சௌமியா சர்கார்

வங்காளதேசத் துடுப்பாட்டக்காரர்

சௌமியா சர்கார் (Soumya Sarkar (வங்காளம்: সৌম্য সরকার) (பிறப்பு:பெப்ரவரி 25, 1993) வங்காளாதேச துடுப்பாட்ட அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இடது கை மட்டையாளரான இவர் வலது கை வேகப் பந்துவீச்சாளரும் ஆவார்.

சௌமியா சர்கார்

துடுப்பாட்ட வாழ்க்கை தொகு

சர்கார் பெப்ரவரி 25, 1993 இல் சட்கிராவில் பிறந்தார். துவக்கவீரராக இவர் களம் இறங்குகிறார். 2010 மற்றும் 2012 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற 19 வயதிற்கு உட்பட்டோருக்கான உலகக் கிண்னத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் விளையாடியுள்ளார். 2010-11 ஆம் ஆண்டுகளில் குல்னா மாகாணம் சார்பாக முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் இவர் அறிமுகமனார். நவமபர், 2013 இல் நியூசிலாந்துத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான பன்னாட்டு இருபது20 போட்டித் தொடரில் இவருக்கு இடம் கிடைத்தது. ஆனால் விளையாடும் அணியில் இடம் கிடைக்கவில்லை. 2014 ஆம் ஆண்டில் சிம்பாப்வே துடுப்பாட்ட அணி வங்காளதேசத்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது. அந்தத் தொடரில் இறுதி ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் இவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.

2015 ஆம் ஆண்டு ஆத்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நடைபெற்ற 2015 துடுப்பாட்ட உலகக்கிண்ணத்தில் விளையாடும் வாய்ப்பினைப் பெற்றார். வங்காளதேச பிரீமியர் லீக் தொடரில் ராங்பூர் ரைடர்ஸ் அணிக்காகவும், நேஷனல் கிரிக்கெட் லீக்கில் குல்னா மாகாணம் சார்பாகவும் தாக்கா பிரீமியர் லீக் தொடரில் பிரைம் பேங்க் கிளப் சார்பாகவும் உள்ளூர்ப் போட்டிகளில் விளையாடி வருகிறார். டிசம்பர்1, 2014 இல் சிம்பாப்வே துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார். சேர்-இ-பங்களா துடுப்பாட்ட அரங்கத்தில் பாக்கித்தான் துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் தனது முதல் நூறு ஓட்டங்களைப் பதிவு செய்தார்.[1] 2015 ஆம் ஆண்டில் நடைபெற்ற உலகக் கிண்னத் துடுப்பாட்டப் போட்டியில் வங்காளதேச அணியின் சார்பாக விளையாடினார்.[2][3] உலகக் கிண்ணத் தொடரில் அதிக கேட்ச்சுகள் பிடித்த வீரர் எனும் சாதனையைப் படைத்தார். இதர்கு முன்னதாக முகமது கைஃப் மற்றும் உமர் அக்மல் ஆகியோர் இந்தச் சாதனையைப் படைத்துள்ளனர்.[4] ஏப்ரல் ,2015 இல் பாக்கித்தான் துடுப்பாட்ட அணிக்கு எதிரான பன்னாட்டு இருபது20 போட்டியில் அறிமுகமானார்.[5] ஏப்ரல் 25, 2015 இல் பாக்கித்தான் துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் 145 ஓட்டங்கள் எடுத்தார்[6][7] இதே அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார்.[8]

சௌமியா சர்கார் , இலங்கைத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான வங்காளதேசத் துடுப்பாட்ட அணியின் 100 ஆவது தேர்வுத் துடுப்பாட்டத்தில் விளையாடினார். இந்தப் போட்டியின் முதல் ஆட்டப் பகுதியில் 61 ஓட்டங்களும் 5 கேட்சுகளையும் பிடித்தார். இதன் மூலம் ஒரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் அதிக கேட்சுகள் பிடித்த வங்காளதேச வீரர் எனும் சாதனை படைத்தார்.[9][10][11] மேலும் ஒரு ஆட்டப் பகுதியில் நான்கு கேட்சுகள் பிடித்து அதிக கேட்சுகள் பிடித்த வங்காளதேச வீரர் எனும் சாதனை படைத்தார்.[12] 2018-2019 ஆண்டுகளில் நடைபெற உள்ள வங்காளதேச பிரீமியர் லீக் தொடரில் ராஜ்ஹாசி கிங்ஸ் அணி சார்பாக விளையாட உள்ளார்.[13]

சான்றுகள் தொகு

  1. "Zimbabwe tour of Bangladesh, 5th ODI: Bangladesh v Zimbabwe at Dhaka, Dec 1, 2014". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 1 December 2014.
  2. "Bangladesh Squad". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 24 April 2015.
  3. "ICC ODI Championship Batting Rankings". LGICCRANKINGS.COM. பார்க்கப்பட்ட நாள் 3 September 2015.
  4. "Cricket Records | Records | World Cup | Most catches in an innings | ESPNcricinfo". ESPNcricinfo. http://stats.espncricinfo.com/ci/engine/records/fielding/most_catches_innings.html?id=12;type=trophy. 
  5. "Pakistan tour of Bangladesh, Only T20I: Bangladesh v Pakistan at Dhaka, Apr 24, 2015". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 24 April 2015.
  6. "Sarkar ton powers Bangladesh to 3–0". ESPN. பார்க்கப்பட்ட நாள் 24 April 2015.
  7. "Soumya Sarkar graduates to the next level – Cricket – ESPNcricinfo". ESPN. பார்க்கப்பட்ட நாள் 24 April 2015.
  8. "Pakistan tour of Bangladesh, 1st Test: Bangladesh v Pakistan at Khulna, Apr 28 – May 2, 2015". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 28 April 2015.
  9. "Cricket Records | Records | Bangladesh | Test matches | Most catches in a match | ESPNcricinfo". ESPNcricinfo. http://stats.espncricinfo.com/ci/engine/records/fielding/most_catches_match.html?class=1;id=25;type=team. 
  10. "2nd Test: Sri Lanka v Bangladesh at Colombo (PSS), Mar 15–19, 2017 | Cricket Scorecard | ESPNcricinfo". ESPNcricinfo. http://www.espncricinfo.com/ci/engine/match/1083445.html. 
  11. "Five things Bangladesh got right in Colombo" (in en). ESPNcricinfo. http://www.espncricinfo.com/sri-lanka-v-bangladesh-2016-17/content/story/1088001.html. 
  12. "Cricket Records | Records | Bangladesh | Test matches | Most catches in an innings | ESPNcricinfo". ESPNcricinfo. http://stats.espncricinfo.com/ci/engine/records/fielding/most_catches_innings.html?class=1;id=25;type=team. 
  13. "Full players list of the teams following Players Draft of BPL T20 2018-19". Bangladesh Cricket Board. Archived from the original on 28 மார்ச் 2019. பார்க்கப்பட்ட நாள் 29 October 2018. {{cite web}}: Check date values in: |archive-date= (help)

வெளியிணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சௌமியா_சர்கார்&oldid=3527115" இலிருந்து மீள்விக்கப்பட்டது