ஜேம்ஸ் எம். புக்கானன்

ஜேம்ஸ் எம். புக்கானன் (James M. Buchanan, /bjuːˈkænᵻn/; 1919, அக்டோபர் 3 – 2013, சனவரி 9, ) அமெரிக்காவின் பிரபல பொருளாதார நிபுணரும், "பொது தேர்ந்தெடுத்தல் கோட்பாட்டை" (Public Choice Theory) உருவாக்கியவரும், அதற்கான நோபல் பரிசை 1986 இல் ஈட்டியவருமாவார்.[1]

ஜேம்ஸ் எம். புக்கானன்
செப்டம்பர் 2010 இல் புக்கானன்
பிறப்பு(1919-10-03)அக்டோபர் 3, 1919
முர்பீசுபோரோ (Murfreesboro), டென்னிசி,  ஐக்கிய அமெரிக்கா
இறப்புசனவரி 9, 2013(2013-01-09) (அகவை 93)
பிளாக்சுபர்கு, வர்ஜீனியா,  ஐக்கிய அமெரிக்கா
தேசியம்அமெரிக்கர்
நிறுவனம்ஜார்ஜ் மேசன் பல்கலைக்கழகம்
வர்ஜீனியா பலதொழில்நுட்ப மாநிலப் பல்கலைக்கழகம்
வர்ஜீனியா பல்கலைக்கழகம்
துறைPublic choice
கல்விமரபுஅரசியலமைப்புப் பொருளியல்
பயின்றகம்சிக்காகோ பல்கலைக்கழகம்
டென்னசி பல்கலைக்கழகம்
மாநில ஆசிரியர் கல்லூரி, முர்பீசுபோரோ
தாக்கம்பிராங்கு நைட் (Frank Knight)
நட் விக்செல் (Knut Wicksell)
பிரீட்ரிக் கையக்
லுட்விக் வான் மீசசு
தாக்கமுள்ளவர்எலினோர் ஒசுட்ரொம்
டைலெர் கொவென் (Tyler Cowen)
பங்களிப்புகள்பொதுத் தேர்ந்தெடுத்தல் கோட்பாடு (Public choice theory)
வாக்குப் பேரம் (Logrolling)
விருதுகள்பொருளியலுக்கான நோபல் நினைவுப் பரிசு (1986)
ஆய்வுக் கட்டுரைகள்

பொது தேர்ந்தெடுத்தல் கோட்பாடு பொருளாதாரத்தையும், அரசியல் முடிவெடுத்தலையும், அலசி ஆராயும் தனித்துவம் மிக்க கோட்பாடாக கருதப்பட்டதால், உலக பொருளாதார வல்லுநர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று, உலகப் புகழ்பெற்றது.[2]

வாழ்க்கைப் பின்னணி தொகு

1919, அக்டோபர் 3இல் அமெரிக்காவின் டென்னசி மாநிலம் மெம்ஃபிஸ் நகரில் ஒரு ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த புக்கானன், படிப்பில் சிறந்து விளங்கினார். இளம் வயது முதலே பொருளாதாரத்தில் அதிக நாட்டம் கொண்டிருந்த அவர், ஜெர்மன் பொருளாதார நிபுணரான 'நட் விக்செல்' (Knut Wicksell) எழுதிய கட்டுரையால் ஈர்க்கப்பட்டு, அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்.[3]

ஜேம்ஸ், லைலா என்ற தம்பதியருக்கு மூத்த மகனாகப் பிறந்த புக்கானன், 1890இல், டென்னிசியின் கவர்னராக பணியாற்றிய 'ஜான் பி புக்கானன்', என்பவரின் (John Price Buchanan, (1847 – 1930) பேரன் என்பது குறிப்பிடத்தக்கது.[4]

தற்போதுள்ள, 'மத்திய டென்னிசி மாநில பல்கலைக்கழகம்' (Middle Tennessee State University) என அழைக்கப்படும் 'மத்திய டென்னிசி அரசு ஆசிரியர் கல்லூரியில்' 1940இல் பட்டம் பெற்ற அவர், 1941இல், டென்னசி பல்கலைக்கழகத்தில் எம். எஸ். (M.S.) நிறைவு செய்தார்.[5]

 

சான்றாதாரங்கள் தொகு

  1. "James M. Buchanan Jr. - Facts". www.nobelprize.org (ஆங்கிலம்) - 2016. பார்க்கப்பட்ட நாள் 2016-10-03.
  2. "James M. Buchanan". www.econlib.org (ஆங்கிலம்) - 2008. பார்க்கப்பட்ட நாள் 2016-10-03.
  3. "James M. Buchanan, Economic Scholar and Nobel Laureate, Dies at 93". www.nytimes.com (ஆங்கிலம்). JAN. 9, 2013. பார்க்கப்பட்ட நாள் 2016-10-07. {{cite web}}: Check date values in: |date= (help)
  4. "James McGill Buchanan (1919-)". tennesseeencyclopedia.net (ஆங்கிலம்) - 2002 ~ 2016. பார்க்கப்பட்ட நாள் 2016-10-08.
  5. "James M. Buchanan - Biography". www.liquisearch.com (ஆங்கிலம்) - 2016. பார்க்கப்பட்ட நாள் 2016-10-08.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜேம்ஸ்_எம்._புக்கானன்&oldid=3722523" இலிருந்து மீள்விக்கப்பட்டது