ஜுர்கென் குர்த்ஸ்

இயற்பியல் மற்றும் கணிதவியலாளர்

பேராசிரியர் ஜுர்கென் குர்த்ஸ் (Jürgen Kurths) மார்ச் 11,1953 ஆம் ஆண்டு ஆரெண்ட்சீ/அல்த்மார்க் (Arendsee/Altmark) ஜெர்மனியில் பிறந்தார். இவர் சிறந்த இயற்பியல் மற்றும் கணிதவியலாளர். இவர் போட்ச்டம் தட்ப வெப்ப தாக்க ஆராய்ச்சி நிறுவனத்தில் (Potsdam Institute for Climate Impact Research) பல்துறை ஆராய்ச்சி மற்றும் வழிமுறைகள்(Transdisciplinary Concepts and methods) களத்தின் தலைவராகவும்[1], பெர்லினில் உள்ள ஹும்போல்ட்ட் பல்கலைகழகத்தில் (Humboldt University, Berlin) சீரற்ற இயற்பியல் துறையின் பேராசிரியாராகவும், இங்கிலாந்த்தில் உள்ள கிங்க்ஸ் காலேஜ் ஒப் அபெர்தீன் பல்கலைகழகத்தில் (Kings College of the Aberdeen University ,UK) சிக்கலான அமைப்புகள் உயிரியல் மற்றும் கணித உயிரியல் துறையில் ஆறாம் நூற்றாண்டின் தலைவராகவும் பணியாற்றுகிறார். இவர் சிக்கலான அமைப்புகள் கொண்ட சீரற்ற இயற்பியல் துறையில் மிக சிறந்த வல்லுநராவார். குறிப்பாக சிக்கலான அமைப்புகள் கொண்ட சீரற்ற இயக்கவியல், மற்றும் அவற்றின் பயன்பாடுகள் அதிலும் முக்கியமாக பூமியின் அமைப்பு, உடலியல், அமைப்புகள் உயிரியல் மற்றும் பொறியியல் துறையில் உள்ள சவாலான பிரச்சினைகள், பயன்பாடுகள் குறித்த இவரின் ஆராய்ச்சி கட்டுரைகள் புகழ் பெற்றவையாகும்.

ஜுர்கென் குர்த்ஸ்
பிறப்பு11 மார்ச்சு 1953 (அகவை 71)
Arendsee
படித்த இடங்கள்University of Rostock
பணிபல்கலைக்கழகப் பேராசிரியர்
விருதுகள்Fellow of the American Physical Society
அறிவியல் வாழ்க்கைப் போக்கு
துறைகள்இயற்பியல்
முனைவர் பட்ட மாணவர்கள்James Kwan Yau Ong, Andreas Müller, Marco Thiel, Ralf Engbert

வாழ்க்கை வரலாறு தொகு

ஜுர்கென் குர்த்ஸ் (Jürgen Kurths) ரோச்டோக் பல்கலைகழகத்தில் (University of Rostock) கணிதம் பயின்றார், தொடர்ந்து 1983 ஆம் ஆண்டு GDR அறிவியல் கழகத்தில் முனைவர் பட்டம் (கணிதம்) பெற்றார். அதை தொடர்ந்து ரோச்டோக் பல்கலைகழகத்தில் 1991 ஆம் ஆண்டு கோட்பாட்டு இயற்பியலிலும் முனைவர் பட்டம் பெற்றார். 1991 ல் மேக்ஸ்-ப்ளாங்க்சமூகத்தின் (Max-Planck-society) சிறப்பு திட்டத்தில், விஞ்ஞானிகள் குழு இயக்குனராக கிழக்கு ஜெர்மனியில் இருந்த விஞ்ஞானிகளால் தேர்வு செய்யபட்டார். அவர் சர்வதேச அளவில் பிரபலமான சீரற்ற இயக்கவியல் குழுவை உருவாக்கினார். இவர் போட்ச்டம் (Potsdam) பல்கலைகழகத்தில் 1991 ஆம் ஆண்டு கோட்பாட்டு இயற்பியல்/சீரற்ற இயக்கவியல் ஆராய்ச்சி களத்தில் தலைவராக பொறுப்பேற்றார். அங்கு அவர் அறிவியல் ஆசிரியர் கூட்டமைப்பின் தலைவராக (1996-1999) பதவி வகித்தார், மற்றும்உலகம் போற்றும் பல்துறை சிக்கலான இயக்கவியல் மையதின் (1994-2008) நிறுவன இயக்குனராவும் இருந்தார். அவர் லீப்னிஸ்-Kolleg Potsdam [2] நிறுவன இயக்குனர் ஆவார். 2008 ல் அவர் போட்ச்டம் தட்ப வெப்ப தாக்க ஆராய்ச்சி நிறுவனத்தில் பல்துறை ஆராய்ச்சி களத்ததை(சிக்கலான அமைப்புகளின் முன்னோக்குககளை பூமியியல் ஆராய்ச்சி மற்றும் பயன்பாடு) மீண்டும் உருவாக்க அழைக்கப்பட்டார். இவர் பெர்லினில் உள்ள ஹும்போல்ட்ட் பல்கலைகழகத்தில் (Humboldt University, Berlin) சீரற்ற இயற்பியல் துறையின் பேராசிரியாராகவும், 2009 ஆம் ஆண்டுல் இருந்து இங்கிலாந்த்தில் உள்ள கிங்க்ஸ் காலேஜ் ஒப் அபெர்தீன்ல் (Kings College of the Aberdeen University ,UK) சிக்கலான அமைப்புகள் உயிரியல் மற்றும் கணித உயிரியல் துறையில் ஆறாம் நூற்றாண்டின் தலைவராகவும் பணியாகிறார்.

