சென்ஷோ 7 (Shenzhou 7) என்பது சீனாவின் விண்வெளிவீரர்களை ஏற்றிச் சென்ற மூன்றாவது விண்கலம் ஆகும். சீன விண்வெளி வீரர் விண்கலத்தை விட்டு விண்வெளியில் நடப்பதன் மூலம், விண்வெளியில் செயல்படுவது பற்றிய தொழில் நுட்பத்தைக் கைப்பற்றுவது, சென்ஷோ 7 விண்கலத்தின் முக்கிய கடமையாகும். தவிர, ஒரு செயற்கைக்கோளும் விண்கலத்துடன் விண்ணில் பறக்கும். செயற்கைக்கோள் மூலம் தரைக்கு தரவுகள் அனுப்பப்படும். திட்டப்படி, சென் ஷோ 7 விண்கலம் பூமிக்கு மேலே சுமார் 343 கிலோமீட்டர் உயரத்திலான சுற்றுவட்டப் பாதையில் பறக்கும்[1].

சென்ஷோ 7
Shenzhou 7
திட்ட விபரம்
திட்டப்பெயர்: சென்ஷோ 7
Shenzhou 7
பயணக்குழு அளவு:3
ஏவுதளம்:சியு சுவான் செயற்கைக்கோள் ஏவு மையம்
ஏவுதல்: செப்டம்பர் 25, 2008 21:10:04.988 (சீன நேரம்) (13:10:04.988 UTC)
இறக்கம்: செப்டம்பர் 28, 2008 17:00 சீன நேரம் (09:00 UTC)
கால அளவு:
தொடர்புள்ள திட்டங்கள்
முந்திய திட்டம்அடுத்த திட்டம்
சென்ஷோ 6சென்ஷோ 8

சீன விண்வெளிப்பயணத் திட்டத்தின் இரண்டாம் கட்ட நடவடிக்கையாக இவ்விண்கலம் ஏவப்பட்டது. மூன்று விண்வெளி வீரர்களுடன் இது 2008, செப்டம்பர் 25 இல் ஊள்ளூர் நேரப்படி இரவு 9:10 மணிக்கு வடமேற்கு சீனாவிலுள்ள சியு சுவான் செயற்கைக்கோள் ஏவு மையத்திலிருந்து செலுத்தப்பட்டது.[2].

விண்வெளியில் நடத்தல் தொகு

திட்டப்படி, சென்ஷோ 7 விண்வெளி வீரரான "சாய் சிகாங்" செப்டம்பர் 27 ஆம் நாள் பிற்பகல் 4.30 மணியளவில், விண்கலத்திலிருந்து வெளியே சென்று விண்வெளியில் ஏறக்குறைய 20 நிமிடத்தில் நடக்கும் நடவடிக்கையை மேற்கொள்ளுவார் என எதிர்பார்க்கப்படுகிறது[3].

மேற்கோள்கள் தொகு

  1. "சென்ஷோ 7 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது (சீன வானொலி)". Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2008-09-26.
  2. China manned mission to follow Olympics
  3. "சீன விண்வெளியின் நடவடிக்கை (சீன வானொலி)". Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2008-09-26.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சென்ஷோ_7&oldid=3555897" இலிருந்து மீள்விக்கப்பட்டது