சௌராட்டிர மொழி எழுத்து

சௌராஷ்டிர மொழி :சௌரசேனி - பிராகிருத மொழிகளின் திரிபு என்று சௌராட்டிர மொழி அறிஞர் தொ. மு. இராமராய் கூறியுள்ளார்.[1]

வரலாறு தொகு

1876 -ஆம் ஆண்டில் முதல் சௌராஷ்டிர எழுத்துப் புத்தகம் வெளியாகியது. மொழி அறிஞர் இலக்குமணாசாரியும் அவருடைய சீடர் தொ. மு. இராமாராயும் சேர்ந்து சௌராஷ்ட்ர மொழிக்கு எழுத்துருவை சீர்படுத்தியுள்ளனர்.

கவி வேங்கட சூரி சுவாமிகள் புனைந்த சௌராஷ்டிர சங்கீத ராமாயணம் தெலுங்கு எழுத்தில் (1905-ல்) அச்சானது. தமிழில் நான்கு விதமான ஒலிகள் க, ச, ட, த, ப என்ற வல்லின எழுத்துகளுக்கு இல்லாததால் தெலுங்கு எழுத்தில் அச்சிடப்பட்டது.

சௌராட்டிர மொழி எழுத்துக்களின் வளர்ச்சி ஆரம்ப கட்டத்தில் இருந்ததால் ஒரு சில புத்தகங்களே சௌராஷ்ட்ர லிபியில் அச்சடிக்கப் பட்டன. எல்லோருக்கும் சென்றடைய வேண்டுமென்பதற்காக தமிழ் எழுத்தில் க, ச, ட, த, ப என்ற மெய்யெழுத்துகளுக்கு க, க2, க3, க4 என்று சிறிய அளவில் 2,3,4 எண்களை எழுதி உச்சரிப்பு வித்தியாசத்தைக் குறித்தனர்.

தொ. மு. இராமராய்க்கு பின்பும் பல வருடங்கள் வரை சௌராஷ்ட்ர எழுத்தில் புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டன. 1897, 1898, 1899 மற்றும் 1900 ஆண்டில் நடைபெற்ற சௌராட்டிரர் மாநாடுகளில் சௌராஷ்டிர எழுத்திற்கு ஆதரவளித்து அதையே எல்லோருக்கும் கற்பிக்க வேண்டும் என்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஆனால் 1920 -ம் ஆண்டில் நடைபெற்ற 5-வது மாநாட்டில் சிலர் சௌராஷ்டிர மொழிக்கு தேவநாகரி எழுத்தை உபயோகிக்கவேண்டும் என்று தீர்மானத்தை பலத்த எதிர்ப்புக்கிடையில் நிறைவேற்றினர். ஆனால் தேவநாகரி எழுத்தில் சௌராஷ்டிர மொழிக்கு தேவைப்படும் குறியீடுகள் சில இல்லாமலிருந்ததால் அதை சரியாக பயன்படுத்த இயலவில்லை. அப்பொழுது இருந்த தலைவர்களும் சௌராஷ்டிர எழுத்தை கற்காததால் பின்னால் வந்தவர்களும் அதை உதாசீனப்படுத்தினர். பின்னாளில் வந்த தலைவர்கள் சௌராஷ்டிர எழுத்து ஈய அச்சுக்களை உருக்கி அழித்து தேவநாகரி எழுத்தின் உபயோகத்தை அதிகரிக்க முயன்றனர்.

இதனால் சௌராஷ்டிர எழுத்தில் புத்தகங்கள் அச்சிடுவது கடினமாயிற்று. ஆயினும் தொ. மு. இராமராய்யின் சீடர்கள் தொடர்ந்து கையாலேயே சௌராட்டிர மொழியை அதன் எழுத்திலேயே எழுதி வந்தனர்.

இந்தியா சுதந்திரமடைந்து மொழிவாரி மாநிலங்கள் தோன்றிய பின்பு நாட்டிற்கு ஒரு பொது எழுத்து தேவை என்ற குரலுக்கு ஆதரவு குறைந்ததுடன் தமிழ்நாட்டில் இந்தி எதிர்ப்பு ஏற்பட்டு இருமொழிக்கொள்கை பள்ளிகளில் பின்பற்றியதால் தேவநாகரி எழுத்தில் யாரும் எழுத ஆர்வம் காட்டவில்லை.

தொ. மு. இராமராய்யின் சீடர்களின் வழிவந்த வந்த ஆசிரியர் ஓபுளா. கு. ராமானந்தம் பி.ஏ.பி.டி அவர்கள் கட்டையில் பிளாக் செய்து முதலாம் வகுப்பிற்கான பாடப் புத்தகத்தை ஸௌராஷ்டிர எழுத்திலேயே அச்சிட்டு வெளியிட்டார்.[2]

சௌராஷ்டிர வித்யா பீடம் என்ற அமைப்பு தோற்றுவிக்கப்பட்டு தொ. மு. இராமராய் நினைவு பாடசாலை மூலமாக சௌராஷ்டிர எழுத்து வகுப்புகள் தொடர்ந்து நடத்தப்பட்டன. பின்பு சீர்மிகு சௌராஷ்டிர இலக்கிய கழகம் (ஸ்ரேஷ்ட ஸௌராஷ்ட்ர ஸாஹித்ய ஸபா) தோற்றுவிக்கப் பட்டு சௌராஷ்டிர மொழியில் நூல்கள் வெளியிடப்பட்டன.

