ஜேடன் சிமித்

ஜேடன் கிறிஸ்டோபர் சைர் சிமித் (ஆங்கில மொழி: Jaden Christopher Syre Smith) (பிறப்பு: சூலை 8, 1998) என்பவர் அமெரிக்க நாட்டு சொல்லிசையாளர், நடிகர் மற்றும் பாடகர் ஆவார். இவர் இதுவரையிலும் கிராமி விருது, இரண்டு நாகிப் பட விருதுகள் மற்றும் ஒரு எம்பயர் விருதுக்கான பரிந்துரைகளில் யூடியூப் கிரியேட்டர் விருது, எம் டிவி திரைப்பட விருது, பெட் விருது மற்றும் இளம் கலைஞர் விருது உள்ளிட்ட பல்வேறு பாராட்டுகளைப் பெற்றுள்ளார்.

ஜேடன் சிமித்
பிறப்புஜேடன் கிறிஸ்டோபர் சைர் சிமித்
சூலை 8, 1998 ( 1998 -07-08) (அகவை 25)
மாலிபு, கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா
பணிநடிகர், சொல்லிசை, பாடகர்
செயற்பாட்டுக்
காலம்
2002–இன்று வரை
பெற்றோர்வில் சிமித்
ஜடா பிங்கெட் சிமித்

இவர் 2006 ஆம் ஆண்டு இவரது தந்தை மற்றும் நடிகர் வில் சிமித் என்பவருடன் இணைந்து த பேர்சுயிட் ஒப் கப்பினஸ் என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அதை தொடர்ந்து 2013 ஆம் ஆண்டில் ஆஃப்டர் ஏர்த் என்ற படத்திலும் இணைந்து நடித்துள்ளார்.

ஆரம்பகால வாழ்க்கை தொகு

இவர் சூலை 8, 1998 ஆம் ஆண்டில் கமாலிபு, கலிபோர்னியாவில்[1][2] பிரபல நடிகர் வில் சிமித் மற்றும் நடிகை ஜடா பிங்கெட் சிமித் ஆகியோருக்கு மகனாக பிறந்தார். இவருக்கு வில்லோ சிமித்[3] என்ற ஒரு தங்கையும், 'டிரே சிமித்' என்ற ஒரு மூத்த அரை சகோதரரும் உண்டு.[4]

திரைப்பட வாழ்க்கை தொகு

இவர் 2006 இல் தனது தந்தை வில் சிமித் வுடன் சேர்ந்து த பேர்சுயிட் ஒப் கப்பினஸ் என்ற திரைப்படத்தில் நடித்தார்.[5] இந்த திரைப்படத்தில் நடித்ததற்காக 2007 எம்டிவி திரைப்பட விருதை வென்றார். அதை தொடர்ந்து 2008 ஆம் ஆண்டு 'த டே தி எர்த் ஸ்டுட் ஸ்டில்' என்ற திரைப்படத்தில் நடித்தார், இந்த திரைப்படம் 1951 ஆம் ஆண்டு வெளியான 'த டே தி எர்த் ஸ்டுட் ஸ்டில்' என்ற திரைப்படத்தின் மறுதயாரிப்பு ஆகும்.

2010 ஆம் ஆண்டு நடிகர் ஜாக்கி சான் உடன் சேர்ந்து 'த கராத்தே கிட்'[6] என்ற திரைப்படத்தில் நடித்தார். மே 2013 இல் மீண்டும் இவரது தந்தை வில் சிமித் வுடன் சேர்ந்து ஆஃப்டர் ஏர்த் என்ற படத்தில் நடித்தார். இந்த திரைப்படத்தை எம். நைட் ஷியாமளன் இயக்கியுள்ளார்.

திரைப்படங்கள் தொகு

தொலைக்காட்சி தொகு

  • 2003-2004: ஆல் ஒப் Us
  • 2008: த சூட் லைஃப் ஆப் ஜேக் & கோடி

இசை வீடியோக்கள் தொகு

  • 2008: அலீசியா கீசு - சூப்பர் பெண்
  • 2010: வில்லோ ஸ்மித்
  • 2013: மேலோடிக் சோடிக்

மேற்கோள்கள் தொகு

  1. "Jaden Smith Biography" பரணிடப்பட்டது சூன் 17, 2014 at the வந்தவழி இயந்திரம். Biography. Retrieved June 1, 2014.
  2. The Associated Press (June 29, 2009). "Today in History". Seattle Times இம் மூலத்தில் இருந்து July 18, 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20120718202110/http://seattletimes.nwsource.com/html/nationworld/2009397550_aphistoryjuly8.html. 
  3. "Willow Smith Biography" பரணிடப்பட்டது சனவரி 25, 2016 at the வந்தவழி இயந்திரம் . The Biography Channel Retrieved June 1, 2014.
  4. Goldstein, Sasha (November 11, 2013). "Will Smith and Jada Pinkett Smith get touchy in Las Vegas as cheating rumors swirl" பரணிடப்பட்டது நவம்பர் 26, 2013 at the வந்தவழி இயந்திரம். Daily News (New York).
  5. "Jackie Chan praises kung fu of Will Smith's son". Associated Press இம் மூலத்தில் இருந்து July 28, 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090728043125/http://www.google.com/hostednews/ap/article/ALeqM5gv6vArHdsb65kFMX1hAeC25Uum1QD99GK8E00. 
  6. Fox, Erin (November 11, 2008). "Jaden Smith to Take On Karate Kid Redo" பரணிடப்பட்டது சூன் 10, 2009 at the வந்தவழி இயந்திரம் . TV Guide.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜேடன்_சிமித்&oldid=3495063" இலிருந்து மீள்விக்கப்பட்டது