ஜேம்ஸ் ஃபோலி

ஜேம்சு ஃபோலி (James Foley, அக்டோபர் 18, 1973 – ஆகத்து 19, 2014) என்பவர் அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு சார்பில்லா புகைப்படச்செய்தியாளர் ஆவார். இவர் அமெரிக்காவின் குளோபல்போஸ்ட் என்ற செய்தி நிறுவனத்தில் பணி புரிந்தவர். இவர் சிரிய உள்நாட்டுப் போர் பற்றிய செய்திகளை சேகரிப்பதற்காக சிரியா சென்ற வேளையில் 2012 நவம்பர் 22 இல் இனந்தெரியாதோரால் கடத்தப்பட்டார். 2014 ஆகத்து 19 இல் இசுலாமிய தேச இயக்கத்தினர் இவரின் தலையைத் துண்டித்து படுகொலை செய்து அதன் காணொளியை சமூக ஊடகங்களில் வெளியிட்டனர்.[3]

ஜேம்சு ஃபோலி
James Foley
பிறப்புஜேம்ஸ் ரைட் ஃபோலி
(1973-10-18)அக்டோபர் 18, 1973
ரொச்செஸ்டர், நியூ ஹாம்சயர், ஐக்கிய அமெரிக்கா
காணாமல்போனதுநவம்பர் 22, 2012
சிரியா
இறப்புஅண். ஆகத்து 19, 2014(2014-08-19) (அகவை 40)
தெரியவில்லை
இறப்பிற்கான
காரணம்
தலை துண்டிப்பு
தேசியம்அமெரிக்கர்
மற்ற பெயர்கள்ஜிம் ஃபோலி
படித்த கல்வி நிறுவனங்கள்மார்க்கெட் பல்கலைக்கழகம்
மாசச்சூசெட்ஸ் ஆல்ம்ஹர்ஸ்ட் பல்கலைக்கழகம்
மெடில் ஊடகவியல் பள்ளி
பணிபுகைப்படச்செய்தியாளர்
பணியகம்குளோபல்போஸ்ட்
ஏஎஃப்பி
ஸ்டார்ஸ் அன்ட் ஸ்ட்ரைப்சு[1]
சமயம்கத்தோலிக்க திருச்சபை
பெற்றோர்ஜோன், டயான் ஃபோலி[2]

கடத்தலும் கொலையும் தொகு

2012 நவம்பரில் ஃபோலியும் அவரது மொழிபெயர்ப்பாளரும் சிரியாவின் வடமேற்கே கடத்தப்பட்டனர். மொழிபெயர்ப்பாளர் பின்னர் விடுவிக்கப்பட்டார்.[4] ஐஎஸ்ஐஎஸ் எனப்படும் இசுலாமிய தேசப் போராளிகள் ஜேம்ஸ் ஃபோலியை விடுவிப்பதற்காக ஃபோலியின் குடும்பத்தினரிடமிருந்தும், குளோபல்போஸ்ட் நிறுவனத்திடம் இருந்தும் $132 மில்லியன் பணத்தைக் கப்பமாகக் கேட்டனர். இதற்கான தகவல் பரிமாற்றம் 2013 நவம்பர், டிசம்பர் காலப்பகுதியில் இடம்பெற்றது.[5][6] ஃபோலியை மீள கொண்டு வருவதற்குத் தமது நிறுவனம் பல மில்லியன் டாலர்களை செலவிட்டதாக குளோபல்போஸ்ட் நிறுவனத்தின் தலைமைப் பணிப்பாளர் பல்போனி கூறினார். இதற்காகப் பன்னாட்டுப் பாதுகாப்பு நிறுவனம் ஒன்றைத் தாம் வாடகைக்கு அமர்த்தியிருந்ததாகவும் அவர் தெரிவித்தார். 2013 செப்டம்பரில் இப்பாதுகாப்பு நிறுவனம் ஃபோலி இருக்கும் இடத்தை அறிந்து அவரைப் பின்தொடரவும் முடிந்துள்ளது. ஃபோலி கடத்தப்பட்ட நிலையில் பல்வேறு இடங்களுக்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.[6][7][8]

