ஜம்மு காஷ்மீர் இணைப்பு ஒப்பந்தம்

ஜம்மு காஷ்மீர் இணைப்பு ஒப்பந்தம், ஜம்மு காஷ்மீர் இராச்சியத்தின் மகாராஜா ஹரி சிங் என்பவரால், ஜம்மு காஷ்மீரை, இந்தியாவுடன் இணைக்கும் பொருட்டு 26 அக்டோபர் 1947இல் கையொப்பமிட்ட சட்டபூர்வமான ஆவணம் ஆகும்.[1][2][3]

ஜம்மு காஷ்மீர் இணைப்பு ஒப்பந்தம்
ஜம்மு காஷ்மீரை இந்தியாவுடன் இணைக்கும் ஒப்பந்தம்
ஒப்பந்த வகைஇணைப்பு ஒப்பந்தம்
கையெழுத்திட்டது26 அக்டோபர் 1947
இடம்ஸ்ரீநகர்/தில்லி
முத்திரையிட்டது27 அக்டோபர் 1947
நடைமுறைக்கு வந்தது27 அக்டோபர் 1947
நிலைஇந்தியாவின் தலைமை ஆளுநர் உடன்படிக்கைக்கு ஒப்புதல் அளித்தல்
முடிவுக்காலம்நிலைத்த உடன்பாடு
கையெழுத்திட்டோர்மகாராஜா ஹரி சிங்
இந்தியாமவுண்ட்பேட்டன் பிரபு
தரப்புகள்ஜம்மு காஷ்மீர் இராச்சியம்
இந்தியாஇந்தியா
வைப்பகம்இந்தியா
மொழிஆங்கிலம்

1947இந்திய விடுதலை சட்டத்தின் படி, மகாராஜா ஹரி சிங் தனது ஜம்மு காஷ்மீரை, இந்தியாவுடன் இணைத்துக் கொள்வதை தாமாக முன்வந்து ஏற்றுக் கொள்ள ஒப்புக்கொண்டார்.[4][5]

இந்திய கவர்னர் ஜெனரலராக இருந்த மவுண்ட்பேட்டன் பிரபு 27 அக்டோபர் 1947 அன்று, ஜம்மு காஷ்மீரை இந்தியாவுடன் இணைக்கும் உடன்படிக்கைக்கு ஒப்புதல் அளித்தார்.[6] இந்த உடன்படிக்கையால் ஜம்மு காஷ்மீர் இந்தியாவுடன் இணைக்கப்பட்டதால் ஜம்மு காஷ்மீர் உரிமைப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.[7][8]

ஜம்மு காஷ்மீர், இந்தியாவுடன் இணைக்க ஒப்பந்தம் செய்து கொண்ட நாளான அக்டோபர் 26ஆம் தேதியை, ஆண்டுதோறும் ஜம்மு காஷ்மீர் இணைப்பு விழாவாக கொண்டாடப்படுகிறது.[9]

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. Instrument of Accession of Jammu and Kashmir State dated 26 October, 1947
  2. Justice A. S. Anand, The Constitution of Jammu & Kashmir (5th edition, 2006), page 67
  3. Kashmir, Research Paper 04/28 by Paul Bowers, House of Commons Library, United Kingdom., page 46, 2004-03-30
  4. Patricia Gossman, Vincent Iacopino, Physicians for Human Rights,”The crackdown in Kashmir” (1993),page 10
  5. Bruce B. Campbell, Arthur David Brenner,” Death squads in global perspective: murder with deniability”(2002),page 271
  6. Thomas Bruce Millar,” The Commonwealth and the United Nations ”( 1967),page 26
  7. Sumit Ganguly, “Conflict unending: India-Pakistan tensions since 1947”(2001),page 154
  8. "KASHMIR QUESTIONS by A.G. NOORANI". Archived from the original on 2011-07-11. பார்க்கப்பட்ட நாள் 2016-11-16.
  9. "Jammu all set to celebrate accession day". சிஃபி. பார்க்கப்பட்ட நாள் 2007-12-31.

வெளி இணைப்புகள் தொகு