ஜான் இசுடோன்சு

ஜான் இசுடோன்சு (John Stones, 28 மே 1994) ஆங்கில தொழில்முறை கால்பந்தாட்ட வீரர். இவர் இங்கிலீஷ் பிரீமியர் லீக் கழகம் மான்செஸ்டர் சிட்டி அணியிலும் இங்கிலாந்து தேசிய அணியிலும் மையத் தடுப்பாட்ட வீரராகவும் சில நேரங்களில் வலதுசாரி தடுப்பாட்ட வீரராகவும் விளையாடுகிறார்.

ஜான் ஸ்டோன்ஸ்

2015இல் இசுடோன்சு எவர்டன் கால்பந்துக் கழகத்திற்கு ஆடியபோது
சுய தகவல்கள்
முழுப் பெயர்ஜான் ஸ்டோன்ஸ்[1]
பிறந்த நாள்28 மே 1994 (1994-05-28) (அகவை 29)[2]
பிறந்த இடம்பார்ன்சுலே, இங்கிலாந்து
உயரம்1.88 மீ (6அடி 2அங்)[3]
ஆடும் நிலை(கள்)தடுப்பாட்ட வீரர்
கழகத் தகவல்கள்
தற்போதைய கழகம்
மான்செஸ்டர் சிட்டி
எண்5
இளநிலை வாழ்வழி
2001–2011பார்ன்சுலே
முதுநிலை வாழ்வழி*
ஆண்டுகள்கழகம்தோற்.(கோல்)
2011–2013பார்ன்சுலே24(0)
2013–2016எவர்டன்77(1)
2016–மான்செஸ்டர் சிட்டி45(0)
பன்னாட்டு வாழ்வழி
2012–2013இங்கிலாந்து 19 கீழ்3(0)
2013இங்கிலாந்து 20 கீழ்2(0)
2013–2015இங்கிலாந்து 21 கீ12(0)
2014–இங்கிலாந்து28(2)
*கழக உள்ளூர் சுற்றுப் போட்டிகள் தோற்றங்களும் கோல்களும், 14:22, 24 சூன் 2018 (UTC) அன்று சேகரிக்கப்பட்டது.
‡ தேசிய அணிக்கான விளையாட்டுகளும் கோல்களும் 14:22, 24 சூன் 2018 (UTC) அன்று சேகரிக்கப்பட்டது.

இசுடோன்சு தமது கால்பந்தாட்ட வாழ்வை தன் பிறந்த ஊரின் பார்ன்சுலே கால்பந்துக் கழகத்தில் துவங்கினார்; மார்ச்சு 2012இல் 17ஆம் அகவையில் தமது முதல் ஆட்டத்தில் பங்கேற்றார். ஆங்கில பிரீமியர் கழகமான எவர்ட்டனில் ஏறத்தாழ £3 மில்லியனுக்கு சனவரி 2013இல் ஏற்கப்பட்டார். அடுத்த நான்கு பருவங்களில் 95 ஆட்டங்களில் பங்கேற்றார். ஆகத்து 2016இல் மான்செஸ்டர் சிட்டி கழகத்தில் £47.5 மில்லியன் துவக்கத்தொகைக்கு சேர்ந்தார். 2018இல் இவ்வணி இங்கிலீஷ் பிரீமியர் லீக் மற்றும் கால்பந்து கூட்டிணைவுக் கோப்பை போட்டிகளில் வாகைசூட பங்களித்தார்.

இங்கிலாந்தின் 19, 20, 21 அகவைக்கு கீழானோர் அணிகளில் பங்கேற்ற பின்னர் மூத்த அணியில் 2014இல் ஆடத்தொடங்கினார். யூரோ 2016 மற்றும் 2018 உலகக்கோப்பை காற்பந்து போட்டிகளுக்கான இங்கிலாந்து அணியில் இடம் பெற்றுள்ளார்.

பன்னாட்டுப் பங்களிப்புகள் தொகு

24 சூன் 2018. அன்று இருந்த தகவல்களின் படி[4][5]
தேசிய அணி ஆண்டு ஆட்டங்கள் கோல்கள்
இங்கிலாந்து 2014 4 0
2015 3 0
2016 8 0
2017 7 0
2018 6 2
மொத்தம் 28 2

பன்னாட்டு கோல்கள் தொகு

2018 சூன் 24 இல் விளையாடிய ஆட்டம் வரை. பின்வரும் பட்டியலில் ஆட்ட எண்ணிக்கை நிரலில் இங்கிலாந்தின் ஆட்ட எண்ணிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிரலில் ஸ்டோன் எடுத்த கோல் இங்கிலாந்தின் எந்த ஆட்ட எண்ணிக்கையின் பின்னர் எடுக்கப்பட்டது என்பதைக் குறிக்கிறது.[4]
பன்னாட்டு கோல்கள்
இல. நாள் அரங்கு Cap எதிராளி ஆட்ட எண்ணிக்கை முடிவு போட்டி மேற்.
1 24 சூன் 2018 நீசுனி நோவ்கோரத் அரங்கு, நீசுனி நோவ்கோரத், உருசியா 28   பனாமா 1–0 6–1 2018 உலகக்கோப்பை காற்பந்து [5]
2 4–0

மேற்கோள்கள் தொகு

  1. "Squads for 2017/18 Premier League confirmed". Premier League. 1 September 2017. பார்க்கப்பட்ட நாள் 11 November 2017.
  2. "John Stones". ESPN FC. பார்க்கப்பட்ட நாள் 15 May 2018.
  3. "J. Stones: Summary". Soccerway. Perform Group. பார்க்கப்பட்ட நாள் 15 May 2018.
  4. 4.0 4.1 "Stones, John". National Football Teams. Benjamin Strack-Zimmerman. பார்க்கப்பட்ட நாள் 24 June 2018. {{cite web}}: Cite has empty unknown parameter: |1= (help)
  5. 5.0 5.1 McNulty, Phil (24-06-2018). "England 6–1 Panama". BBC Sport. https://www.bbc.co.uk/sport/football/44439183. பார்த்த நாள்: 24-06-2018. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜான்_இசுடோன்சு&oldid=2721581" இலிருந்து மீள்விக்கப்பட்டது