ஜியோவன்னி பாட்டிசுட்டா டோனதி

இத்தாலிய வானியலாளர்

ஜியோவன்னி பாட்டிசுட்டா டோனதி (Giovanni Battista Donati) இத்தாலிய ஒலிப்பு: [dʒoˈvanni baˈtista doˈnaːti] (16 திசம்பர் 1826, பைசா, இத்தாலி – 20செப்டம்பர் 1873, புளோரன்சு, இத்தாலி) ஓர் இத்தாலிய வானியலாளர் ஆவார்.[1]

ஜியோவன்னி பாட்டிசுட்டா டோனதி
ஜியோவன்னி பாட்டிசுட்டா டோனதி
பிறப்பு1826|12|16|df=yes
பைசா, இத்தாலி
இறப்பு1873|9|20|1826|12|16|df=yes
புளோரன்சு, இத்தாலி
தேசியம்இத்தலியர்
துறைவானியல்
விருதுகள்இலாலண்டே பரிசு (1858)

டோனதி பைசாவில் இருந்த பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். பின்னர் 1852 இல் புளோரன்சு வான்காணகத்தில் பணியில் சேர்ந்தார். இவர் 1864 இல் அதன் இயக்குநர் ஆனார்.[2]

இவர் விண்மீன்கள், சூரியன், குறுங்கோள்கள் ஆகியவற்றின் கதிர்நிரல் ஆய்வின் முன்னோடி ஆவார்.[2] இவர் 1860 ஜூலை 18 இல் முழுச்சூரிய ஒளிமறைப்பை சுபெய்னில் உள்ள தோரேபிளான்காவில் நோக்கினார். அதே ஆண்டில் உடுக்கணக் கதிர்நிரலியல் செய்முறைகளைத் தொடங்கினார். இவர் 1862 இல் Intorno alle strie degli spettri stellari எனும் தனிவரைவு நூலை வெளியிட்டார். இது இயற்பியல் முறையில் விண்மீன்களை வகைபடுத்த வழிவகுத்தது.[3]

இவர் வால்வெள்ளிகளின் கதிர்நிரலைப் பய்ன்படுத்தி அவற்றின் புறநிலை உட்கூறுகளைத் தீர்மானித்தார் குறிப்பாக, வால்வெள்ளி 1864b யின் கதிர்நிரலில் இவர் மூன்று உமிழ்வுக் கோடுகளைக் கண்டார். நான்கு ஆண்டுகள் கழித்து வில்லியம் அகின்சு அவை கரிமம் தனிமத்துக்கு உரியன என இனங்கண்டார். சூரியனை நெருங்கும்போது அதன் கதிர்நிரல் மாறுபடுவதைக் கண்டார், வெப்பத்தால் அது, சூரியனின் பட்டுத்தெறிக்கும் ஒளியை விட, தன் சொந்த ஒளியை வெளியிடுவதையுமெடுத்துக் கூறினார்: வால்வெள்ளியின் ஒரு பகுதியாவது வளிமமாக அமையவேண்டும் என்ற முடிவுக்கு வந்தார்.

இவர் 1854 முதல் 1864 வரையிலான கால இடைவெளியில் ஆறு புதிய குறுங்கோள்களைக் கண்டுபிடித்தார். இவற்றில் 1858 இல் கண்டுபிடித்த காட்சிக்கினிய C/1858 L1/வால்வெள்ளி டோனதியும் அடங்கும்.

வான்பொருள்களின் பெருஞ்சுடரொளியை ஆய்வுசெய்த இவர் இந்நிகழ்வு அண்ட வானிலையியல் எனும் தனியான துறையைச் சாரும் எனக் கூறினார். An investigation of the great aurora of February 4, 1872, led Donati to refer such phenomena to a distinct branch of science, designated by him “cosmical meteorology”.[3] என்றாலும் இக்கருப்பொருளைப் பற்றி மேலும் தொடர்ந்து ஆய்வு செய்யும் முன்பே அடுத்த ஆண்டு வியன்னா அறிவியல் மாநாட்டில் இவரைப் பீடித்த காலராவால் இறந்துவிட்டார்.[1][2]

தகைமை தொகு

  • நிலாவில் உள்ள டோனதி குழிப்பள்ளம் இவரது பெயர் இடப்பட்டுள்ளது
  • குறுங்கோள் 16682 டோனதி

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 Giovanni Battista DONATI பரணிடப்பட்டது 2011-09-27 at the வந்தவழி இயந்திரம். in G. F. Tricomi, Matematici italiani del primo secolo dello stato unitario, Memorie dell'Accademia delle Scienze di Torino. Classe di Scienze fisiche matematiche e naturali, serie IV tomo I, 1962.
  2. 2.0 2.1 2.2 Донати, Джанбатиста, Great Soviet Encyclopedia (in Russian)
  3. 3.0 3.1   ஒன்று அல்லது மேற்பட்ட முந்தைய வரிகள்  தற்போது பொது உரிமைப் பரப்பிலுள்ள நூலிலிருந்து உரையைக் கொண்டுள்ளது:  "Donati, Giovanni Battista". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th) 8. (1911). Cambridge University Press. 

வெளி இணைப்புகள் தொகு