சேத்தக் (Chetak) (சேட்டக், சேடக்), மகாராணா பிரதாப் சிங்கின் போர்க்குதிரை. ஜூன் 21, 1576 அன்று நடைபெற்ற போரில் இக்குதிரையின் பங்கு மகத்தானது. இக்குதிரை கதியாவாரி எனும் வகையைச் சேர்ந்தது.[1] அக்பரின் படைக்கு தலைமை தாங்கி ராஜபுத்திர மன்னன் ராஜா மான்சிங், மாவீரர் என்று தமது வீரத்திற்காகவும் நாட்டுப்பற்றிற்காகவும் வர்ணிக்கப்பட்ட மகாராணாவை எதிர்த்து ஹால்டிகாட் எனும் இடத்தில் போரிட்டதில் தோற்கடிக்கப்பட்ட மகாராணாவை, தான் படுகாயமுற்றபோதும் பகைவர்களிடம் சிக்காமல் தன் வாயில் கவ்வி எடுத்துக்கொண்டு வெகுதூரத்தில் உள்ள காட்டுக்கு கொண்டு வந்ததின் மூலம் அவ்வீரரின் மானத்தைக் காப்பாற்றியதற்காகப் புகழப்படும் போர்த்திறனில் சிறந்த குதிரை.[2][3] இப்போரில் இக்குதிரை மரணமடைந்தது.

சேத்தக்
Chetak
சேத்தக் குதிரையில் அமர்ந்த நிலையில் மகாராணா பிரதாப்பின் சிலை
இனம்குதிரை
வகைகத்தியவார்
பால்ஆண்
இறப்பு1576
ராஜ்சமந்து, இராசத்தான்
நாடுஇந்தியா
Employerமகாராணா பிரதாப்
Notable roleபோர்க் குதிரை

இக்குதிரையை சிறப்பிக்கும்வண்ணம் இந்திய இராணுவத்தின் உலங்கு வானூர்திக்கு சேத்தக் உலங்கு வானூர்தி (Chetak Helicopter) என்ற பெயரை இந்திய அரசு வைத்துள்ளது.[2]

சேத்தக் என்ற இந்தப் பெயர் பிரதாப் சிங் குதிரைக்கு வைத்த பெயர் அல்ல. பிற்காலத்தில் கவிதைகளிலும், இது குறித்த கதைகளிலும் குதிரையின் பெயர் சேத்தக் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.[4] இக்குதிரை நீல நிறம் கொண்டதாக நாட்டார் வழக்காற்றுப்பாடல்களில் குறிப்பிடப்படுகின்றது.

மேற்கோள்கள் தொகு

  1. http://hdl.handle.net/1773/2588
  2. 2.0 2.1 குமுதம் ஜோதிடம்;1.5.2009; பக்கம் 4
  3. குமுதம் ஜோதிடம்; 30. மே 2008; பக்கம் 1
  4. முகில் (28 பெப்ரவரி 2018). "பிரபலக் குதிரைகள்: வெற்றிகளை ஈட்டிய குதிரைகள்!". கட்டுரை. தி இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 28 பெப்ரவரி 2018. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=சேத்தக்&oldid=3930285" இலிருந்து மீள்விக்கப்பட்டது