சென்லா (ஆங்கிலம்: Chenla; சீனம்: 真腊; கெமர்: ចេនឡា; வியட்நாமியம்: Chân Lạp) என்பது கம்போசம் என்ற கம்போடியா நாட்டில் தமிழர் வம்சாவளியினரால் தோற்றுவிக்கப்பட்ட ஓர் அரசாகும். பூனான் (Funan) அரசை வீழ்த்தி ஆட்சிக்கு வந்த சென்லா அரசு கிபி 525 முதல் கிபி 802 வரை ஆளுமையில் இருந்தது.[1]

சென்லா
Chenla
ចេនឡា
550–802
700 CE இல் தென்கிழக்காசியாவின் பிரதான நிலப்பகுதி
700 CE இல் தென்கிழக்காசியாவின் பிரதான நிலப்பகுதி
நிலைஇராச்சியம்
தலைநகரம்
பேசப்படும் மொழிகள்கெமர் மொழி; சமசுகிருதம்
சமயம்
இந்து, பௌத்தம்
அரசாங்கம்முடியாட்சி
வரலாற்று சகாப்தம்இடைக்காலம்
• பூனான் அடிமை இராச்சியம்
550
• சுயி அரசமரபு தூதரகம்
616/617
• விடுதலை
627
• சென்லா நீர்ப்பகுதி
c. 707
• சென்லா நிலப்பகுதி
c. 707
802
நாணயம்உள்நாட்டு நாணய்ம
முந்தையது
பின்னையது
பூனான்
கெமர் பேரரசு
தற்போதைய பகுதிகள்கம்போடியா
இலாவோசு
தாய்லாந்து
வியட்நாம்

ஒரு காலக்கட்டத்தில், சென்லா அரசு கம்போடியா, இலாவோசு, தென் தாய்லாந்து வரை பரவியிருந்தது. சென்லா அரசின் தலைநகரமாக இந்திரபுரி விளங்கியது. சென்லா அரசு இடைக் காலத்தில் கடல் அரசு (Water Chenla); நில அரசு (Land Chenla) என இரண்டாகப் பிரிந்ததாகச் சீன வரலாற்றுக் குறிப்புகள் முலம் தெரிய வருகின்றது.[2]

வரலாறு தொகு

சென்லாவின் தோற்றம் தொகு

 
வியட்நாம், லாங் ஆன் எனும் இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட சென்லா காலத்து புத்தர் சிலை

சென்லாவைப் பற்றிய பெரும்பாலான சீனப் பதிவுகள், (சென்லா பூனானைக் கைப்பற்றியது உட்பட), பொதுவாக சீன ஆண்டுக் குறிப்புகளை அடிப்படையாகக் கொண்டவை. சீனாவின் சுயி அரசமரபு வம்சத்தின் (Chinese Sui Dynasty) வரலாற்றில் சென்லா என்ற மாநிலத்தின் உள்ளீடுகள் உள்ளன.[3]

பூனான் இராச்சியத்தின் (Kingdom of Funan) அடிமை அரசாக இருந்த சென்லா, 616 அல்லது 617-ஆம் ஆண்டுகளில் சீனாவுக்கு தன் தூதர்களை அனுப்பிய பதிவுகள் உள்ளன. சென்லா சுதந்திரம் பெற்ற பிறகு, சென்லா ஆட்சியாளர் சித்ரசேன மகேந்திரவர்மன் (Citrasena Mahendravarman) பூனானை கைப்பற்றிய பதிவுகளும் உள்ளன.[4][5]

இந்திய கல்வெட்டு முறை தொகு

இந்திய செல்வாக்கு மண்டலம் (Indosphere); கிழக்கு ஆசிய கலாசார மண்டலம் (East Asian Cultural Sphere); ஆகிய இரண்டும் கடல் வர்த்தக வழிகளில் ஒன்றிணைந்த ஓர் இடத்தில் சென்லா அமைந்து இருந்தது. இதன் விளைவாக நீண்டகால சமூக - பொருளாதார மற்றும் கலாசாரத் தாக்கங்கள் ஏற்பட்டன.

