அனிதா தமிழகத்தின் அரியலூர் மாவட்டம், குழுமூரைச் சேர்ந்த மாணவியாவார். இவர் 2016-2017 கல்வியாண்டில் மார்ச் 2017 இல் நடைபெற்ற மேல்நிலைக் கல்வி பொதுத்தேர்வில் 1200-க்கு 1176 மதிப்பெண்களும் நீட் தகுதித் தேர்வில் 700-க்கு 86 மதிப்பெண்களும் பெற்றார்.[1] 2017 ஆம் ஆண்டு நீட் தேர்வு அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெற்றதால், தனது கனவான மருத்துவக் கல்வி படிப்பது சாத்தியமாகவில்லை என்ற கவலையில் செப்டம்பர் 1 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) மாணவி அனிதா தூக்கிட்டுத் தற்கொலை செய்துக்கொண்டார்.[2]

அனிதா
பிறப்புஅனிதா சண்முகம்
(2000-03-05)5 மார்ச்சு 2000
இறப்பு1 செப்டம்பர் 2017(2017-09-01) (அகவை 17)
குழுமூர் , அரியலூர் மாவட்டம், தமிழ்நாடு
இறப்பிற்கான
காரணம்
தற்கொலை

குடும்பப் பின்னணி தொகு

அனிதாவின் தந்தை சண்முகம், திருச்சி காந்தி காய்கறிச் சந்தையில் சுமை தூக்கும் தொழிலாளியாக பணியாற்றினார்.[3]

நீட் தேர்வு அவசர சட்டமும், உச்சநீதிமன்ற வழக்கும் தொகு

நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கக் கோரி தமிழக அரசு அவசரச் சட்டம் கொண்டு வந்தது. இந்தச் சட்டத்துக்கு மத்திய அரசும் ஒப்புதல் அளித்தது. இந்நிலையில் நீட் தேர்வின் அடிப்படையில் தமிழகத்தில் மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வை உடனடியாக நடத்த வேண்டும் எனக்கோரும் மனுவினை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். வழக்கறிஞர் நளினி சிதம்பரம் இந்த மனுவை அவசர மனுவாகக் கருதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டார்.[4] நீட் தேர்வு அடிப்படையில் தமிழகத்தில் மருத்துவக் கலந்தாய்வினை செப்டம்பர் 4 ஆம் தேதிக்குள் நடத்திட வேண்டும் என உச்சநீதிமன்றம் ஆகத்து 22 ஆம் தேதி உத்தரவிடப்பட்டது.[5]

தற்கொலைக்குப் பிறகான நிகழ்வுகள் தொகு

அனிதாவின் மரணத்தைத் தொடர்ந்து, தமிழகத்தில் நீட் தேர்வு முறைக்கு எதிரான போராட்டங்கள் பெரிய அளவில் தொடர்ந்து நடைபெற்றன.

மேற்கோள்கள் தொகு

  1. https://www.vikatan.com/government-and-politics/education/99340-neet-exam-student-anitha-to-argue-againt-nalini-chidambaram
  2. "மருத்துவப் படிப்புக்கு இடம் கிடைக்காததால் அரியலுார் மாணவி துாக்கிட்டுத் தற்கொலை". தினமணி. 2 செப்டம்பர் 2017. பார்க்கப்பட்ட நாள் 4 செப்டம்பர் 2017. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  3. மு. சகாயராஜ் (2017-08-17). "நீட் விவகாரம்: நளினி சிதம்பரத்துக்கு எதிராகக் களம் இறங்கும் அரியலூர் மாணவி!". விகடன். பார்க்கப்பட்ட நாள் 4 செப்டம்பர் 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  4. வரவணை செந்தில் (2017-09-02). "அனிதாவின் தற்கொலை அரசபயங்கரவாதம்". விகடன். பார்க்கப்பட்ட நாள் 4 செப்டம்பர் 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  5. "நீட் அடிப்படையில் மட்டுமே மாணவர் சேர்க்கை". தினமணி. 23 ஆகத்து 2017. பார்க்கப்பட்ட நாள் 4 செப்டம்பர் 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)

வெளியிணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ச._அனிதா&oldid=3577100" இலிருந்து மீள்விக்கப்பட்டது