செல்மா லோவிசா லேகர்லாவ்

செல்மா லோவிசா லேகர்லாவ் (நவம்பர் 20, 1858 – மார்ச் 16, 1940) சுவிடனைச் சேர்ந்த ஆசிரியர். இவர் இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற உலகின் முதல் பெண்மணி. இவரின் சிறந்த படைப்பான நீலின் அற்புத சாகசங்கள் (The Wonderful Adventures of Nils) என்ற புத்தகம் குழந்தைகளுக்கிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

செல்மா லோவிசா லேகர்லாவ்
செல்மா லோவிசா லேகர்லாவ் 1909
செல்மா லோவிசா லேகர்லாவ் 1909
பிறப்பு(1858-11-20)20 நவம்பர் 1858
மார்பாக், வார்ம்லாண்ட், சுவீடன்
இறப்பு16 மார்ச்சு 1940(1940-03-16) (அகவை 81)
மார்பாக், வார்ம்லாண்ட், சுவீடன்
தொழில்எழுத்தாளர்
தேசியம்சுவீடன்
குறிப்பிடத்தக்க விருதுகள்நோபல் பரிசு

பிறப்பு தொகு

1858ம் ஆண்டு நவம்பர் மாதம் 20ம் நாள் சுவீடன் உள்ள வார்ம்லாண்ட் நகரில் எரிக் லூயிசே தம்பதிக்கு ஐந்தவது குழந்தையாக பிறந்தார். இவர் பிறக்கும் போதே இடுப்பில் காயத்துடன் பிறந்தார். சிறுவயதில் இரு கால்களின் இயக்கமும் பாதிக்கப்பட்டு பின்னர் சரியானது சிறு வயதிலிருந்தே புத்தகம் படிப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டார். 1884ல் அவர் தந்தை நோய்வாய்ப்பட்டு அவர்கள் வீடு விற்கப்பட்டதைத் தொடர்ந்து குடும்பம் வறுமையில் வாழ்ந்தது.

வாழ்கை தொகு

செல்மா 1882 முதல் 1885 வரை ஸ்டாக்ஹோமிலுள்ள ஆசிரியர் கல்லூரியில் பட்டம் பெற்றார்[1] . பின், 1885ல் லாண்ட்ஸ்குரோனாவில் பெண்கள் பள்ளியில் ஆசிரியையாகச் சேர்ந்தர். அதிகக் கல்வியறிவு இல்லாத போதும் சிறுவயதில் அவர் படித்த கதைப் புத்தகங்கள் அவருக்கு கைகொடுத்தது. அப்பள்ளியில் சிறந்த கதை சொல்லும் ஆசிரியையாக திகழ்ந்தார்.

இலக்கிய பயணம் தொகு

அவர் தன் முதல் நாவலைப் பள்ளியில் பணியாற்றிய போது எழுதத் தொடங்கினர். அதனை வெளியிட பிரெட்ரிகா லிம்நெல் என்ற பதிப்பாளர் உதவினார்[2]. அதை தொடர்ந்து அவர் எழுதிய முதல் நாவலான 'கோஸ்டா பெர்லிங்க்ஸ் சாகா' இலக்கிய வட்டாரத்தில் மிகவும் பேசப்பட்டது. 1895ல் ஆசிரியைப் பணியை துறந்து எழுத்துப்பணிக்குத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். இத்தாலி நாட்டுக்குச் சென்றவர் அங்கு கிறித்துவர்களுக்கும், சமுக அமைப்பாளர்களுக்கும் இடையே இருந்த பிராச்சனைகளை மையமாக கொண்டு 'கிருத்துவ எதிர்ப்பாளரின் அதிசியங்கள்' என்ற புத்தகத்தை எழுதினார்[3]. 1897ல் பாலென் நகருக்குச் சென்றவர் அங்கு வால்போர்க் ஒலேன்டர் என்பவரைச் சந்தித்தார். பெண்களின் முன்னேற்றத்திற்காக உழைத்த அவரைத் தன் உதவியாளராக வைத்துக் கொண்டார்.

விருதுகள் மற்றும் நினைவு தொகு

  • 904ம் ஆண்டு [சுவீடன்] இலக்கிய கழகத்தின் தங்கப் பதக்கம் பெற்றார்.
  • 1907ல் உப்சலா பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம்.
  • 1909ம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்றார்[4].
  • சுவிடன் இலக்கிய கழகத்தில் உறுப்பினரானார்.

இறப்பு தொகு

1904ம் ஆண்டு மார்ச் மாதம் 16ம் நாள் மரணமடைந்தார். அவர் வாழ்ந்த வார்ம்லாண்ட் இல்லம், இன்று அவருடைய நினைவிடமாக உள்ளது.

உசாத்துணை தொகு

  1.   "Lagerlof, Ottilia Lovisa Selma". Encyclopedia Americana. 1920. 
  2. Munck, Kerstin (2002), "Lagerlöf, Selma", glbtq.com, archived from the original on 2007-11-16, பார்க்கப்பட்ட நாள் 2014-10-21
  3.    "Lagerlöf, Selma". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (12வது). (1922). [[Category:விக்கிமூலத்திலிருந்து 1922 பிரிட்டானிக்கா என்சைக்ளோபீடியா மேற்குறிப்பைக் கொண்ட விக்கிப்பீடியா கட்டுரைகள்]]
  4. "Våldsam debatt i Akademien när Lagerlöf valdes" (in swedish). Svenska Dagbladet. 25 September 2009. http://www.svd.se/kulturnoje/understrecket/valdsam-debatt-i-akademien-nar-lagerlof-valdes_3569005.svd. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=செல்மா_லோவிசா_லேகர்லாவ்&oldid=3246254" இலிருந்து மீள்விக்கப்பட்டது