் காலை விழித்துப் பார்க்கையில் சொப்பனசுந்தரியின் கழுத்தில் தாலி இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைகிறார்கள். இரவு மது போதையிலிருந்த ரகு தாலி அணிவித்து அவளை மனைவியாக்கிக் கொண்டதாகவும் அதற்கு சாட்சியாக தன்னிடம் புகைப்படங்கள் இருப்பதாகவும் மிரட்டும் மருது, அந்தப் புகைப்படங்களை அவர்களிடம் காட்டுகிறான். அந்த புகைப்படங்களை அனுவின் வீட்டினர் பார்த்தால் ரகுவின் திருமணம் நின்றுவிடும் என்று மிரட்டும் மருது, அவர்களை தான் சொல்வதுபடி அடுத்த போட்டியில் விளையாட நிர்பந்திக்கிறான். ரகுவின் திருமணத்திற்காக மருது சொன்னபடி விளையாடி அவர்கள் தோல்வியை சந்திக்கிறார்கள். ஆனால் மருதுவிற்குத் தெரியாமல் அவனது நண்பன் கணேசன் (அபிநய் வட்டி) தான் திருமணம் செய்துகொள்ள விரும்பிய அனுவிற்கு ரகுவுடன் திருமணம் நடப்பதை பொறுத்துக்கொள்ள இயலாமல், திருமணத்தை நிறுத்தும் எண்ணத்தோடு அந்தப் புகைப்படங்களை அந்த கிராமத்திலுள்ள அனைவருக்கும் அனுப்புகிறான். ரகு - அனு திருமணம் நின்றுபோகிறது.

நின்று போன ரகுவின் திருமணத்தை மீண்டும் நடத்திவைக்க ரகுவை அழைத்துக் கொண்டு அவனது நண்பர்கள் தேனிக்கு வருகிறார்கள். அவர்களை மருது தடுக்கிறான். அப்போது அங்குவரும் அரவிந்த் அவர்கள் மீண்டும் விளையாட்டுப் போட்டியில் கலந்துகொள்ள வந்திருப்பதால் தன்னுடன்தான் தங்குவார்கள் என்று கூறுகிறான். போட்டியில் கலந்துகொண்டு மருதுவின் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றார்களா? ரகு - அனு திருமணம் நடந்ததா? என்பது மீதிக்கதை.

நடிகர்கள் தொகு

விமர்சனம் தொகு

விகடன்: நிஜமாகவே "தி பாய்ஸ் ஆர் பேக்"[13].

தமிழ் வெப்துனியா: மொத்தத்தில் ‘சென்னை 600028 இரண்டாம் இன்னிங்ஸ்’ கோப்பையைக் கைப்பற்றும் என்பதில் ஐயமில்லை[14].

ரவிச்சந்திரன் அசுவின் பாராட்டு: அற்புதமான படம். சென்னை 28 என் வாழ்க்கையை முழுவதுமாக திரும்பிப்பார்க்க வைத்துவிட்டது. நானும் இப்படத்தில் பங்கெடுத்திருக்கலாம்[15].

தினமலர்: முதல் பாகம் நகரத்தில் கிரிக்கெட் விளையாடும் இளைஞர்களைப் பதிவு செய்ததைப் போல கிராமங்களில் கிரிக்கெட் விளையாடும் இளைஞர்களைப் பற்றி பதிவு செய்துள்ளது[16].

தினகரன்: யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசை, கதையோடு பயணிக்க உதவியிருக்கிறது[17].

மாலைமலர்: ராஜேஷ் யாதவ்வின் ஒளிப்பதிவு சென்னையையும் பசுமை நிறைந்த தேனியையும் சிறப்பாக படம்பிடித்துள்ளது[18].

குங்குமம்: நகைச்சுவை கலகலக்கும் ஆட்டம்![19]

தமிழ் சமயம். காம்: "சென்னை 600028 பாகம் இரண்டு' ரசிகனின் ரசனைக்கு ஏற்றது[20].

சினி உலகம்: வெங்கட் பிரபு சிறப்பாக திரைக்கதை அமைத்துள்ளார்[21].

வெளியீடு தொகு

படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமம் விஜய் தொலைக்காட்சி பெற்றுள்ளது[22].

இசை தொகு

படத்தின் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா[23][24].

வ.எண் பாடல் பாடகர்கள் காலநீளம்
1 தி பாய்ஸ் ஆர் பேக் யுவன் சங்கர் ராஜா, பவதாரிணி, வாசுகி பாஸ்கர், மதுரை சோல்ஜர் 3:50
2 நீ கிடைத்தாய் ஹரிசரண், சின்மயி 4:06
3 சொப்பனசுந்தரி கார்த்திக் ராஜா, வெங்கட் பிரபு, யுவன் சங்கர் ராஜா, பிரேம்ஜி அமரன் 3:43
4 இது கதையா சீன் ரோல்டன், கரேஷ்மா ரவிச்சந்திரன் 4:16
5 ஹவுஸ் பார்ட்டி செந்தில் தாஸ் 4:21
6 சொப்பன சுந்தரி (மாற்றிசை வடிவம்) கார்த்திக் ராஜா, வெங்கட் பிரபு, யுவன் சங்கர் ராஜா, பிரேம்ஜி அமரன் 4:34

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2019-02-04. பார்க்கப்பட்ட நாள் 2019-03-10.
  2. "சென்னை 28 - 2".
  3. "சென்னை 28 - 2".
  4. "சென்னை 28 - 2".
  5. "சென்னை 28 - 2".
  6. "சென்னை 28 - 2".
  7. "சென்னை 28 - 2 செய்தித்தொகுப்பு".
  8. "சென்னை 28 - 2".[தொடர்பிழந்த இணைப்பு]
  9. "பட வெளியீடு".
  10. "வெளியீடு".
  11. "சென்னை 28 - 2 செய்தித்தொகுப்பு".
  12. "வெற்றி விழா சந்திப்பு".[தொடர்பிழந்த இணைப்பு]
  13. "விமர்சனம்".
  14. "விமர்சனம்".
  15. "ரவிச்சந்திரன் அஸ்வின் பாராட்டு".
  16. "விமர்சனம்".
  17. "விமர்சனம்". Archived from the original on 2016-12-18. பார்க்கப்பட்ட நாள் 2019-03-10.
  18. "விமர்சனம்".
  19. "விமர்சனம்".
  20. "விமர்சனம்".
  21. "விமர்சனம்". Archived from the original on 2016-12-11. பார்க்கப்பட்ட நாள் 2019-03-10.
  22. "தொலைக்காட்சி உரிமம்".
  23. "இசை வெளியீடு".
  24. "இசை வெளியீடு".

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சென்னை_600028_II&oldid=3728773" இலிருந்து மீள்விக்கப்பட்டது