அதன் தொடர்ச்சியாக, தென்னிந்திய பல்லவ வம்சம் (Pallava Dynasty) மற்றும் சாளுக்கிய வம்சம் (Chalukya Dynasty) ஆகிய அரச வம்சங்களின் கல்வெட்டு முறையும் (Epigraphic System) ஏற்றுக்கொள்ளப்பட்டது.

வால் காண்டேல் கல்வெட்டு தொகு

வியட்நாம் சுடுங் திரெங் (Stung Treng) மாநிலத்தின் வால் காண்டேல் எனும் இடத்தில் ஒரு கல்வெட்டு கிடைத்தது. அதன் பெயர் வால் காண்டேல் கல்வெட்டு (Val Kantel Inscription). அது ஒரு சமஸ்கிருதக் கல்வெட்டு.[6]

அந்தக் கல்வெட்டு வீரவர்மன் (Viravarman) எனும் ஆட்சியாளரின் பெயரைக் குறிப்பிடுகிறது. அவரின் தந்தையாரின் பெயர் சர்வபவுமா (Sarvabhauma) என்றும் குறிப்பிடுகிறது. அத்துடன் வீரவர்மன் தெய்வீக அரசாட்சியின் கருத்தை ஏற்றுக் கொண்டதாகவும்; அரிகரர் (Harihara) சிவபெருமான் நம்பிக்கையை நிலைநிறுத்தினார் என்றும் கூறுகிறது.

லிங்கபர்வத மலை தொகு

 
லாவோஸ், சம்பசாக் மாநிலம், பு காவோ லிங்கபர்வத மலை

தெய்வீக அரசாட்சி அதிகாரத்தின் கீழ் வீரவர்மனின் வாரிசுகள் தெய்வீகச் செயல்பாடுகளைத் தொடர்ந்தனர். அந்த வகையில் அரசியல் மற்றும் மத அதிகாரங்களுக்கு இடையே உள்ள தொடர்பு பற்றிய கருத்துகளை வெளிப்படுத்தினர் என்றும் அந்தக் கல்வெட்டு குறிப்பிடுகின்றது.[7]

706-ஆம் ஆண்டிற்குப் பிறகு, சென்லா நாடு இரண்டாகப் பிரிக்கப்பட்டு நில சென்லா (Land Chenla) என்றும்; நீர் சென்லா (Water Chenla) என்றும் ஆட்சி செய்யப்பட்டதாக நியூ புக் ஆப் டாங் (New Book of Tang) எனும் நூல் கூறுகிறது.[8]

இதுவரையிலும் கிடைத்த அனைத்துச் சான்றுகளும் சென்லா இராச்சியத்தின் நிர்வாக மையம் லாவோஸ், சம்பசாக் மாநிலம், (Champasak Province), பு காவோ (Phu Kao) - லிங்கபர்வதத்தில் (Lingaparvata) (லிங்கத்தின் மலை) அமைந்திருக்க வேண்டும் எனும் கருத்தை ஆதரிக்கின்றன. இந்த இடம் ஒரு காலத்தில் சம்பா நாகரிகத்திற்கு (Champa Civilization) சொந்தமான இடமாக இருந்தது.

லிங்கபர்வதம் கோயில் தொகு

சீனாவின் சுயி அரசமரபு வம்சத்தின் (Chinese Sui Dynasty) வரலாற்று ஏடுகள் லிங்கபர்வதா மலையைப் பற்றி குறிப்பிடுகின்றன. லிங்-சியா-போ-போ (Ling-Jia-Bo-Po) அல்லது லிங்கபர்வதா (Lingaparvata) என்ற மலைக்கு அருகில் சென்லா அரச இல்லம் இருந்ததாக அந்த சீனப் பதிவுகள் அடையாளப் படுத்துகின்றன.

