சொன் எயுங்-மின்

சொன் ஹியொங்-மின் (Son Heung-min, அங்குல் எழுத்துமுறை: ; அஞ்சா: ; பிறப்பு 8 சூலை 1992) தென் கொரிய தொழில்முறை காற்பந்தாட்ட வீரர். இவர் இங்கிலீஷ் பிரீமியர் லீக் கழகமான தோட்டன்காம் ஆட்சுபர் அணியிலும் தென் கொரிய தேசிய காற்பந்து அணியிலும் p ஒருபக்க விளையாட்டாளராக அல்லது முன்கள வீரராக விளையாடி வருகின்றார்.

சொன் ஹியொங்-மின்

2018இல் சொன்
சுய தகவல்கள்
முழுப் பெயர்சொன் ஹியொங்-மின்[1]
பிறந்த நாள்8 சூலை 1992 (1992-07-08) (அகவை 31)[2]
பிறந்த இடம்சுஞ்சியோன், தென் கொரியா
உயரம்1.83 மீ[3]
ஆடும் நிலை(கள்)பக்கவாட்டாளர் / முன்கள வீரர்
கழகத் தகவல்கள்
தற்போதைய கழகம்
தோட்டன்காம் ஆட்சுபர்
எண்7
இளநிலை வாழ்வழி
2008சியோல்
2008–2010ஆம்பர்கர்
முதுநிலை வாழ்வழி*
ஆண்டுகள்கழகம்தோற்.(கோல்)
2010ஆம்பர்கர்6(1)
2010–2013ஆம்பர்கர்73(20)
2013–2015பேயர் லீவர்குசன்62(21)
2015–தோட்டன்காம் ஆட்சுபர்99(30)
பன்னாட்டு வாழ்வழி
2008–2009தென்கொரியா 17கீழ்18(7)
2016தென்கொரியா 23கீழ்4(2)
2010–தென்கொரியா70(23)
*கழக உள்ளூர் சுற்றுப் போட்டிகள் தோற்றங்களும் கோல்களும், 21:28, 13 மே 2018 (UTC) அன்று சேகரிக்கப்பட்டது.
‡ தேசிய அணிக்கான விளையாட்டுகளும் கோல்களும் 27 சூன் 2018 (UTC) அன்று சேகரிக்கப்பட்டது.

சொன் தமது பயிற்சியை ஆம்பர்கு கழகத்தில் மேற்கொண்டார். இவ்வணியில் 2010ஆம் ஆண்டு செருமானிய புன்டசுலீகாவில் அறிமுகமானார். 2013இல் €10 மில்லியன் ஒப்பந்தத்தொகைக்கு பேயர் லீவர்குசன் அணிக்கு மாறினார். இந்தக் கழகத்தில் யூஈஎஃப்ஏ யூரோப்பா கூட்டிணைவு மற்றும் யூஈஎஃப்ஏ வாகையர் கூட்டிணைவு போட்டிகளில் பங்கேற்றார். இரண்டாண்டுகள் கழித்து £22 மில்லியன் தொகைக்கு தோட்டன்காம் ஆட்சுபர் கழகத்திற்கு மாறினார். ஓர் ஆசிய விளையாட்டாளர் இவ்வளவு கூடுதல் தொகைக்கு எடுக்கப்படுவது முதலாவதாகும்.[4] தோட்டன்காமில் ஆடுகையில் இங்கிலீஷ் பிரீமியர் லீக் வரலாற்றில் மிகக் க்கூடுதலான கோல்கள் எடுத்த ஆசியராக சாதனை புரிந்தார்.[5]

2010இலிருந்து பன்னாட்டுப் போட்டிகளில் தென்கொரியாவிற்காக ஆடி வருகிறார். 2014, 2018 உலகக்கோப்பை காற்பந்து போட்டிகளில் தென்கொரிய அணியில் பங்கேற்றுள்ளார். உலகக்கோப்பை போட்டிகளில் தென்கொரியாவின் மிக உயர்ந்த கோல்கள் எடுத்த மூவரில் இவரும் ஒருவர். மற்ற இருவர் பார்க் ஜி-சுங், ஆன் யுங் ஃவான் ஆவர். இம்மூவரும் தலா மூன்று கோல்கள் எடுத்துள்ளனர். 2011இலும் 2015 இலும் ஆசியக் கோப்பை போட்டிகளில் ஆடியுள்ளார்; 2015இல் தென்கொரியா இரண்டாமிடத்தை எட்ட உதவி புரிந்தார்.

மேற்கோள்கள் தொகு

  1. "Squads for 2016/17 Premier League confirmed". Premier League. 1 September 2016. பார்க்கப்பட்ட நாள் 15 September 2016.
  2. "Son Heung-Min". 11v11.com. AFS Enterprises. பார்க்கப்பட்ட நாள் 4 January 2018.
  3. "Son Heung-Min: Overview". Premier League. பார்க்கப்பட்ட நாள் 14 March 2018.
  4. Long, Sam (31 August 2015). "Tottenham's Son Heung-min vows to justify £22m price tag after becoming the most expensive Asian player in history". London Evening Standard இம் மூலத்தில் இருந்து 22 April 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190422024724/https://www.standard.co.uk/sport/football/tottenhams-son-heung-min-vows-to-justify-22m-price-tag-after-becoming-most-expensive-asian-player-in-a2924261.html. 
  5. Rice, Simon (5 November 2017). "Son Heung-min sets new Premier League record with winning goal for Tottenham". Metro இம் மூலத்தில் இருந்து 7 November 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20171107165452/http://metro.co.uk/2017/11/05/son-heung-min-sets-new-premier-league-record-with-winning-goal-for-tottenham-7055067/. 

வெளி இணைப்புகள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Son Heung-min
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சொன்_எயுங்-மின்&oldid=3759483" இலிருந்து மீள்விக்கப்பட்டது