செயின்ட் இலாரன்சு ஆறு

செயின்ட் இலாரன்சு ஆறு ( Saint Lawrence River, பிரெஞ்சு மொழி: Fleuve Saint-Laurent வட அமெரிக்க கண்டத்து நடுமையிலுள்ள பெரிய ஆறு. செயின்ட் இலாரன்சு ஆறு கிட்டத்தட்ட வடக்கு-கிழக்காக ஓடுகிறது. இது அமெரிக்கப் பேரேரிகளை அத்திலாந்திக்குப் பெருங்கடலுடன் இணைக்கிறது. பேரேரிகள் வடிநிலத்தின் முதன்மை வெளியேற்று நீர்வழியாகவும் உள்ளது. இது கனடிய மாகாணங்களான கியூபெக், ஒன்றாரியோ வழியாகவும் கனடா-ஐக்கிய அமெரிக்க பன்னாட்டு எல்லையின் கனடிய ஒன்றாறியோவிற்கும் ஐக்கிய அமெரிக்க மாநிலம் நியூ யோர்க்கிற்கும் இடைப்பட்டப்பகுதியிலும் பாய்கிறது. இதை அடிப்படையாகக் கொண்டே வணிகமய செயின்ட் இலாரன்சு கடல்வழி கட்டமைக்கப்பட்டுள்ளது.

செயின்ட் இலாரன்சு ஆறு
புளோவ் செயின்ட்-லாரன்ட், புளோவ் செயின்ட்-லாரன்ட், செயின்ட்-லாரன்சு ஆறு, புனித-லாரன்ட் ஆறு
River
அலெக்சாண்ட்ரியா விரிகுடா அருகே செயின்ட் இலாரன்சு ஆறு
பெயர் மூலம்: உரோமையின் புனித இலாரன்சு
நாடுகள் கனடா, ஐக்கிய அமெரிக்கா
மாகாணங்கள் ஒன்றாரியோ, கியூபெக்
மாநிலம் நியூ யோர்க்
உற்பத்தியாகும் இடம் ஒன்றாறியோ ஏரி
 - அமைவிடம் கிங்சுட்டன், ஒன்றாறியோ / வின்சென்ட் முனை, நியூ யோர்க்
 - உயர்வு 74.7 மீ (245 அடி)
கழிமுகம் புனித லாரன்சு வளைகுடா / அத்திலாந்திக்குப் பெருங்கடல்
 - elevation மீ (0 அடி)
நீளம் 500 கிமீ (310 மைல்) கழிமுகத்தைத் தவிர்த்து. கனடா. உள்ளடக்கினால் 1200 கிமீ.
வடிநிலம் 13,44,200 கிமீ² (5,19,000 ச.மைல்) [1]
Discharge for சகுயெனேய் ஆற்றைவிட குறைவானது
 - சராசரி [2]
செயின்ட் இலாரன்சு ஆறு/ பேரேரிகள் வடிநிலத்தின் நிலப்படம்
செயின்ட் இலாரன்சு ஆறு/ பேரேரிகள் வடிநிலத்தின் நிலப்படம்
செயின்ட் இலாரன்சு ஆறு/ பேரேரிகள் வடிநிலத்தின் நிலப்படம்

இந்தக் கடல்வழியின் செயின்ட் இலாரன்சு ஆற்றுப்பகுதி தொடர்ச்சியான கால்வாய் அல்ல; இது ஆற்றினுள் பல பயணிக்கக்கூடிய வழிகள் அடங்கியதாகும். ஆற்றில் பல தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன, ஆற்றங்கரையில் பல கால்வாய்கள் மூலம் விரைவோட்டப்பகுதிகளும் அணைகளையும் தவிர்க்கப்படுகின்றன. கனடாவில் பல தடுப்பணைகளை செயின்ட் இலாரன்சு கடல்வழி மேலாண்மை நிறுவனம் பராமரிக்கிறது; அமெரிக்கப் பகுதியில் செயின்ட் இலாரன்சு கடல்வழி மேம்பாட்டு நிறுவனம் நிர்வகிக்கிறது. இந்த இரு நிறுவனங்களும் இணைந்து இதனை "பெருவழி H2O" என விளம்பரப்படுத்துகின்றன.[3] மொண்ட்ரியாலிலிருந்து அத்திலாந்திக்கு வரையிலான ஆற்றுப்பகுதி கனடிய நிர்வாகத்தில் கியூபெக் துறைமுக கனடா போக்குவரத்தால் கட்டுப்படுத்தப்படுகிறது.

மேற்கோள்கள் தொகு

  1. Natural Resources Canada, Atlas of Canada - Rivers பரணிடப்பட்டது 2006-05-20 at the வந்தவழி இயந்திரம்
  2. Benke, Arthur C.; Cushing, Colbert E. (2005). Rivers of North America. Academic Press. பக். 989–990. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-12-088253-3. https://books.google.com/books?id=faOU1wkiYFIC&pg=PA989. பார்த்த நாள்: 21 March 2011. 
  3. "Archived copy". Archived from the original on 2014-11-06. பார்க்கப்பட்ட நாள் 2014-08-15.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)

வெளி இணைப்புகள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Saint Lawrence River
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=செயின்ட்_இலாரன்சு_ஆறு&oldid=3613182" இலிருந்து மீள்விக்கப்பட்டது