ஜெனிதக் மாவட்டம்

ராஜ்பாரி மாவட்டம் (Rajbari District) (வங்காள மொழி: ঝিনাইদহ) தெற்காசியாவின் வங்காளதேச நாட்டின் அறுபத்தி நான்கு மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டம் குல்னா கோட்டத்தில் அமைந்துள்ளது. வங்காளதேசத்தின் மையத்தில் அமைந்த இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் ராஜ்பாரி நகரம் ஆகும்.

வங்காளதேசத்தில் ராஜ்பாரி மாவட்டத்தின் அமைவிடம்

மாவட்ட எல்லைகள் தொகு

இம்மாவட்டத்தின் வடக்கில் பப்னா மாவட்டம், தெற்கில் மகுரா மாவட்டம் மற்றும் பரித்பூர் மாவட்டங்களும், கிழக்கில் மணிகஞ்ச் மாவட்டமும், குஸ்தியா மாவட்டம் மற்றும் ஜெனிதக் மாவட்டங்களும் மேற்கில் குஸ்தியா மாவட்டம் மற்றும் ஜெனிதக் மாவட்டங்களும் எல்லைகளாக உள்ளது.

மாவட்ட நிர்வாகம் தொகு

1092.28 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட மாவட்டத்தை நிர்வாக வசதிக்காக ராஜ்பாரி சதர், கோலோந்தா, பங்க்சா, பாலியாகண்டி, மற்றும் காளகாளி என ஐந்து துணை வருவாய் துணை மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

மேலும் இம்மாவட்டத்தில் மூன்று நகராட்சி மன்றங்களும், நாற்பத்தி இரண்டு கிராம ஒன்றியக் குழுக்களும், 720 வருவாய் கிராமங்களும், 967 கிராமங்களும் உள்ளது.[1]

இம்மாவட்டத்தின் அஞ்சல் சுட்டு எண் 7700 ஆகும். தொலைபேசி குறியிடு 0641 எண் ஆகும் . இம்மாவட்டம் இரண்டு நாடாளுமன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது.

இம்மாவட்டத்தின் ஆண்டு சராசரி வெப்பம் செல்சியஸ் ஆகவும்; ஆண்டு சராசரி மழைப் பொழிவு 2105 மில்லி மீட்டராகவும் உள்ளது.

பொருளாதாரம் தொகு

இம்மாவட்டத்தில் பத்மா ஆறு, சந்த்னா ஆறு, சித்திரா ஆறு, ஹோரை ஆறு, கோரை ஆறு, மதுமதி ஆறு, குமார் ஆறு போன்ற வற்றாத ஆறுகள் பாய்வதால், நீர் வளமும் மண் வளமும் கூடியதாக உள்ளது. இங்கு நெல், சணல், கரும்பு, வெங்காயம், பருப்பு வகைகள், பருத்தி, வாழை, தென்னை, வெள்ளைப்பூண்டு, எண்ணெய் வித்துக்கள், பலா, விளாச்சி முதலியன பயிரிடப்படுகிறது. [2]

மக்கள் தொகையியல் தொகு

1092.28 சதுர கிலோ மீட்டர் பரப்பு கொண்ட இம்மாவட்டத்தின் 2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி (இறுதி முடிவு அறிவிக்கப்படவில்லை) மக்கள் தொகை 10,49,778 ஆக உள்ளது. அதில் ஆண்கள் 5,19,999 ஆகவும், பெண்கள் 5,29,779 ஆகவும் உள்ளனர். ஆண்டு மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 0.97% ஆக உள்ளது. பாலின விகிதம் 98 ஆண்களுக்கு 100 பெண்கள் வீதம் உள்ளனர். மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 961 நபர்கள் வீதம் வாழ்கின்றனர். மாவட்ட சராசரி எழுத்தறிவு 52.3% ஆக உள்ளது.[3]இம்மாவட்டத்தின் பெரும்பாலான மக்கள் இசுலாமிய சமயத்தைப் பின்பற்றுபவர்களாகவும், வங்காள மொழியைப் பேசுபவர்களாகவும் உள்ளனர்.

கல்வி தொகு

வங்காளதேசத்தின் பிற மாவட்டங்களைப் போன்று, இம்மாவட்டத்திலும் நான்கு படிகள் கொண்ட கல்வி அமைப்பு உள்ளது. அவைகள்: ஐந்தாண்டு படிப்புகள் கொண்ட தொடக்கப் பள்ளிகளும் (கிரேடு 1 – 5), ஐந்தாண்டு படிப்புகள் கொண்ட இடைநிலைப் பள்ளிகளும் (கிரேடு 6 – 10), இரண்டாண்டு படிப்பு கொண்ட மேனிலைப் பள்ளிகளும் (கிரேடு 11 – 12), நான்கு ஆண்டு படிப்பு கொண்ட இளநிலை பட்டப் படிப்பு மற்றும் ஒராண்டு கால முதுநிலை பட்டப் படிப்பு கொண்ட பல்கலைக்கழகங்களும், கல்லூரிகளும் உள்ளது. வங்காள மொழியுடன், ஆங்கில மொழியும் அனைத்து நிலைகளிலும் கற்பிக்கப்படுகிறது.

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெனிதக்_மாவட்டம்&oldid=2177595" இலிருந்து மீள்விக்கப்பட்டது