ஃபோலி சாகிபா என்ற ஆயுதக்குழுவினால் கடத்தப்பட்டதாக அவரது குடும்பத்தினர் நம்பியதாக குடும்ப வட்டாரங்கள் தெரிவித்தன. பின்னர் அவர் திமிஷ்குவில் உள்ள சிரியாவின் அரபு வான்படைத் தளம் ஒன்றில் வைக்கப்பட்டிருந்தார் என நம்பப்பட்டது.[9][10] அமெரிக்க அரசுத்தலைவர் பராக் ஒபாமாவின் அறிவுறுத்தலின் பேரில் ஃபோலி மற்றும் பணயக் கைதிகளை விடுவிக்க அமெரிக்கச் சிறப்புப் படை ஒன்றின் நடவடிக்கை 2014 சூலையில் சிரியாவில் நடத்தப்பட்டது.[11] இந்நடவடிக்கையின் போது பல ஆயுதப் போராளிகள் கொல்லப்பட்டனர். ஆனாலும் ஃபோலியோ அல்லது ஏனைய கைதிகளோ விடுவிக்கப்படவில்லை.[11]

2014 ஆகத்து 19 இல் இசுலாமிய தேசப் போராளிகள் பெரிய கத்தி ஒன்றின் மூலம் ஃபோலியின் தலை துண்டிக்கப்படுவதைக் காட்டும் காணொளி ஒன்றை யூடியூப்பில் வெளியிட்டனர். இசுலாமிய தேசப் போராளிகள் மீது அமெரிக்கா குண்டுத் தாக்குதல்கள் நடத்துவைதை நிறுத்துமாறும், அமெரிக்க அரசை எதிர்க்குமாறும் அமெரிக்கர்களைக் கேட்டுக் கொள்ளும் தயாரிக்கப்பட்ட ஒரு அறிக்கையை ஃபோலி வாசிப்பதாக இக்காணொளியில் காட்டப்பட்டது.[12] அமெரிக்க ஊடகவியலாரான ஸ்டீவன் சொட்லொஃப் என்பவரையும் தாம் பிடித்து வைத்திருப்பதாக அக்காணொளியில் போராளிகள் தெரிவித்திருந்தனர். தமது இயக்கத்தின் மீது அமெரிக்கத் தலைவர் பராக் ஒபாமா வான் தாக்குதல்களை நிறுத்தாவிடின், இவரும் கொல்லப்படுவார் என அவர்கள் எச்சரித்திருந்தனர். அடையாளம் தெரியாத பாலைவனம் ஒன்றில் இக்காணொளி படம் பிடிக்கப்பட்டிருந்தது. கொலை செய்தவர் பிரித்தானிய ஆங்கில உச்சரிப்பில் பேசியிருந்தார்.[13][14]

இசுலாமிய தேசப் போராளிகளால் வெளியிடப்பட்ட காணொளி உண்மையானது தான் என அமெரிக்க தேசியப் பாதுகாப்புப் பேரவை 2014 ஆகத்து 20 இல் அறிவித்தது.[15] ஃபோலி இறந்தது அவரது குடும்பத்தினருக்கு உறுதி செய்யப்பட்டது.[16][17] "தமது மகன் சிரிய மக்களின் துன்பங்களை உலகிற்கு எடுத்துக் காட்டியிருப்பதாக" ஃபோலியின் தாயார் டயான் ஃபோலி கூறினார்.[16] திருத்தந்தை பிரான்சிசு ஃபோலியின் குடும்பத்தினருக்குத் தமது ஆறுதல்களைத் தெரிவித்தார்.[18]

