ஜான் சுடேன்லி பிளாசுகெட்

ஜான் சுடேன்லி பிளாசுகெட் (John Stanley Plaskett)[2] (நவம்பர் 17, 1865 - அக்தோபர் 17, 1941) ஒரு கனடிய வானியலாளர் ஆவார்.

ஜான் சுடேன்லி பிளாசுகெட்
John Stanley Plaskett
பிறப்பு(1865-11-17)நவம்பர் 17, 1865
கிக்சன், ஒன்ஆரியோ, கனடா[1]
இறப்புஅக்டோபர் 17, 1941(1941-10-17) (அகவை 75)
எசுகுவிமால்ட் பிரித்தானிய கொலம்பியா, கனடா[1]
குடியுரிமைகனடியர்
துறைவானியல்
பணியிடங்கள்டொமினியன் வானியற்பியல் வான்காணகம்
விருதுகள்புரூசு பதக்கம் (1932)
பிளாவெல்லி பதக்கம் (1932)

இவர் எந்திர வினையாளராகப் (கம்மியராகப்) பணிபுரிந்தார். டொராண்டோ பல்கலைக்கழகத்தின் இயற்பியல் துறையில் இவருக்கு எந்திரத் தொழில்வினைஞராக அமர்த்தப்பட்டார். அப்போது ஆய்கருவிகளின் கட்டுமானப் பணியிலும் விரிவுரையின்போது செயல்முறை விளக்கப் பணியிலும் ஈடுபட்டார். இப்பணி தந்த ஊக்கத்தால் இவர் கணிதவியல், இயற்பியல் பட்டம் பயில தனது 30 ஆம் அகவையில் அப்பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். இவர் 1903 வரை அங்கே இருந்து வண்ண ஒளிப்படவியலில் ஆய்வு செய்தார்.

இவரது முறையான வானியல் வாழ்க்கை 1903 இல் ஒட்டாவாவில் உள்ல டொமினியன் வான்காணகத்தில் பணியாளராகச் சேரும்வரை தொடங்கவில்லை. இவர் கதிர்நிரலியல் இரும விண்மீன்களை ஆய்வு செய்து அவற்றின் ஆர விரைவுகளை அளந்தார். இவர் முதன்முதலாகப் பால்வெளியின் கட்டமைப்பை விரிவாகப் பகுப்பாய்வு செய்தவர் ஆவார்.[3] இவரது எந்திரவியல் பின்னணி இவர் பல கருவிகளை கட்டியமைக்க உதவியது. இவர் 1917 இல் பிரித்தானிய கொலம்பியாவின் விக்டோரியா நகரி இருந்த டொமினியன் வான்காணகத்தின் முதல் இயக்குநர் ஆனார். இதை ஒட்டாவாவில் இருந்த டொமினியன் வான்காணகத்துடன் குழப்பிக் கொள்ளக்கூடாது.

இவரது மகனாகிய, ஆரி கெம்ளே பிளாசுகெட்டும் வெற்றிகரமான வானியலாளராகத் திகழ்ந்து 1963 இல் அரசு வானியல் கழகப் பொற்பதக்கத்தைப் பெற்றுள்ளார். எனவே, பிளாசுகெட் குடும்பம் ஒன்றுக்கு மேற்பட்ட பதக்கம் பெற்று விளங்கியது. [4]

தகைமைகள் தொகு

விருதுகள்

  • அரசு வானியல் கழகப் பொற்பதக்கம் (1930)[5]
  • இரம்போர்டு பரிசு (1930)[6]
  • புரூசு பதக்கம் (1932)[7]
  • அமெரிக்கத் தேசிய அறிவியல் கல்விக்கழகத்தின் என்றி டிரேப்பர் பதக்கம் (1934)[8]
  • பிரித்தானியப் பேரரசு ஆணை (பி பே ஆ) (CBE)

இவரது பெயரிடப்பட்டவை

  • NRC-HIA பிளாசுகெட் ஆய்வுநல்கை[9]
  • நிலாவின் பிளாசுகெட் குழிப்பள்ளம்
  • பிளாசுகெட் மலை[10]
  • பிளாசுகெட் பதக்கம்[11]
  • குறுங்கோள் 2905 பிளாசுகெட் (இவரது மகன் எச். எச். பிளாசுகெட்டுடன் இணைந்து பெயரிடப்பட்டது)
  • பிளாசுகெட் விண்மீன்
  • பிளாசுகெட் இருப்பிடம் (பிரித்தானியக் கொலம்பியாவில் உள்ள எசுகுவிமால்ட் நகரில் இவரது வீடு கட்டியுள்ள தெரு)

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 Rice, Hugh S. (1976). "Plaskett, John Stanley". Collier's Encyclopedia 19. Ed. William D. Halsey. New York: Macmillan Educational Corporation. 
  2. Harold Spencer Jones (1942). "John Stanley Plaskett. 1865-1941". Obituary Notices of Fellows of the Royal Society 4 (11): 67–69. doi:10.1098/rsbm.1942.0007. 
  3. "Died this day", The Globe and Mail, October 16, 2004; page F-10
  4. "Presidential Address on the Award of the Gold Medal to Professor Harry Hemley Plaskett". Quarterly Journal of the Royal Astronomical Society 4: 176. 1963. Bibcode: 1963QJRAS...4..176.. http://articles.adsabs.harvard.edu/full/1963QJRAS...4..176. 
  5. "Winners of the Gold Medal of the Royal Astronomical Society". Royal Astronomical Society. பார்க்கப்பட்ட நாள் 24 February 2011.
  6. "Past Recipients of the Rumford Prize". American Academy of Arts and Sciences. Archived from the original on 27 செப்டம்பர் 2012. பார்க்கப்பட்ட நாள் 24 February 2011. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  7. "Past Winners of the Catherine Wolfe Bruce Gold Medal". Astronomical Society of the Pacific. பார்க்கப்பட்ட நாள் 24 February 2011.
  8. "Henry Draper Medal". National Academy of Sciences. பார்க்கப்பட்ட நாள் 24 February 2011.
  9. NRC-HIA Plaskett Fellowship / Bourse Plaskett de l'IHA-CNRC பரணிடப்பட்டது 2008-06-23 at the வந்தவழி இயந்திரம் at plaskett.hia-iha.nrc-cnrc.gc.ca
  10. http://geonames2.nrcan.gc.ca/cgi-bin/v8/sima_unique_v8?english?JBECO?C
  11. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2009-05-14. பார்க்கப்பட்ட நாள் 2017-04-18.

வெளி இணைப்புகள் தொகு