லிங்கபர்வதா மலையின் உச்சியில் கட்டப்பட்ட கோயில் வாட் பாவு (Vat Phou) அல்லது லிங்கபர்வதம் கோயில் ஆகும். கெமர் மொழியில் வாட் (Vat) என்பது கோயில் என்று பொருள்படும். இது ஒரு கெமர் இந்துக் கோயில் (Khmer Hindu Temple). இந்தக் கோயில் இப்போது லாவோஸ் நாட்டில் உள்ள பூ காவோ மலையின் (Mount Phu Kao) அடிவாரத்தில் அமைந்துள்ளது.

சென்லா வீழ்ச்சி தொகு

700-ஆம் ஆண்டுகளில் சென்லாவில் ஏற்பட்ட உள் பிளவுகள்; மற்றும் வெளிப்புற தாக்குதல்களின் விளைவுகளால் சென்லா ஆட்சி வீழ்ச்சி அடையத் தொடங்கியது. வெளிப்புற தாக்குதல்கள் என்பது இங்கே ஜாவாவின் சைலேந்திர வம்சத்தின் (Shailendra Dynasty) மூலமாக வந்த வெளிப்புறத் தாக்குதல்களைக் குறிப்பிடுவதாகும்.

இறுதியில் சைலேந்திர வம்சம் சென்லாவைக் கைப்பற்றியது; இரண்டாம் ஜெயவர்மனின் அங்கோர் இராச்சியத்தின் (Angkor Kingdom) கீழ் சென்லாவை இணைத்தது.

சுடோக் காக் தோம் கல்வெட்டு தொகு

1053-ஆம் ஆண்டு சுடோக் காக் தோம் கல்வெட்டு (Sdok Kak Thom Inscription) பதிவுகளில் இரண்டாம் செயவர்மன் பற்றிய தகவல்கள் உள்ளன. அந்தக் கல்வெட்டில் இரண்டாம் செயவர்மன்; அவரின் மகன் இந்திரயுதா (Indrayudha); இருவரும் இணைந்து 790-ஆம் ஆண்டில் சம்பா இராணுவத்தை (Cham Army) தோற்கடித்தனர் என்று பதிவாகி உள்ளது.

பின்னர் அவர்கள் தொன்லே சாப் ஏரியின் (Tonle Sap) வடக்கே சென்றனர். அங்கு அரிகரலயா (Hariharalaya) என்ற நகரத்தை நிறுவினர். இந்த நகரம் அங்கோர் (Angkor) நகரில் இருந்து 15 கிலோமீட்டர் தெற்கே உள்ளது.[9]

சென்லா அரசர்கள் தொகு

உருத்திரவர்மன் தொகு

சென்லா அரசு கம்போசத்தின் கடைசி பூனான் அரசர் உருத்திரவர்மன் (Rudravarman) என்பவரால் நிறுவப்பட்டது. இவர் செயவர்மன் கௌதின்யன் (Jayavarman Kaundinya) எனும் பூனான் அரசரின் மூத்த மகனாவார். உருத்திரவர்மன் ஆட்சிக்கு வந்த பின்னர் இந்திரபுரியைத் தலைநகராக உருவாக்கினார்.

கி.பி. 514-இல், ருத்திரவர்மன் தன் தம்பி குணவர்மனை (Gunavarman); ஓர் ஆட்சி அதிகாரப் போட்டியின் காரணமாகக் கொன்றார். உருத்திரவர்மனின் மகன்கள் சம்பா நாட்டுக்கு எதிரான போரில் இறந்தனர்.[2]

குலபிரபாவதி தொகு

கி.பி. 517-ஆம் ஆண்டு வரையில், உருத்திரவர்மன் தன் மாற்றாந்தாய் ராணி குலப்பிரபாவதியுடன் (Queen Kulaprabhavati) அதிகாரப் போராட்டத்தில் ஈடுபட்டார். ராணி குலப்பிரபாவதிக்கு உருத்திரவர்மனின் எதிரிகள் ஆதரவு அளித்து வந்ததனர்.[10]

இதனால் ருத்திரவர்மன் பல்லவ நாட்டில் இருந்து வந்து மருமகனான பீமவர்மனை அடுத்த அரசனாக்கினார். இந்த பீமவர்மன் பாவவர்மன் (Bhavavarman I) என்றும் அறியப்பட்டார். பீமவர்மன் குணவர்மனின் பேரனும் வீரவர்மன் (Viravarman) என்பவரின் மகனுமான சித்திரசேனன் உதவி கொண்டு சம்பா இராச்சியத்தை வீழ்த்தினர்.