சௌராஷ்டிர கணினி எழுத்துருக்கள் (Sureshu, 'Sourashtra' in Unicode) உருவாக்கப்பட்டன. சௌராஷ்டிர எழுத்து ஒருங்குறியீட்டிலும் இடம் பெற்றது.

எழுத்துமுறைகள் தொகு

சௌராட்டிர மொழியை, தமிழ், தேவநாகரி, மற்றும் சௌராட்டிர எழுத்துகளிலேயே அதிகம் பயன்படுத்தப்படுகிறது. சௌராட்டிர எழுத்துகளுடன் இணையான தமிழ், தேவநாகரி எழுத்துகளும் தரப்பட்டுள்ளன.

உயிர் எழுத்துக்கள் தொகு

சௌராட்டிரம் தமிழ் தேவநாகரி
ர்ரு ररु
ர்ரூ ररू
ல்லு ल्लु
ல்லூ ल्लू
ꢂꢀ அம் अं
ꢂꢁ அஹ अ:꣎

அகரமேறிய மெய்யெழுத்துக்கள் தொகு

சௌராட்டிரம் தமிழ் தேவநாகரி
க2
க3
க4
ச2
ஜ2
ட2
ட3
ட4
த2
த3
த4
ந/ன
ப2
ப3
ப4
ꢒ꣄ꢰ க்ஷ/க்.ஷ் क्ष
ꢥꢴ ந: न्ह
ꢪꢴ ம: म्ह
ꢬꢴ ர: र्ह
ꢭꢴ ல: ल्ह

உயிர்மெய்யெழுத்துக்கள் தொகு

க் எழுத்திற்கு மட்டுமான உயிர்மெய் வரிசை தரப்பட்டுள்ளது. ꢒகक ꢒꢵகாका ꢒꢶகிकि ꢒꢷகீकी ꢒꢸகுकु ꢒꢹகூकू ꢒꢺக்ருक्रु ꢒꢻக்ரூक्रू ꢒꢼக்லுक्लु ꢒꢼꢵக்லூक्लू ꢒꢾகெकॅ ꢒꢿகேके ꢒꣀகைकै ꢒꣁகொकॉ ꢒꣂகோको ꢒꣃகௌकौ ꢒꢀம்कं ꢒꢁகஹक: ꢒ꣄க்क्

இவை தவிர மேலும் இரண்டு குறியீடுகள் உள்ளன. அவை பாதி ‘ய காரம், மற்றும் மூக்கொலி.

அவை ஒருங்குறியில் ஏற்றப்படாததால் இங்கு குறிப்பிட இயலவில்லை. அந்த எழுத்துகளைக் கொண்டு 'ஸுரேஷு' என்ற சொல்லை எழுத முடியும்,

இவற்றில் ர்ரூ, ல்லு, ல்லூ, அம், அஹ எழுத்துக்கள் அதிகம் பயன்படுவதில்லை. ந, ம, ர, ல எழுத்துக்களுடன் ‘ஹ’ (ஃக) ஒலி சேர்ந்து ந: (nha), ம: (mha), ர: (rha), ல: (lha) என்பவை இம்மொழியில் சிறப்பு ஒலிகளாக உள்ளன.

எழுத்துச் சீர்மை தொகு

சௌராட்டிரத்தில் உயிர் மெய்யெழுத்துக்கள் ஒரே சீரான முறையில் அமைந்துள்ளன. உயிர்க் குறிகள் எல்லாமே மெய்யெழுத்தின் வலது பக்கத்தில் எழுதப்படுகின்றன. தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி எழுத்துமுறைகளைக் காட்டிலும் சௌராட்டிர எழுத்துமுறை மேம்பட்டது. அதிக ஒலிகளை இவ்வெழுத்துகளைக் கொண்டு எழுதலாம்.

தமிழில் ஆ என்ற உயிர்க்குறி (கா) மெய்யெழுத்தின் வலது பக்கத்திலும், எ என்ற உயிர்க் குறி மெய்யெழுத்தின் (கெ) இடது பக்கத்திலும், ஒ என்ற உயிர்க் குறி மெய்யெழுத்தின் (கொ) இடது வலது பக்கங்களிலும் இடம் பெறுகின்றன. மேலும் கு, சு, கூ, சூ என்ற உ மற்றும் ஊ உயிர்க் குறிகள் மெய்யெழுத்துகளுடன் பலவிதமான முறைகளில் சேர்த்து எழுதப்படுகின்றன.

