சேபிள்

அமெரிக்க தொழில்முறை மல்யுத்த வீரர், நடிகை

ரெனா மார்லெட் லெஸ்னர் ( ஆகஸ்ட் 8, 1967 இல் பிறந்தார்), சேபிள் என்று பரவலாக அழைக்கப்படுபவர், ஒரு அமெரிக்க வடிவழகி, நடிகை மற்றும் ஓய்வுபெற்ற தொழில்முறை மல்யுத்த வீரர் ஆவார் . இவர் முதன்மையாக உலக மற்போர் மகிழ்கலை நிறுவனத்தில் சேபிள் என்ற மேடைப்பெயரில் விளையாடியதன் மூலம் பரவலக அறியப்பட்டார். இவர் 1996 முதல் உலக மற்போர் மகிழ்கலை நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து மல்யுத்தப் போட்டிகளில் பங்குபெற்றார்.[1] லூனா வச்சன் மற்றும் ஜாக்குலின் ஆகியோருடன் போட்டியிட்டு இரண்டாவது உலக மற்போர் சங்க மகளிர் வாகையாளர் ஆனார் .   பாலியல் துன்புறுத்தல் மற்றும் பாதுகாப்பற்ற வேலை நிலைமைகள் ஆகியவற்றைக் காரணம் காட்டி நிறுவனத்திற்கு எதிராக மில்லியன் கணக்கான டாலர்களை நஷ்ட ஈடாக வழங்க வேண்டும் என நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்தார்.[2][3][4]

ஏப்ரல் 1998 இல் இங்கிலாந்தில் உலக மற்போர் சங்க சுற்றுப்பயணத்தின் போது சேபிள்

2003 ஆம் ஆண்டில், இவர் உலக மற்போர் மகிழ்கலை நிறுவனத்திற்குத் திரும்பி டோரி வில்சனுடன் மோதலில் ஈடுபட்டார், மேலும் வின்ஸ் மக்மஹோனின் எஜமானி என்ற மற்றொரு கதைக்களத்திலும் இவர் ஈடுபட்டார். 2004 ஆம் ஆண்டில், இவர் தனது குடும்பத்துடன் அதிக நேரம் செலவிட வேண்டும் என்ற நோக்கில் நிறுவனத்தை விட்டு வெளியேறினார்.[5] மல்யுத்தத்திற்கு வெளியே, இவர் ஒரு பாலியல் சின்னமாக கருதப்படுகிறார் மற்றும் பிளேபாயின் அட்டைப்படத்தில் மூன்று முறை இடம்பெற்றுள்ளார்.[1] ஏப்ரல் 1999 இல் வெளியான பிளேபாய் அட்டைப்படம் அதன் வரலாற்றில் அதிக விற்பனையான அட்டைப் படங்களில் ஒன்றாகக் கருதப்பட்டது.[6] பசிபிக் ப்ளூ,[7] உள்ளிட்ட பல தொலைக்காட்சித் தொடர்களில் இவர் விருந்தினராக நடித்தார், மேலும் கார்க்கி ரோமானோ படத்தில் தோன்றினார்.

ஆரம்ப கால வாழ்க்கை தொகு

ரேனா கிரீக் புளோரிடாவின் ஜாக்சன்வில்லில் பிறந்தார்.[6] இவர் தனது இளமை பருவத்தில் ஜிம்னாஸ்டிக்ஸ், குதிரை சவாரி மற்றும் சாப்ட்பால் போன்ற செயல்களில் ஆர்வம் காட்டினார். தனது பன்னிரெண்டு வயதில் தனது முதல் அழகுப் போட்டியை வென்ற பிறகு, 1990 ஆம் ஆண்டில் எல்'ஓரியல், பெப்சி மற்றும் கெஸ் போன்ற நிறுவனங்களுக்கு வடிவழகியாக இருந்தார்.