ஆராய்ச்சி தாக்கவிளைவு தொகு

1980லில், நேர தொடர் பகுப்பாய்வு மற்றும் அதன் பயன்பாடுசூரிய நடவடிக்கை நிகழ்வுகள் குறித்த ஆராய்ச்சி மேலும் விரிவடியந்து சீரற்ற இயற்பியல் துறையில் ஆர்வம் அடைந்தார். புதிய ஒத்திசைத்தல் நிகழ்வுகள், மறுநிகழ்வு, ஓரியல்பு அதிர்வலை, சிக்கலான மற்றும் காரணகாரிய தொடர்பு நடவடிக்கைகள் மற்றும் இயக்கவியல் மற்றும் சிக்கலான வலையமைப்புகளின் ஸ்திரத்தன்மை குறித்த இவரின் ஆராய்ச்சி கட்டுரைகள் புகழ் பெற்றவையாகும். இதுவே பின்னாளில் சிக்கலான அமைப்புகள் கோட்பாடு மற்றும் பூமியின் அமைப்பை பயன்பாடுகள், மற்றும் மனிதமூளைஅமைப்பு மற்றும் நுரை ஈரல் அமைப்பு மற்றும் சிக்கலான உயர் நிலை கொண்டிருக்கும் பிற அமைப்புகள் குறித்த ஆராய்ச்சிக்கு வழி வகுத்தது. ஜுர்கென் குர்த்ஸ் உடன் பல அறிவியல் கூட்டு ஆராய்ச்சியாளர்கள் இணைந்துள்ளனர், அதில் 20க்கும் மேற்பட்ட நாட்டிலிருந்து வந்த 60 க்கும் மேற்பட்ட ஆராய்ச்சி மாணவர்கள் இருக்கிறார்கள். இப்பொழுது, அவர்களில் 30க்கும் மேற்பட்டோர் பல நாடுகளில் தகுதியான இடங்களில் பணிபுரிகின்றனர். அவர் 500 க்கும் மேற்பட்ட கட்டுரைகள் மற்றும் 8 புத்தகங்களை வெளியிட்டுள்ளார். தற்போது இவர் 10 அறிவியல் இதழ்களின் ஆசிரியர் குழுவில் உள்ளார். அவை CHAOS, Philosoph.Trans. Royal Soc. A, PLoS ONE, Europ. J. Physics ST, J. Nonlinear Science and Nonlinear Processes in Geophysics and of the Springer Series Complexity.

சர்வதேச அறிவியல் நடவடிக்கைகள் தொகு

ஜுர்கென் குர்த்ஸ் பல சர்வதேச அறிவியல் நடவடிக்கைகளின் தலைவராக பதவி வகித்துள்ளார். அவற்றில் புவி அறிவியல் பிரிவு EGU சீரற்ற இயக்கவியல் செயல்முறையின் (2000-2005) தலைவர் பொறுப்புவகித்தார். சர்வதேச கூட்டு ஆராய்ச்சி மேம்படுத்துவதற்கான அவரது முயற்சிகள் அவருக்கு ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் DFGயின் பல பெரிய திட்டங்களுக்கு ஒருங்கிணைப்பளராக மற்றும் 2011ல் இருந்து சிக்கல் வாய்ந்த வலையமைப்புகள் சர்வதேச ஆராய்ச்சி பயிற்சி பிரிவு (DFG மற்றும் பிரேசில்) பேச்சாளராக தேர்வுசெய்யப்பட்டார்.[3]

