சேலம்-II (சட்டமன்றத் தொகுதி)

1951ல் சேலம் புறநகர் என அழைக்கப்பட்ட தொகுதி 1957 லிருந்து சேலம் 2 என அழைக்கப்பட்டது. தேர்தல் ஆணையத்தின் 2008 தொகுதி மறுசீரமைப்பு ஆணையின் காரணமாக இத்தொகுதி நீக்கப்பட்டுள்ளது[1].

ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள் விழுக்காடு 2ம் இடம் பிடித்தவர் கட்சி வாக்குகள் விழுக்காடு
1951 சி. லட்சுமண கந்தன் காங்கிரசு 15254 42.95 அ. சுப்ரமணியம் தமிழ்நாடு தொழிலாளர் கட்சி 14575 41.04
1957 அ. இரத்தினவேல் கவுண்டர் காங்கிரசு 19755 54.51 எஸ். எம். இராமையா இந்திய பொதுவுடைமை கட்சி 11023 30.42
1962 அ. இரத்தினவேல் கவுண்டர் காங்கிரசு 28811 47.56 எஸ். எம். இராமையா இந்திய பொதுவுடைமை கட்சி 19976 32.98
1967 இ. ஆர். கிருட்டிணன் திமுக 38781 58.00 அ. இரத்தினவேல் கவுண்டர் காங்கிரசு 27285 40.81
1971 க. இராசாராம் திமுக 37152 52.77 ஆர். இராமகிருஸ்ணன் காங்கிரசு (ஸ்தாபன) 31844 45.23
1977 மு. ஆறுமுகம் ஜனதா கட்சி 22636 31.41 கே. எ. தங்கவேலு திமுக 20523 28.48
1980 மு. ஆறுமுகம் அதிமுக 40975 51.57 கே. அன்பழகன் காங்கிரசு 36235 45.61
1984 ஆறுமுகம் அதிமுக 49339 53.79 எஸ். ஆறுமுகம் திமுக 41333 45.07
1989 * எஸ். ஆறுமுகம் திமுக 45358 43.52 எம். நடேசன் அதிமுக (ஜெயலலிதா) 24593 23.60
1991 எம். நடேசன் அதிமுக 66904 63.90 எஸ். ஆறுமுகம் திமுக 26997 25.79
1996 ஏ. எல். தங்கவேல் திமுக 63588 54.93 எஸ். சென்னிமலை அதிமுக 36097 31.18
2001 எம். கார்த்தி பாமக 62306 54.25 எ. எல். தங்கவேல் திமுக 47221 41.11
2006 ** எஸ். ஆறுமுகம் திமுக 85348 -- ஆர். சுரேஷ்குமார் அதிமுக 70605 --

1977ல் இந்திய பொதுவுடைமை கட்சி (மார்க்சியம்) வின் கே. எஸ். அர்த்தனாரி 19173(26.61%) & இந்திய பொதுவுடைமை கட்சியின் கே. வி. இராமசாமி 9731(13.50%) வாக்குகளும் பெற்றனர்.

1989ல் காங்கிரசின் யு. ராஜேந்திரன் 22755 (21.83%) வாக்குகள் பெற்றார். அதிமுக ஜானகி அணியின் கே. ராஜாராம் 10178 (9.77%) வாக்குகள் பெற்றார்.

2006 தேமுதிகவின் கே. வி. குணசேகரன் 20026 வாக்குகள் பெற்றார்.

மேற்கோள்கள் தொகு

  1. "சட்டமன்றத் தொகுதி மறுசீரமைப்பு ஆணை" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2015-08-04.