ஜென்னி மெக்லொக்லின்

ஜென்னி மெக்லொக்லின் (Jenny McLoughlin) (பிறப்பு: 1991 அக்டோபர் 3) இவர் ஓர் பிரிட்டிசு இணை ஒலிம்பிக்கில் விளையாடும் தடகள வீரராவார். முக்கியமாக டி 37 வகை விரைவோட்ட நிகழ்வுகளில் போட்டியிடுகிறார். இவர் 2008 கோடைகால இணை ஒலிம்பிக்கிலும், 2012 இலண்டனில் நடந்த கோடைகால இணை ஒலிம்பிக்கிலும் பிரித்தனைப் பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார். தனது 14 வயதில் வேல்சுக்குச் சென்ற பிறகு, பொதுநலவாய விளையாட்டுக்களுக்கான வேல்சு அணியில் சேர தகுதி பெற்றார். இந்தியாவில் டி 37 வகைப் பிரிவில் விரவோட்டத்தில் வெள்ளியை வென்றார்.

ஜென்னி மெக்லொக்லின்
தனிநபர் தகவல்
பிறந்த பெயர்ஜென்னி மெக்லொக்லின்
தேசியம்பிரித்தானியர்
பிறப்பு3 அக்டோபர் 1991 (1991-10-03) (அகவை 32)
இஸ்டாக்போர்ட், இங்கிலாந்து
விளையாட்டு
நாடுவேல்சு, பிரித்தானியா
விளையாட்டுதடகளம்
நிகழ்வு(கள்)டி37 விரைவோட்டம்
கழகம்வேல்சு மாற்றுத் திறனாளிகளுக்கான
விளையாட்டுச் சங்கம், கார்டிஃப்
பயிற்றுவித்ததுகீத் அன்டோயின்
சாதனைகளும் விருதுகளும்
மாற்றுத் திறனாளர் இறுதி2008, 2012
தனிப்பட்ட சாதனை(கள்)100மீ: 14.63நி
200மீ: 29.98நி
பதக்கத் தகவல்கள்
மகளிர் தடகளம்
நாடு  வேல்சு
பொதுநலவாய விளையாட்டுக்கள்
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 2010 தில்லி 100 மீ ஓட்டம்
நாடு  பெரிய பிரித்தானியா
இணை ஒலிம்பிக் விளையாட்டுக்கள்
வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம் 2012 இலண்டன் 4x100மீ ரிலே
ஐபிசி உலகப்போட்டிகள்
வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம் 2011 கிறைஸ்ட்சேர்ச் 4x100மீ ரிலே
ஐபிசி ஐரோப்பியப் போட்டிகள்
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 2012 ஸ்டாட்கனால் 200 மீ
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 2014 சுவான்சீ 100மீ

வரலாறு தொகு

இவர் 1991 இல் இங்கிலாந்தின் ஸ்டாக்போர்ட்டில் பிறந்தார். பெருமூளை வாதம் கொண்ட இவர், 2005 ஆம் ஆண்டில் இவரது குடும்பம் வேல்சுக்கு குடிபெயர்ந்தபோது ஒரு தடகள சங்கத்தில் சேர்ந்தார். [1] பின்னர், இவர் ஒரு தடகள அணியிலும் சேர்ந்தார். மேலும், 2007 ஆம் ஆண்டில் தனது பயிற்சி மைதானத்தை கார்டிஃபுக்கு மாற்றினார். அந்த ஆண்டு இங்கிலாந்து பள்ளிகளுக்கான விளையாட்டுகளில் தங்கத்தை கைப்பற்றினார். 2008 ஆம் ஆண்டில் பெய்ஜிங்கில் நடந்த கோடைகால இணை ஒலிம்பிக்கில் டி 37 வகையில் 100 மீட்டரிலும், 200 மீட்டரிலும் கலந்து கொண்டார். 200 மீட்டரில் முதல் முறை தவறிய இவர் இரண்டாவது தடவை இலக்கை எட்டினார். இதில் 7 வது இடத்தைப் பிடித்தார். [2]

