ஜேம்சு வெப் விண்வெளித் தொலைநோக்கி

James web
(ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஜேம்சு வெப் விண்வெளித் தொலைநோக்கி (James Webb Space Telescope, JWST) என்பது அகச்சிவப்பு வானியலை நடத்துவதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு விண்வெளி நோக்காய்வுக்கலம் ஆகும். விண்வெளியில் உள்ள மிகப்பெரிய ஒளித் தொலைநோக்கி இதுவாது. இதன் பெரிதும் மேம்படுத்தப்பட்ட அகச்சிவப்புத் தெளிவுத்திறன் மற்றும் உணர்திறன், ஹபிள் விண்வெளித் தொலைநோக்கியால் பார்க்க முடியாத மிகவும் பழைய, தொலைதூர அல்லது மங்கலான பொருட்களையும் பார்க்க அனுமதிக்கிறது. இதன் மூலம் முதல் விண்மீன்கள் மற்றும் முதல் விண்மீன் திரள்களின் உருவாக்கம் மற்றும் வாழக்கூடிய வெளிக்கோள்களின் விரிவான வளிமண்டலத் தன்மை போன்ற வானியல் மற்றும் அண்டவியல் துறைகளில் பரந்த அளவிலான ஆய்வுகளை செயல்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜேம்ஸ் வெப் விண்வெளித் தொலைநோக்கி
James Webb Space Telescope
ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கியின் மீள்தருகை முழுமையாகப் பயன்படுத்தப்பட்டது.
திட்ட வகைவானியல்
இயக்குபவர்விண்வெளி தொலைநோக்கி அறிவியல் நிறுவனம் (நாசா)[1] / ஐசா / கனடிய விண்வெளி நிறுவனம்
காஸ்பார் குறியீடு2021-130A
சாட்காட் இல.50463[2]
இணையதளம்அதிகாரப்பூர்வ இணையதளம்
திட்டக் காலம்
  • 2 ஆண்டு-கள், 3 மாதம்-கள், 23 நாள்-கள் (இதுவரை)
  • 5 12 ஆண்டுகள் (முதன்மைத் திட்டம்)[3]
  • 10 ஆண்டுகள் (திட்டம்)
  • 20 ஆன்டுகள் (எதிர்பார்க்கப்படும் வாழ்நாள்)[4]
விண்கலத்தின் பண்புகள்
தயாரிப்பு
  • நோர்த்ரொப் கிரம்மன்
  • பால் வான்வெளி
  • L3-ஆரிசு[1]
ஏவல் திணிவு6,161.4 கிகி (13,584 இறா.)[5]
பரிமாணங்கள்20.197 மீ × 14.162 மீ (66.26 அடி × 46.46 அடி)
திறன்2 கி.வா
திட்ட ஆரம்பம்
ஏவப்பட்ட நாள்25 திசம்பர் 2021 (2021-12-25), 12:20 ஒ.ச.நே
ஏவுகலன்ஆரியான் 5 ECA (VA256)
ஏவலிடம்கயானா விண்வெளி மையம், ELA-3
ஒப்பந்தக்காரர்Arianespace
Entered service12 சூலை 2022
சுற்றுப்பாதை அளபுருக்கள்
Reference systemசூரியன்–பூமி L2 சுற்றுவட்டம்
சுற்றுவெளிஏலோ சுற்றுவட்டம்
அண்மைசுற்றுப்பாதை வீச்சு250,000 கிமீ (160,000 மைல்)[6]
கவர்ச்சிசுற்றுப்பாதை வீச்சு832,000 கிமீ (517,000 மைல்)[6]
சுற்றுக்காலம்6 மாதங்கள்
Main telescope
வகைகோர்சு தொலைநோக்கி
விட்டம்6.5 மீ (21 அடி)
குவிய நீளம்131.4 மீ (431 அடி)
சேர்க்கும் பரப்பு25.4 மீ2 (273 ச.அடி)[7]
அலைநீளங்கள்0.6–28.3 μm (செம்மஞ்சள் முதல் நடு-அகச்சிவப்புக் கதிர் வரை)
Transponders
Band
பட்டையகலம்
  • S-band up: 16 kbit/s
  • S-band down: 40 kbit/s
  • Ka-band down: up to 28 Mbit/s
கருவிகள்
  • FGS-NIRISS
  • MIRI
  • NIRCam
  • NIRSpec]
கூறுகள்
  • ஒருங்கிணைந்த அறிவியல் கருவி தொகுதி
  • ஒளித் தொலைநோக்கி உறுப்பு
  • விண்கலம்

ஜேம்ஸ் வெப் விண்வெளித் தொலைநோக்கித் திட்டச் சின்னம்
வெப்பின் முதல் ஆழமான புலம்

ஐரோப்பிய விண்வெளி நிறுவனம், கனடிய விண்வெளி நிறுவனம் ஆகியவற்றுடன் இணைந்து அமெரிக்காவின் நாசா நிறுவனம் இப்பணியை மேற்கொள்கிறது. இத்தொலைநோக்கிக்கு ஜேம்சு ஈ. வெப் என்பவரின் நினைவாக பெயர் சூட்டப்பட்டது. இவர் 1961 முதல் 1968 வரை மெர்க்குரி, செமினி, அப்பல்லோ திட்டங்களை செயல்படுத்திய காலகட்டத்தில் நாசாவின் நிருவாகியாக இருந்தார்.

இத்தொலைநோக்கி 2021 திசம்பர் 25 அன்று ஆரியான் 5 ஏவுகலன் மூலம் பிரெஞ்சு கயானாவில் இருந்து ஏவப்பட்டது. இது 2022 சனவரியில் சூரிய-பூமி L2 லெக்ராஞ்சியப் புள்ளியை அடைந்தது.