விருதுகள் தொகு

ஜர்கன் குர்த்ஸ் அமெரிக்க இயற்பியல் கூட்டமைப்பு மற்றும் ஃப்ரான்ஹோஃபர் கூட்டமைப்பு (ஜெர்மனி) உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2005 ஆம் ஆண்டு, அவருக்கு அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலிருந்து(CSIR), இந்தியா, அலெக்சாண்டர் வோன் ஹம்போல்ட் (Alexander von Humboldt) ஆராய்ச்சி விருது கிடைத்தது. அவர் 2010 இல் யூரோப்பியா கல்வித்துறை (the Academia Europaea) மற்றும் மாஸிடோனியன் அகாடமியின் கலை மற்றும் அறிவியல் (the Makedonian Academy of Sciences and Arts) உறுப்பினரானார். Nizhny Novgorod இல் உள்ள Lobachevsky பல்கலைக்கழகம் மற்றும் Chernishevsky பல்கலைக்கழகம், Saratov அவருக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்கியது. அவர் போட்ச்டம் (Potsdam) பல்கலைக்கழகத்தில் கெளரவ பேராசிரியராக மற்றும் நான்ஜிங் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் (Southeast University in Nanjing) விருந்தினர் பேராசிரியராகவும் பொறுப்பு வகிக்கிரார். அவர் 2013 இல் ஐரோப்பிய புவி அறிவியல் ஒன்றியதில் லூயிஸ் ஃப்ரை ரிச்சர்ட்சன் (the Lewis Fry Richardson Medal) பதக்கம் பெற்றார் (http://www.egu.eu/awards-medals/lewis-fry-richardson/2013/jurgen-kurths/).

அவரின் தேர்வு செய்யப்பட்ட சில முக்கிய ஆராய்ச்சி கட்டுரைகள் தொகு

  • J. Kurths, A. Voss, P. Saparin, Quantitative Analysis of Heart Rate Variability, CHAOS 5, 88-94 (1995)
  • M.G. Rosenblum, A.S. Pikovsky and J. Kurths, Phase Synchronization of Chaotic Oscillators, Phys. Rev. Lett. 76, 1804-1807(1996)
  • A.S. Pikovsky and J. Kurths, Coherence Resonance in a Noise-Driven Excitable System, Phys. Rev. Lett. 78, 775-778 (1997)
  • C. Schдfer, M.G. Rosenblum, J. Kurths and H. Abel, Heartbeat synchronized with ventilation, NATURE 392, 239-240 (1998)
  • A. Pikovsky, M. Rosenblum and J. Kurths, Synchronization: A Universal Concept in Nonlinear Sciences (Cambridge University Press, 2001)
  • S. Boccaletti, J. Kurths, G. Osipov, D. Valladares and C. Zhou, The Synchronization of Chaotic Systems, Phys. Rep. 366, 1-101 (2002)
  • C.S. Zhou, A.E. Motter and J. Kurths, Universality in the Synchronization of Weighted Random Networks, Phys. Rev. Lett. 96, 034101 (2006)
  • N. Marwan, M. Romano, M. Thiel and J. Kurths, Recurrence Plots for the Analysis of Complex Systems, Phys. Rep. 438, 240-329 (2007)
  • P. van Leeuwen, D. Geue, M. Thiel, D. Cysarz, S. lange, M. Romano, N. Wessel, J. Kurths and D. Grцnemeier, Influence of paced maternal breathing on fetal-maternal heart rate coordination, Proc. Nat. Acad. Sc. U.S.A. 106, 13661-13666 (2009) (incl. a commentary about)
  • J. Donges, N. Marwan, Y. Zou and J. Kurths, The backbone of the climate network, Europhys. Lett. 87, 48007 (2009).
  • Ye Wu, Changsong Zhou, Jinghua Xiao, J. Kurths, and Hans Joachim Schnellhuber ,PNAS 2010 107 (44) 18803-18808 (2010)
  • P.J. Menck, J. Heitzig, N. Marwan and J. Kurths: How basin stability complements the linear stability paradigm, Nature Physics 9, 89-92 (2013).

குறிப்புகள் தொகு

  1. http://www.pik-potsdam.de/members/kurths
  2. http://www.leibniz-kollegpotsdam.de/
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-10-04. பார்க்கப்பட்ட நாள் 2013-09-18.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜுர்கென்_குர்த்ஸ்&oldid=3573198" இலிருந்து மீள்விக்கப்பட்டது