சித்திரசேனன் தொகு

முதலில் நட்பாக இருந்த சித்திரசேனன் பின் நாளில் தனது அரசு உரிமையை வாள் கொண்டு பீமவர்மன் இடம் இருந்து பெற்றான். சித்திரசேனனுக்கு பாதி நாடே வழங்கப்பட்டது, சித்திரசேனன் மகேந்திரவர்மன் என்ற பெயர் கொண்டு அரசேறினான்.

இதன் பின் சென்லா அரசு நீர் அரசு நில அரசு என இரண்டானது. பீமவர்மன் வழி வந்தவர்கள் நில அரசையும் மகேந்திரவர்மன் வழி வந்தவர்கள் நில அரசையும் ஆண்டனர் என சீன வரலாற்று புத்தகங்கள் தெரியப் படுத்துகின்றன.

நந்திவர்மன் தொகு

 
ஈசானபுரத்தில் சிதைந்த ஒரு கோட்டை வாயில்

பீமவர்மன் வழி வந்த கடவேச அரிவர்மனின் நான்காம் மகன் பரமேசுவரவர்மனே தமிழகத்தில் பல்லவன் இரண்டாம் பரமேசுவரவர்மன் இறப்புக்கு பின்னர் வாரிசு இல்லாத காரணத்தால் அமைச்சர்களால் அழைத்து செல்லப்பட்டு நந்திவர்மன் என்ற பெயரில் அரசன் ஆனான்.

கடவேச அரிவர்மனின் மகன்கள் விசய அரசு உடனான போரில் இறக்க கடலரசு அரசர் சந்திரவர்னின் மகன் முதலாம் செயவர்மன் நாட்டை ஒன்றாக இணைத்து ஆண்டார். முதலாம் செயவர்மனின் மருமகன் பரமேசுவர்மனே இரண்டாம் செயவர்மன் என்ற பெயர் கொண்டு கெமர் அரசை நிறுவி சென்லா அரசை வீழ்த்தினர்.

நில அரசு தொகு

  • உருத்திரவர்மன் (கிபி 525-575)
  • பீமவர்மன் (பாவவர்மன்) - (கிபி 575-605) - (Bhavavarman I)
  • புத்தவர்மன் (கிபி 605-638)
  • ஆதித்யவர்மன் (கிபி 638-650)
  • இராண்யவர்மன் (கிபி 650-678)
  • கோவிந்தவர்மன் (கிபி 678-705)
  • செயவர்மன் (கிபி 705-764)
  • கடவேச அரிவர்மன் (கிபி 764-780)

(கடவேச அரிவர்மன் தன் நான்காம் மகன் பரமேசுவரவர்மனை; தமிழகத்தில் ஆண்டு வந்த பல்லவருக்கு வாரிசு இல்லாத காரணத்திற்காக அனுப்பி வைத்தார்)

கடலரசு தொகு

  • குணவர்மன் (அரசர் அல்ல)
  • வீரவர்மன் (அரசர் அல்ல) - (Viravarman)
  • மகேந்திரவர்மன் (கிபி 590 - 611)
  • முதலாம் ஈசானவர்மன் (கிபி 616–637) - (Isanavarman I)
  • இரண்டாம் மகேந்திரன் (கிபி 657-670)
  • இரண்டாம் ஈசானவர்மன் (கிபி 670-708)
  • இரண்டாம் பீமவர்மன் (கிபி 708-748)
  • சந்திரவர்மன் (கிபி 748-785)
  • முதலாம் செயவர்மன் (கிபி 785-802)