இத்தொலைநோக்கி மூலம் பெறப்பட்ட முதலாவது படிமம் 2022 சூலை 11 இல் பொதுமக்களின் பார்வைக்கு விடுவிக்கப்பட்டது.[8] தெற்கு அரைக்கோளத்தில் இருந்து தெரியும் வானத்தின் ஒரு சிறிய பகுதியை உள்ளடக்கிய ஆழமான-புல புகைப்படம், பூமியிலிருந்து 4.6 பில்லியன் ஒளியாண்டுகள் தொலைவில் உள்ள வோலன்சு விண்மீன் குழாமில் உள்ள SMACS 0723 என்ற விண்மீன் பேரடைக் கொத்தை சித்தரிக்கிறது.[9][10] தொலைநோக்கியின் அண்மை அகச்சிவப்புப் புகைப்படக் கருவி (NIRCam) மூலம் இப்படம் பிடிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான விண்மீன் பேரடைகள் இப்படத்தில் காணப்படுகின்றன, இது இதுவரை எடுக்கப்பட்ட ஆரம்பகால அண்டத்தின் மிக உயர்ந்த தெளிவுத்திறன் படமாகும்.

திட்டசெலவு தொகு

இதன் திட்டம், ஆராய்ச்சி என அனைத்திற்குமான செலவு 9.7 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஆராய்ச்சிக்காக 17 நாடுகள் கூட்டுச்சேர்ந்து உள்ளன. இதில் முக்கியமாக ஐரோப்பிய விண்வெளி நிறுவனம், மற்றும் கனடியன் விண்வெளி நிறுவனமும் பங்கு வகிக்கின்றன.

குவி ஆடிகள் தொகு

இதில் மொத்தமாக 18 அறுங்கோண வடிவிலான குவி ஆடிகள் பொருத்தப்படும், முதல் முயற்சியாக 2015 நவம்பர் 26 ஆம் தேதி அன்று முதல் ஆடி பொருத்தப்பட்டது. இந்த ஆடிகளில் ஒன்வொன்றும் எடை 40 கிலோ கிராம், 1.3 மீட்டர் சுற்றளவு கொண்டிருக்கும். ஆடிகள் அனைத்தும் பொருத்தப்பட்டபின்பு 6.5 மீட்டர் அளவு கொண்ட பெரிய ஒரே ஆடியாக காட்சி கொடுக்கும்.

 
ஹம்பிலில் உள்ள ஆடியின் தோற்றமும் ஜேம்ஸ் தொலை நோக்கியில் அமைந்துள்ள ஆடியின் தோற்றம்

ஒப்பீட்டு தொகு

 
முதன்மை கண்ணாடிகள் உதாரணங்கள் ஒப்பீடு

கூட்டாளிகள் தொகு

பங்குபெரும் நாடுகள்

காட்சியகம் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "NASA JWST "Who are the partners in the Webb project?"". NASA. Archived from the original on 29 November 2011. பார்க்கப்பட்ட நாள் 18 November 2011.   இந்தக் கட்டுரை பொது உரிமையில் உள்ள மூலத்திலிருந்து உரையைக் கொண்டுள்ளது.
  2. Kelso, Thomas S. (25 December 2021). "JWST". Celestrak. Celestrak. Archived from the original on 18 January 2022. பார்க்கப்பட்ட நாள் 26 December 2021.
  3. "FAQ Full General Public Webb Telescope/NASA". jwst.nasa.gov. Archived from the original on 23 July 2019. பார்க்கப்பட்ட நாள் 13 January 2022.
  4. "NASA Says Webb's Excess Fuel Likely to Extend its Lifetime Expectations – James Webb Space Telescope". blogs.nasa.gov. Archived from the original on 6 January 2022. பார்க்கப்பட்ட நாள் 30 December 2021.
  5. StephenClark1 (23 December 2021). "The exact launch mass of the James Webb Space Telescope: 6161.4 kilograms. That figure includes 167.5 kg of hydrazine and 132.5 kg of dinitrogen tetroxide for the propulsion system" (Tweet). பார்க்கப்பட்ட நாள் 23 December 2021. {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)CS1 maint: numeric names: authors list (link)
  6. 6.0 6.1 "JWST Orbit". JWST User Documentation. Space Telescope Science Institute. Archived from the original on 11 July 2022. பார்க்கப்பட்ட நாள் 25 December 2021.
  7. "JWST Telescope". James Webb Space Telescope User Documentation. Space Telescope Science Institute. 23 December 2019. Archived from the original on 11 July 2022. பார்க்கப்பட்ட நாள் 11 June 2020.   இந்தக் கட்டுரை பொது உரிமையில் உள்ள மூலத்திலிருந்து உரையைக் கொண்டுள்ளது.
  8. Fisher, Alise; Pinol, Natasha; Betz, Laura (2022-07-11). "President Biden Reveals First Image from NASA's Webb Telescope". NASA. Archived from the original on 12 July 2022. பார்க்கப்பட்ட நாள் 2022-07-12.
  9. "Webb's first deep field" (in ஆங்கிலம்). ஐரோப்பிய விண்வெளி நிறுவனம். July 12, 2022. Archived from the original on 2022-07-12. பார்க்கப்பட்ட நாள் 2022-07-11.
  10. "SRELICS". அகச்சிவப்பு வானவியல் செயற்கைக்கோள். Archived from the original on 2022-07-12. பார்க்கப்பட்ட நாள் 2022-07-12.

வெளி இணைப்புகள் தொகு