கு, ஙு, சு, ஞு, டு, ணு, து, நு, பு, மு, யு, ரு, லு, வு, ழு, ளு, று, னு;
கூ, ஙூ, சூ, ஞூ, டூ, ணூ, தூ, நூ, பூ, மூ, யூ, ரூ, லூ, வூ, ழூ, ளூ, றூ, னூ.
ஆனால் சௌராஷ்டிர மொழியில்
ꢒꢸ, ꢓꢸ, ꢔꢸ, ꢕꢸ, ꢖꢸ, ꢗꢸ, ꢘꢸ, ꢙꢸ, ꢚꢸ, ꢛꢸ, ꢜꢸ, ꢝꢸ, ꢞꢸ, ꢟꢸ, ꢠꢸ, ꢡꢸ, ꢢꢸ, ꢣꢸ, ꢤꢸ, ꢥꢸ, ꢦꢸ, ꢧꢸ, ꢨꢸ, ꢩꢸ, ꢪꢸ, ꢫꢸ, ꢬꢸ, ꢭꢸ, ꢮꢸ, ꢯꢸ, ꢰꢸ, ꢱꢸ, ꢲꢸ, ꢳꢸ, ꢒ꣄
ꢰꢸ, ꢒꢹ, ꢓꢹ, ꢔꢹ, ꢕꢹ, ꢖꢹ, ꢗꢹ, ꢘꢹ, ꢙꢹ, ꢚꢹ, ꢛꢹ, ꢜꢹ, ꢝꢹ, ꢞꢹ, ꢟꢹ, ꢠꢹ, ꢡꢹ, ꢢꢹ, ꢣꢹ, ꢤꢹ, ꢥꢹ, ꢦꢹ, ꢧꢹ, ꢨꢹ, ꢩꢹ, ꢪꢹ, ꢫꢹ, ꢬꢹ, ꢭꢹ, ꢮꢹ, ꢯꢹ, ꢰꢹ, ꢱꢹ, ꢲꢹ, ꢳꢹ, ꢒ꣄, ꢰꢹ

என்று உயிர்க்குறிகளான (ꢆ)ꢒꢸ, (ꢇ)ꢒꢹ ஒரே மாதிரி மெய்யெழுத்திற்கு வலது பக்கத்தில் எழுதப்படுவது சீரான முறையாகும். (Uniformity) இது எளிதில் ஞாபகப்படுத்திக்கொள்ள உதவுகிறது.

தெலுங்கு, கன்னட மொழிகளில் ‘கொ’ என்பது ஒரு முறையிலும் కొ, மொ என்பது பிறிதொரு முறையிலும் మొ எழுதப்படுகின்றன.

தேவநாகரியில், மெய்யெழுத்திற்கு இடது, வலது, கீழ், மேல் என்று உயிர்க்குறிகள் இடம் பெறுகின்றன. का, कि, की, कु, कू, कॅ, के, कै, कॉ, को, कौ, कं, क: ஆகிய எழுத்துகளைக் கொண்டு அறியலாம்.

மொழிக் கூறுகள் தொகு

சௌராஷ்டிர எழுத்து குறித்து டேவிட் டிரிஞ்சர் தனது ‘த ஆல்ஃபபெட் - எ கீ டு த ஹிஸ்டரி ஆஃப் மேன்கைண்டு’ என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்.[3]

இது சமற்கிருதத்தினின்றும் தோன்றிய மொழியானாலும் தமிழ்நாட்டில் குடியேறிய பின்பு சில திராவிட மொழிக்கூறுகளை ஏற்றுக் கொண்டதால் உயிர் எழுத்துக்கள் எ மற்றும் ஒ (குறில் ஓசை) அதிகமாக பயன்படுத்தப் படுகின்றன.

பா4ஷாரி4மானி மற்றும் ஜாபா3லி என்று இரண்டு பத்திரிக்கைகள் சௌராஷ்டிர மொழியில் வெளிவருகின்றன. இவற்றின் ஆசிரியராக டி. வி. குபேந்திரன் என்பவர் இருந்து வருகிறார்.

இவற்றையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. First Catechism of Sourashtra Grammar by T. M. Rama Rai, Printed at Panditha Mithra Press, Madras 1905
  2. Sri Rama Rai Sourashtra Vachakamu Book-I, by O.K.Ramanandam B.A.,B.T., Published by Sri Ramarai Sourashtra Patasala, 21-A, South Pandian Agil No.2.Lane, Madurai-1 (1961).
  3. 'The Alphabet - A Key to the History of Mankind' by David Dringer, D.Litt (Flor.), M.A. (Cantab.), Second Edition April 1949
  • Catalogue of the Saurashtra Books in the India Office Library, London (1979).
  • First Catechism of Sourashtra Grammar by T. M. Rama Rai, Printed at Panditha Mithra Press, Madras 1905
  • "The Alphabet - A Key to the History of Mankind" by David Dringer, Hutchinson's Scientific and Technical Publications, Second Edition, Revised, April 1949.
  • Sourashtra Language, Literature and Script by O.S.Subramanian, M.A., Dip. in Linguistics, Published by the Author, "Upamanyu", 7/9, Maa Roja Street, Meenakshinagar, Villapuram, Madurai-625012. (July 2006)

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சௌராட்டிர_மொழி_எழுத்து&oldid=3604153" இலிருந்து மீள்விக்கப்பட்டது