இவற்றையும் பார்க்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. Ackerman, Spencer (August 20, 2014). "Islamic State militants claim to have killed US journalist James Foley". தி கார்டியன். http://www.theguardian.com/world/2014/aug/19/james-wright-foley-beheaded-isis-video. பார்த்த நாள்: August 20, 2014. 
  2. "James Foley's Parents Recall Son's 'Big Heart'". ABC News. August 20, 2014. பார்க்கப்பட்ட நாள் August 20, 2014.
  3. Alyssa Newcomb (ஆகத்து 20, 2014). "Another American hostage threatened with death". சிபிஎஸ். World News. பார்க்கப்பட்ட நாள் ஆகத்து 20, 2014.
  4. "FBI profile: James Wright Foley". புலன் விசாரணை கூட்டாட்சிப் பணியகம். Archived from the original on 2014-07-19. பார்க்கப்பட்ட நாள் August 20, 2014.
  5. Cassandra Vinograd and Erin McClam (ஆகத்து 21, 2014). "ISIS Demanded $132 Million for Release of Journalist James Foley". என்பிசி. பார்க்கப்பட்ட நாள் ஆகத்து 21, 2014.
  6. 6.0 6.1 "Report: ISIS Demanded $132 Million Ransom For James Foley's Release". CBS. AP (Washington D.C.). August 21, 2014. http://washington.cbslocal.com/2014/08/21/report-isis-demanded-132-million-ransom-for-james-foleys-release/. பார்த்த நாள்: August 22, 2014. 
  7. "GlobalPost CEO Shares Details Of Fight To Save James Foley". National Public Radio. http://www.npr.org/2014/08/21/342166895/drawn-to-conflict-journalist-james-foley-loved-telling-these-stories. பார்த்த நாள்: August 21, 2014. 
  8. Sampson, Zachary T. (ஆகத்து 20, 2014). "Militants sent e-mails to James Foley's family, GlobalPost CEO says". பாஸ்டன் குளோப். https://www.bostonglobe.com/metro/2014/08/20/foley-family-received-mail-last-week-from-islamic-state-globalpost-ceo-says/yzq8P0bOz3zHoARGhmeg5M/story.html. பார்த்த நாள்: ஆகத்து 22, 2014. 
  9. Nickisch, Curt (மே 3, 2013). "N.H. Family: Missing Journalist James Foley In Syrian Prison". NPR. Boston: WBUR-FM. http://www.wbur.org/2013/05/03/foley-family-syrian-prison. பார்த்த நாள்: August 22, 2014. 
  10. Kelley, Michael B. (August 20, 2014). "One Big Question Surrounds The Murder Of US Journalist James Foley By ISIS". Business Insider. http://www.businessinsider.com/how-did-isis-kidnap-james-foley-2014-8. பார்த்த நாள்: ஆகத்து 22, 2014. 
  11. 11.0 11.1 Julia Pace (August 20, 2014). "Officials: U.S. rescue mission in Syria failed". யாகூ! செய்திகள். AP இம் மூலத்தில் இருந்து ஆகஸ்ட் 21, 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140821075528/http://news.yahoo.com/officials-us-rescue-mission-syria-failed-223157934--politics.html. பார்த்த நாள்: August 20, 2014. 
  12. Rukmini Callimachi (ஆகத்து 19, 2014). "Militant Group Says It Killed American Journalist in Syria". த நியூயார்க் டைம்ஸ். http://www.nytimes.com/2014/08/20/world/middleeast/isis-james-foley-syria-execution.html. பார்த்த நாள்: ஆகத்து 20, 2014. 
  13. Nick Allen and Philip Sherwell (ஆகத்து 20, 2014). "Hunt for 'British' Islamic State killer of US journalist James Foley". த டெயிலி டெலிகிராப். பார்க்கப்பட்ட நாள் ஆகத்து 20, 2014.
  14. Sparrow, Andrew (August 20, 2014). "PM returns from holiday after video shows US reporter beheaded by Briton". தி கார்டியன். http://www.theguardian.com/uk-news/2014/aug/20/isis-fighter-beheaded-us-journalist-james-foley-appears-british-hammond. பார்த்த நாள்: August 20, 2014. 
  15. "Video of U.S. journalists is authentic: NSC". யாகூ! செய்திகள். ராய்ட்டர்ஸ். ஆகத்து 20, 2014. https://news.yahoo.com/video-u-journalists-authentic-nsc-154740127.html. பார்த்த நாள்: ஆகத்து 20, 2014. 
  16. 16.0 16.1 Rik Steves (August 19, 2014). "American killed in Syria a journalist at heart". யாகூ! செய்திகள். AP. https://news.yahoo.com/american-missing-syria-journalist-heart-000311985.html. பார்த்த நாள்: August 20, 2014. 
  17. Lerman, David (ஆகத்து 19, 2014). "Islamic Extremist Video Shows Beheading of U.S. Reporter". புளூம்பர்க். பார்க்கப்பட்ட நாள் ஆகத்து 20, 2014.
  18. "Pope Francis Calls Slain Journalist James Foley's Family". என்பிசி. http://www.nbcnews.com/storyline/james-foley/pope-francis-calls-slain-journalist-james-foleys-family-n186231. பார்த்த நாள்: 21 ஆகத்து 2014. 

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜேம்ஸ்_ஃபோலி&oldid=3267220" இலிருந்து மீள்விக்கப்பட்டது