மேற்கோள்கள் தொகு

  1. Glover (2004), ப. 100.
  2. 2.0 2.1 Vickery (1994), ப. 6.
  3. Vickery (1994), ப. 3.
  4. Kiernan (2019), ப. 112.
  5. "Encyclopedia of Ancient Asian Civilizations by Charles F. W. Higham - Chenla - Chinese histories record that a state called Chenla..." (PDF). Library of Congress. பார்க்கப்பட்ட நாள் 13 July 2015.
  6. IC (1937–1966), ப. 28, Vol. IV.
  7. Lavy (2003), ப. 27.
  8. Sternstein (1964), ப. 8.
  9. Miksic & Yian 2016, ப. 269.
  10. Jacobsen, Trudy, Lost goddesses: the denial of female power in Cambodian history, NIAS Press, Copenhagen, 2008

நூல்கள் தொகு

  • Barth, Aguste (1903). "Inscription sanskrite du Phou Lokhon (Laos)". Album Kern; Opstellen Geschreven Ter Eere van H[endrik] Kern: 37–40. 
  • Coedes, Georges (1943). "Études Cambodgiennes XXXVI: Quelques précisions sur la fin de Fou-nan". Bulletin de l'École Française d'Extrême-Orient 43: 1–8. doi:10.3406/befeo.1943.5733. 
  • Dowling, Nancy (1994), What and Where was Chenla?, École française d'Extrême-Orient, Paris
  • Dowling, Nancy (2000). "New Light on Early Cambodian Buddhism". Journal of the Siam Society 88 (1&2): 122–155. 
  • Finot, Louis (1928). "Nouvelles inscriptions du Cambodge". Bulletin de l'École Française d'Extrême-Orient 28 (1): 43–80. doi:10.3406/befeo.1928.3116. 
  • Higham, Charles (2015). "At the dawn of history: From Iron Age aggrandisers to Zhenla kings". Journal of Southeast Asian Studies 437 (3): 418–437. doi:10.1017/S0022463416000266. 
  • Lavy, Paul A. (2003). "As in Heaven, So on Earth: The Politics of Visnu Siva and Harihara Images in Preangkorian Khmer Civilisation". Journal of Southeast Asian Studies (National University of Singapore) 34 (1): 21–39. doi:10.1017/S002246340300002X. https://www.academia.edu/2635407. பார்த்த நாள்: 23 December 2015. 
  • Lévy, Paul (1970). "Thala Bŏrivăt ou Stu'ṅ Trèṅ: sites de la capitale du souverain khmer Bhavavarman Ier". Journal Asiatique 258: 113–129. 
  • Pelliot, Paul (1903). "Le Fou-nan". Bulletin de l'École Française d'Extrême-Orient 3: 248–303. doi:10.3406/befeo.1903.1216. 
  • Pelliot, Paul (1904). "Deux itinéraires de Chine en Inde à la fin du VIIIe siècle". Bulletin de l'École Française d'Extrême-Orient 4: 131–413. doi:10.3406/befeo.1904.1299. 
  • Seidenfaden, Erik (1922). "Complément à l'inventaire descriptif des Monuments du Cambodge pour les quatre provinces du Siam Oriental". Bulletin de l'École Française d'Extrême-Orient 22: 55–99. doi:10.3406/befeo.1922.2912. 
  • Sternstein, Larry (1964). "An Historical Atlas Of Thailand". Journal of the Siam Society 3 (1–2). 
  • Vickery, Michael (1994), What and Where was Chenla?, École française d'Extrême-Orient, Paris
  • Wolters, O. W. (1974). "North-western Cambodia in the seventh century". Bulletin of the School of Oriental and African Studies 37 (2): 355–384. doi:10.1017/S0041977X00136298. 

மேலும் காண்க தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சென்லா&oldid=3683005" இலிருந்து மீள்விக்கப்பட்டது