2009 ஆம் ஆண்டில், இவர் பிரிட்டனில் நடந்த விளையாட்டுகளில் தொடர்ந்து போட்டியிட்டார். மேலும் நொட்டிங்காமில் நடந்த சிபி ஸ்போர்ட் கிராண்ட் பிரிக்ஸில் 100 மீட்டரில் 15.14 விநாடிகளும், 200 மீட்டரில் 31.98 விநாடிகள் என தனது இரண்டு சிறந்த நேரங்களை பதிவு செய்தார். [2]

பொதுநலவாய விளையாட்டுக்கள் தொகு

2010 இல் வேல்சில் வசித்த இவர், தில்லியில் 2010 பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் வேல்சு அணியில் சேர அழைக்கப்பட்டார். இவர் டி 37வகை விரைவோட்டத்தில் போட்டியிட்டார். இவரது தனிப்பட்ட சிறந்த நேரமான 14.68 வினாடிகளுக்கு சமமானார். இதன் விளைவாக இவருக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது. 2010 ஆம் ஆண்டில் இவர், தனது ஏ தர நிலைகளை முடித்தார். இது கார்டிஃப் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற அனுமதித்தது. [1]

உலக தடகளப் போட்டிகள் தொகு

நியூசிலாந்தின் கிறைஸ்ட்சேர்ச்சில் நடைபெற்ற 2011 ஐபிசி உலக தடகளப் போட்டியில் 100 மீட்டர், 200 மீட்டர் ஆகிய இரண்டிலும் பிரிட்டனைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். இவர் தனிப்பட்ட முறையில் 14.99 விநாடிகளில் ஓடிய பிறகு 100 மீட்டர் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார். மேலும் இறுதிப் போட்டியில் 14.78 வினாடிகளில் முன்னேறியிருந்தாலும், இவர் 7 வது இடத்தையேப் பிடித்தார். [2] 200 மீட்டர் ஓட்டத்தில் இவர் 8 வது இடத்தைப் பிடித்தார்.

கோடைக்கால இணை ஒலிம்பிக் விளையாட்டுக்கள் தொகு

சூலை மாதம் நடந்த சாம்சங் டயமண்ட் போட்டிகளில் 200 மீட்டர் ஓட்டத்தில் முன்னேறினார். ஜெர்மனி தேசிய இணை ஒலிம்பிக் போட்டிகளில் 14.68 விநாடிகளில் வந்ததின் விளைவாக தனது 100 மீட்டர் தனிப்பட்ட சிறப்பையும் மேம்படுத்தினார். இந்த முடிவுகள் இவரை இலண்டனில் நடைபெற்ற 2012 கோடைகால இணை ஒலிம்பிக்கிற்குத் தகுதி பெற உதவியது. இங்கு பிரிட்டனை டி37 வகை 100 மற்றும் 200 மீட்டரில் பிரதிநிதித்துவப்படுத்தினார். மேலும்,100 மீ ரிலேயின் ஒரு பகுதியாக இருந்தார்.

2013 ஆம் ஆண்டில், ஐபிசி உலகப் போட்டிகளில் காயம் காரணமாக வெளியேற்றப்பட்டார். இருப்பினும், 2014 ஆம் ஆண்டில், ஐபிசி ஐரோப்பியப் போட்டிகளில் நம்பகமான ஐந்தாவது இடத்தைப் பிடித்தார்., ஒரு மாதத்திற்குப் பிறகு 14.34 விநாடிகள் என்ற புதிய இவருக்கான ரிலேவில் அதிக பதக்க வெற்றியைப் பெற்றார். ஏனெனில் இவர் ஒலிவியா பிரீன், பெத்தானி உட்வார்ட் மற்றும் சோபி ஹான் ஆகியோருடன் டி35-38 ரிலே அணியை 53.84 என்ற பிரிட்டிசு சாதனையில் வெள்ளியை பெற உதவினார்.

குறிப்புகள் தொகு

  1. 1.0 1.1 "Jenny McLoughlin". paralympics.org.uk. Archived from the original on 9 July 2016. பார்க்கப்பட்ட நாள் 26 August 2012.
  2. 2.0 2.1 2.2 "Jenny McLoughlin". thepowerof10.info. பார்க்கப்பட்ட நாள் 26 August 2012.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜென்னி_மெக்லொக்லின்&oldid=3842295" இலிருந்து மீள்விக்கப்பட்டது