சோல்பரி அரசியல் யாப்பு

சோல்பரி யாப்பின் உறுப்புரை

சோல்பரி அரசியல் யாப்பு பிரித்தானிய இலங்கையில் 1947 இல் அறிமுகப்படுத்தப்பட்ட அரசியல் யாப்புச் சீர்திருத்தம் ஆகும். சோல்பரி பிரபுவின் தலைமையிலான ஆணைக்குழுவால் இது உருவாக்கப்பட்டது.

வரலாறு தொகு

டொனமூர் அரசியல் யாப்பு இருக்கும் போதே சீர்திருத்தக் கோரிக்கைகள் இலங்கைத் தேசிய சங்கம் மற்றும் இலங்கை தமிழர் சங்கத்தால் முன்வைக்கப்பட்டன. அத்தோடு டொனமூர் யாப்பில் இருந்த குறைபாடுகளும் சுட்டிக்காட்டப்பட்டன. இதனால் இலங்கைக்கு 1944 இல் சோல்பரி பிரபுவின் தலைமையில் ஓர் ஆணைக்குழு இலங்கை வந்தது. இலங்கையர்கள் முன்வைத்த கோரிக்கைகளுக்கிணங்க சோல்பரி யாப்பு வெளியிடப்பட்டது. இதன் மொத்த உறுப்பினர்கள் 131. சோல்பரி அரசியல் யாப்பு, 1947 தொடக்கம் 1948 வரை இலங்கையில் நடைமுறையில் இருந்தது. இதன்படி அரசாங்கப் பணிகளை முன்னெடுத்துச் செல்வதற்கு ஆளுநர் நாயகம், பிரதமர் தலைமையிலான அமைச்சரவை, இரு சபைகளைக் கொண்ட நாடாளுமன்றம், நீதி என நான்கு துறைகள் அறிமுகம் செய்யப்பட்டன. நாடாளுமன்றத்தில் இரண்டு சபைகள் காணப்பட்டன. அவை பிரதிநிதிகள் சபை, செனட்சபை (மூதவை). பிரதிநிதிகள் சபையில் 101 பேரும் செனட்சபையில் 30 பேரும் காணப்பட்டனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சோல்பரி_அரசியல்_யாப்பு&oldid=3102524" இலிருந்து மீள்விக்கப்பட்டது