ஜேம்ஸ் பிராங்க்

ஜேம்ஸ் பிராங்க் (James Franck, 26 ஆகத்து 1882 – 21 மே 1964) செருமானிய இயற்பியலாளர். பல்வேறு வளிமங்களில் இலத்திரன்களின் பண்புகள் குறிப்பாக "போர் எடுகோள்களின் அடிப்படைக் கூறுகளை ஆய்வு செய்து அக்கொள்கையை மெய்ப்பித்தமைக்காக 'குஸ்டாவ் லுட்விக் ஹெர்ட்ஸ் என்பவருடன் சேர்ந்து 1925 ஆம் ஆண்டுக்கான இயற்பியல் நோபல் பரிசினைப் பகிர்ந்து கொண்டவர்.[1]

ஜேம்ஸ் பிராங்க்
James Frank
பிறப்பு(1882-08-26)26 ஆகத்து 1882
ஆம்பர்க், செருமனி
இறப்பு21 மே 1964(1964-05-21) (அகவை 81)
கோட்டின்கன், மேற்கு செருமனி
தேசியம்செருமன்
துறைஇயற்பியல்
பணியிடங்கள்பெர்லின் பல்கலைக்கழகம்
கோட்டிங்கன் பல்கலைக்கழகம்
ஜான் ஹாப்கின்சு பல்கலைக்கழகம்
சிக்காகோ பல்கலைக்கழகம்
கல்வி கற்ற இடங்கள்ஐடெல்பெர்கு பல்கலைக்கழகம்
பெர்லின் பல்கலைக்கழகம்
ஆய்வு நெறியாளர்எமில் நார்புர்க்
அறியப்படுவதுபிராங்க்-கொண்டோன் தத்துவம்
பிராங்க்-எர்ட்சு பரிசோதனை
விருதுகள்இயற்பியலுக்கான நோபல் பரிசு (1925)

ஒரு பொருளிலுள்ள அணுக்கள் ஒன்றுக்கொன்று மோதும் போது மூலக்கூறுகள் உருவாவதும், சிதைவதும் நிகழ்கின்றன. அப்போது அவை அதிர்வுறுகின்றன; சுழல்கின்றன. அதனால் ஏற்படும் மாற்றத்திற்கான வரைபட வளைவுகளை இரு அணுத் தொகுதிகளுக்கு உருவாக்கிய உடனே, ஈரணு மூலக்கூறுகள் அவற்றின் கற்றை நிறமாலைத் தொகுதி அமைப்பிலிருந்து மாறுபடுகின்றன. இவ்வாறு மாறுபடுவதைத் தீர்மானிக்கத் தேவையான முறைகளை வகுத்தவர் 'ஜேம்ஸ் பிராங்க்'.

இவற்றையும் பார்க்க தொகு

சான்றுகள் தொகு

  1. "The Nobel Prize in Physics 1925". The Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 16 June 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜேம்ஸ்_பிராங்க்&oldid=2225921" இலிருந்து மீள்விக்கப்பட்டது