ஜெயந்தியா இராச்சியம்

ஜெயந்தியா இராச்சியம், இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் தற்கால மேகாலயா மாநிலத்தில் 1500இல் நிறுவப்பட்ட மன்னராட்சிப் பகுதியாகும். இதன் தலைநகர் ஜெயந்தியா மலைகளின் அடிவாரத்தில் உள்ள ஜெயந்தியாபூர் நகரம் ஆகும். இந்த இராச்சியத்தை நிறுவியவர் பிரபாத் ராய் ஆவார். 1835இல் ஆங்கிலேய கம்பெனி ஆட்சிப் பகுதியில் ஜெயந்தியா இராச்சியம் இணைக்கப்பட்டது.

ஜெயந்தியா இராச்சியம்
1500–1835
தலைநகரம்ஜெயந்தியா இராஜ்பாரி
ஜெயந்தியாபூர்
சமயம்
இந்து சமயம்
அரசாங்கம்முடியாட்சி
• 1500–1516
பிரபாத் ராய்
• 1832–1835
இஜேந்திர சிங்
வரலாறு 
• தொடக்கம்
1500
• முடிவு
1835
பின்னையது
}
[[கம்பெனி ஆட்சி]]

வரலாறு தொகு

துர்கையின் வேறு பெயர்களான ஜெயந்தி தேவி அல்லது ஜெயந்தீஸ்வரி பெயரால் இந்த இராச்சியம் அழைக்கப்பட்டது. [1]

விரிவாக்கம் தொகு

ஜெயந்தியா இராச்சியம் சில்லாங் பீடபூமியின் தெற்கிலும் மற்றும் வடக்கில் அசாமின் பராக் ஆற்றுச் சமவெளி வரை விரிவுபடுத்தப்பட்டது.

வரலாறு தொகு

ஜெயந்தியா இராச்சியத்தின் துவக்கம் அறியப்படவில்லை. ஆனால் ஜெயந்தியா மக்கள், காரோ பழங்குடியினர் மற்றும் காசி பழங்குடியினர்களுடன் தொடர்புடையவர்கள். 17ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஜெயந்தியா இராச்சியம், ஆங்கிலேய-பர்மியப் போரின் முடிவில், ஜெயந்தியா மன்னர், சுர்மா ஆற்றின் வடபுரப் பகுதியை ஆள கம்பெனி ஆட்சியாளர்களால் அனுமதிக்கப்ட்டார். பின்னர் 15 மார்ச் 1835இல் ஜெயந்தியா இராச்சியத்தின் அனைத்துப் பகுதிகளும் கம்பெனி ஆட்சியில் இணைக்கப்பட்டது.

ஆட்சியாளர்கள் தொகு

  • பிரபாத் ராய் (1500–1516)
  • மஜ்ஜா கோசைன் (1516–1532)
  • புர்கா பர்பாத் ராய் (1532–1548)
  • பார் கோசைன் (1548–1564)
  • விஜய் மாணிக் (1564–1580)
  • பிரபாத் ராய் (1580–1596)
  • தன் மாணிக் (1596–1612)
  • ஜஸ்சா மாணிக் (1612–1625)
  • சுந்தர் ராய் (1625–1636)
  • சோட்டா பிரபாத் ராய் (1636–1647)
  • ஜஸ்மந்தா ராய் (1647–1660)
  • பான் சிங் (1660–1669)
  • பிரதாப் சிங் (1669–1678)
  • இலக்குமி நாராணன் (1678–1694)
  • முதலாம் இராம் சிங் (1694–1708)
  • ஜெய் நாராயணன் (1708–1731)
  • பார் கோசைன் (1731–1770)
  • சத்திர சிங் (1770–1780)
  • விஜய் நாராயணன் (1780–1790)
  • இரண்டாம் இராம் சிங் (1790–1832)
  • இராஜேந்திர சிங் (1832–1835)

அடிக்குறிப்புகள் தொகு

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெயந்தியா_இராச்சியம்&oldid=2226586" இலிருந்து மீள்விக்கப்பட்டது