ஜேன் ஃபோண்டா

அமெரிக்க நடிகை

ஜேன் சீமோர் ஃபோண்டா (ஆங்கிலம்: Jane Seymour Fonda[1] பிறப்பு: டிசம்பர் 21, 1937) [2] ஒரு அமெரிக்க நடிகை, அரசியல் ஆர்வலர் மற்றும் முன்னாள் விளம்பர மாதிரி ஆவார். இரண்டு அகாதமி விருதுகள், இரண்டு பிரித்தானிய அகாடமி திரைப்பட விருதுகள், ஏழு கோல்டன் குளோப் விருதுகள், பிரைம் டைம் எம்மி விருது, ஏ.எஃப்.ஐ வாழ்க்கை சாதனை விருது மற்றும் கௌரவ கோல்டன் லயன் உள்ளிட்ட பல்வேறு பாராட்டுகளைப் பெற்றுள்ளார். [3]

ஜேன் ஃபோண்டா
பிறப்பு21 திசம்பர் 1937 (அகவை 86)
நியூயார்க்கு நகரம்
படித்த இடங்கள்
  • John Thomas Dye School
பணிதிரைப்பட நடிகர், நடிகர், திரைப்படத் தயாரிப்பாளர், television actor, சுயசரிதையாளர், voice actor
வாழ்க்கைத்
துணை/கள்
Roger Vadim, Tom Hayden, டெட் டேர்னர்
குழந்தைகள்Vanessa Vadim, Troy Garity, Mary Williams
குடும்பம்Peter Fonda
விருதுகள்சிறந்த நடிகைக்கான அகாதமி விருது, சிறந்த நடிகைக்கான அகாதமி விருது, Theatre World Award, California Hall of Fame, AFI Life Achievement Award, Commandeur des Arts et des Lettres‎, கோல்டன் குளோப் விருது, எம்மி விருது, BAFTA Award for Best Actress in a Leading Role, BBC 100 Women, Primetime Emmy Award for Outstanding Lead Actress in a Miniseries or a Movie, Hasty Pudding Woman of the Year
இணையம்https://www.janefonda.com

நடிகர் ஹென்றி ஃபோண்டா மற்றும் சமூகவாதியான பிரான்சிஸ் ஃபோர்டு சீமோர் ஆகிய தம்பதியினருக்கு பிறந்த ஃபோண்டா, 1960 ஆம் ஆண்டு பிராடுவே அரங்கு நாடகமான தேர் வாஸ் எ லிட்டில் கேர்ள் மூலம் நடிகராக அறிமுகமானார். இதில் நடித்ததற்காக இவர் சிறந்த நாடக நடிகைக்கான டோனி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார். மேலும் அதே ஆண்டின் பிற்பகுதியில் காதல் நகைச்சுவைத் திரைப்படமான டால் ஸ்டோரி எனும் திரைப்படத்தில் அறிமுகமானார். 1962 ஆம் ஆண்டில் பீரியட் ஆஃப் அட்ஜஸ்ட்மென்ட் 1963 ஆம் ஆண்டில் சண்டே இன் நியூயார்க் 1965 இல் கேட் பல்லூ 1967 ஆம் ஆண்டில் பேர்ஃபுட் இன் தெ பார்க் மற்றும் 1968 ஆம் ஆண்டில் வெளியான பார்பரெல்லா போன்ற திரைப் படங்களில் இவர் நடித்ததன் மூலம் பரவலாக அறியப்பட்டார். இவரது முதல் கணவர் ரோஜர் வாடிம் ஓர் இயக்குநர் ஆவார். இவர் மொத்தமாக ஏழு முறை அகாதமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார். 1969 ஆம் ஆண்டில் வெளியான தே சூட்ஸ் ஹார்சஸ் டோட் தே என்ற திரைப்படத்திற்காக முதல் முறையாக பரிந்துரை செய்யப்பட்டார். மேலும் 1970 ஆம் ஆண்டில் வெளியான க்ளூட் மற்றும் கம்மிங் ஹோம் (1978) ஆகிய திரைப்படங்களில் நடித்ததற்காக இரண்டு முறை சிறந்த நடிகைக்கான ஆஸ்கார் விருதுகளை வென்றார். அவரது மற்ற பரிந்துரைகள் ஜூலியா (1977), தி சீனா சிண்ட்ரோம் (1979), ஆன் கோல்டன் பாண்ட் (1981), மற்றும் தி மார்னிங் ஆஃப்டர் (1986). ஃபன் வித் டிக் அண்ட் ஜேன் (1977), கலிபோர்னியா சூட் (1978), தி எலக்ட்ரிக் ஹார்ஸ்மேன் (1979), மற்றும் 9 டூ 5 (1980) போன்ற திரைப்பங்களில் நடித்ததற்காகவும் இவர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டார்.மேலும் இந்தத் திரைப்படங்கள் வணிக ரீதியாகவும் வெற்றி பெற்றது. 1984 ஆம் ஆண்டில் தெ டால்மேக்கர் எனும் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்டதற்காக இவருக்கு பிரைம் டைம் எம்மி விருது வழங்கப்பட்டது.

1982 ஆம் ஆண்டில், அவர் தனது முதல் உடற்பயிற்சி நிகழ்படமான ஜேன் ஃபோண்டாவின் ஒர்க்அவுட் என்பதனை வெளியிட்டார். இது அதிகம் விற்பனையாகி சாதனை படைத்தது. [4] அடுத்த 13 ஆண்டுகளில் இவர் 22 நிகழ்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த நிகழ்படங்கள் மொத்தமாக 17 மில்லியன் பிரதிகள் விற்பனையாகின. தனது இரண்டாவது கணவர் டாம் ஹேடனிடமிருந்து விவாகரத்து பெற்ற அவர், 1991 ஆம் ஆண்டில் பில்லியனர் டெட் டேர்னரை மணந்தார் . 1990 ஆம் ஆண்டில் வெளியான ஸ்டான்லி & ஐரிஸ் திரைப்படம் வணிக ரீதியாக வெற்றி பெறவில்லை. இதன் பிறகு நடிப்பில் இருந்து ஓய்வு பெற்றார்.

சான்றுகள் தொகு

  1. Davidson, Bill (1990). Jane Fonda: An Intimate Biography. Dutton. பக். 39. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780525248880. https://archive.org/details/janefondaintimat00davi. "Jane was christened Jane Seymour Fonda and, as a child, was known as Lady Jane by her mother and everyone else." 
  2. "Jane Fonda Biography: Actress (1937–)". Biography.com (FYI / A&E Networks). பார்க்கப்பட்ட நாள் March 2, 2017.
  3. Jane Fonda and Robert Redford Golden Lions in Venice. labiennale.org
  4. "Work Out with Jane Fonda, No VHS Required" இம் மூலத்தில் இருந்து நவம்பர் 25, 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20181125115448/https://www.shape.com/fitness/trends/jane-fondas-workout-videos-be-released-dvd. பார்த்த நாள்: January 5, 2019. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜேன்_ஃபோண்டா&oldid=3584827" இலிருந்து மீள்விக்கப்பட்டது