சோலையாறு அணை

சோலையாறு அணை கோயமுத்தூர் மாவட்டத்தின் ஆனைமலையில் உள்ள மலைவாழிடமான வால்பாறையில் இருந்து 20 கி.மீ தொலைவில் உள்ளது. இதுவே ஆசியாவின் இரண்டாவது ஆழமான அணை என்று கூறப்படுகிறது. இது பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தின் கீழ் வரும் ஒரு முதன்மையான நீர்த்தேக்கம் இதுவாகும். இதன் கொள்ளளவு 160 அடி. இதன் மிகுதி நீர் பரம்பிக்குளம் நீர்த்தேக்கத்திற்கு அனுப்பப்படுகிறது. இந்த அணையைப் பார்க்க சிறப்பு அனுமதி தேவை.

சோலையாறு அணைக்கட்டு
சோலையாறு அணைக்கட்டு
அதிகாரபூர்வ பெயர்சோலையார் அணைக்கட்டு
அமைவிடம்வால்பாறை, தமிழ்நாடு
கட்டத் தொடங்கியது1965[சான்று தேவை]
திறந்தது1971[சான்று தேவை]
அணையும் வழிகாலும்
தடுக்கப்படும் ஆறுசாலக்குடி ஆறு
உயரம்66 மீற்றர்கள்
நீளம்6-7 கி.மீ.
நீர்த்தேக்கம்
உருவாக்கும் நீர்த்தேக்கம்சாலக்குடி ஆறு
கொள்ளளவு: 150.20 மில்லியன் கன மீற்றர்கள்
கோடை கால ஆரம்பத்தில் சோலையாறு அணைக்கட்டு

வால்பாறையானது பொள்ளாச்சியில் இருந்து 64 கி,மீ (40 மைல்) மற்றும் கேரளா மாநிலம் சாலக்குடியில் இருந்து 55 கிலோமீட்டர் (34 மைல்) தொலைவில் அமைந்துள்ளது. இப்பகுதிக்கு அருகில் உள்ள ரயில் நிலையம் சாலக்குடி ரயில் நிலையம் ஆகும்.

சோலையாறு அணை, பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தின் முக்கிய நீர்த்தேக்கமாக உள்ளது. இதன் நீர் சேமிப்பு திறன் 160 அடி (49 மீ). இந்த நீர்த் தேக்கத்தில் நிரம்பி வழியும் நீர் பரம்பிக்குளம் நீர்த்தேக்கத்தை அடைகிறது.[1] இந்த அணை அப்பகுதியில் புகழ்பெற்ற பொறியாளரான கே. பழனிசாமி தலைமையின் கீழ் பணிபுரிந்த தொழிலாளர்களால் கட்டப்பட்டது.

மேலும் பார்க்க  தொகு

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சோலையாறு_அணை&oldid=3760793" இலிருந்து மீள்விக்கப்பட்டது