தொழில்முறை மல்யுத்த வாழ்க்கை தொகு

உலக மல்யுத்த கூட்டமைப்பு தொகு

மார்க் மேரோவுடன் அறிமுகம் மற்றும் பகை (1996-1998) தொகு

மார்ச் 1996 இல் ரெஸ்டில்மேனியா XII இல் சேபிள் என்ற பெயரில் உலக மல்யுத்த கூட்டமைப்பிற்காக தனது முதல் போட்டியில் அறிமுகமானார், ஹண்டர் ஹியர்ஸ்ட் ஹெல்ம்ஸ்லியக்கு பாதுகாவளாரகச் சென்றார்.[1][2] 1997 இல் ஒரு போட்டியில் இவருக்கு காயம் ஏற்பட்டது. அதற்கு முன் வரை இவர் மேரோவின் மேலாளராக இருந்தார். 1998 ஆம் ஆண்டு இவர் மீண்டும் மல்யுத்தப் போட்டிகளில் போட்டிகளில் கலந்துகொண்டார். இந்த முறை தனியாகப் போட்டியிட்டதன் மூலம் பரவலாக அறியப்பட்டார்.

மகளிர் சாம்பியன் (1998-1999) தொகு

செப்டம்பர் 21, 1998 ராவின் பதிப்பில் புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட உலக மற்போர் சங்க மகளிர் வாகையாளர் பட்டத்திற்காக சேபிள் ,ஜாக்குலின் என்பவரை எதிர்கொண்டனர். மார்க் மேரோ தலையிட்டதை அடுத்து ஜாக்குலின் இந்த பட்டத்தை வென்றார்.[8][9] நவம்பர் 15, 1998 அன்று சர்வைவர் சீரிஸில் மகளிர் வாகையாளர் பட்டத்திற்காக நடைபெற்ற போட்டியில் சேபலிடம் தோல்வியடைந்தார். இந்த நேரத்தில், யுஎஸ்ஏ நெட்வொர்க் நிகழ்ச்சியான பசிபிக் ப்ளூவின் எபிசோடில் ரேனா தோன்றினார்.[7] அங்கு வின்ஸ் மற்றும் ஷேன் மக்மஹோனுக்கு அடிபணிந்த பாத்திரத்தில் நடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது, ஆனால் சில காட்சிகள் மட்டுமே பொதுமக்கள் பார்வைக்கு காட்சிக்கு வைக்கப்பட்டன.

சான்றுகள் தொகு

  1. 1.0 1.1 1.2 "Sable's Alumni Profile". WWE.com. பார்க்கப்பட்ட நாள் February 5, 2012.
  2. 2.0 2.1 Jason Clevett (August 11, 2004). "WWE, Sable part ways". SLAM! Wrestling. Archived from the original on ஏப்ரல் 1, 2015. பார்க்கப்பட்ட நாள் June 3, 2007. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. TJ Madigan (August 14, 2004). "Sable released by WWE". Calgary Sun. Archived from the original on ஜனவரி 10, 2013. பார்க்கப்பட்ட நாள் June 3, 2007. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  4. "Sable Blows Her Top". People. February 23, 1999. Archived from the original on பிப்ரவரி 4, 2008. பார்க்கப்பட்ட நாள் January 15, 2008. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  5. "Sable/Brock Wedding Details". பார்க்கப்பட்ட நாள் February 5, 2012.
  6. 6.0 6.1 Tim Baines (March 21, 1999). "Sable-mania: Wrestling's sexiest star talks about her life inside the ring and out". Ottawa Sun. Archived from the original on ஜனவரி 1, 2013. பார்க்கப்பட்ட நாள் January 21, 2008. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  7. 7.0 7.1 Greg Oliver (January 11, 1999). "Sable looks beyond wrestling". SLAM! Sports. பார்க்கப்பட்ட நாள் June 3, 2007.[தொடர்பிழந்த இணைப்பு]
  8. "Sable vs. Jacqueline: Raw – Women's Championship Match, September 21, 1998 (3:13)". உலக மற்போர் மகிழ்கலை நிறுவனம்.com. Archived from the original on September 8, 2015. பார்க்கப்பட்ட நாள் August 22, 2015.
  9. "CRZ.net: RAW 21 September 1998". பார்க்கப்பட்ட நாள் July 4, 2006.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சேபிள்&oldid=3792667" இலிருந்து மீள்விக்கப்பட்டது