ஜே-கேட் (J-Gate) என்பது உலகளாவிய மின்-ஆய்விதழ் ஆய்வுக்கட்டுரைகளை அணுகுவதற்கான ஒரு நூலியல் தரவுத்தளமாகும்.[1] ஆராய்ச்சி சமூகத்திற்கான ஒரு கண்டுபிடிப்பு தளமாக,[2] அறிவியல் ஆராய்ச்சியின் பெரிய தரவுத்தளத்திற்கான சந்தா அடிப்படையிலான அணுகலின் கீழ் ஒரு வலைத்தளமாக வழங்கப்படுகிறது.[3][4] இத்தளத்தில் ஆய்வுச் சுருக்கங்கள், மேற்கோள்கள், திறந்த அணுகல் கொண்ட ஆய்விதழ்களுக்கான முழு ஆய்வுக்கட்டுரையின் அணுகலைக் கொண்டுள்ளது. தற்பொழுது 71 மில்லியனுக்கும் அதிகமான ஆய்வுக் கட்டுரைகள், 16,000க்கும் மேற்பட்ட வெளியீட்டாளர்களின் 58,000+ ஆய்விதழ்களை உள்ளடக்கிய தளமாக செயல்படுகிறது.[5] இது ஒவ்வொரு தலைப்புக்கும் இரண்டு வகையான தர அளவை வழங்குகிறது; அவை எச்-குறியீடு மற்றும் எஸ்சிஐமேகோ ஆய்விதழ் தரம் ஆகும்.

ஜே-கேட்
J-Gate
Producerதகவலியல் இந்தியா நிறுவனம் (இந்தியா)
History2001; 23 ஆண்டுகளுக்கு முன்னர் (2001)
Languagesஆங்கிலம்
Access
Costவருடாந்திர சந்தா
Coverage
Disciplinesபல்துறை
Record depthஅட்டவணை, ஆய்வுச் சுருக்கம், முழு உரை, ஆசிரியர், தலைப்பு தலைப்பு மற்றும் பொருள் திறவுச் சொற்கள்
Format coverageஆய்விதழ்கள்
No. of records71 மில்லியன்+ ஆய்வுக் கட்டுரைகள் 58000+ ஆய்விதழ்கள்
Update frequencyதினமும்
Links
Websitejgateplus.com

கண்ணோட்டம் தொகு

ஜே-கேட் 2001- இந்தியா தகவலியல் நிறுவனம் மூலம் உருவாக்கப்பட்டுத் தொடங்கப்பட்டது. திறந்த அணுகல் சமூகத்திற்கான பங்களிப்பாக, தகவலியலின் ஆரம்பத்தில் ஓபன் ஜே-கேட் என்ற இலவச தளத்தையும் வழங்கியது.[6]

தற்போதைய ஜே-கேட் பதிப்பு உயிரியல் மருத்துவ அறிவியல், பொறியியல் மற்றும் தொழில்நுட்பம், சமூக & மேலாண்மை அறிவியல், வேளாண்மை மற்றும் உயிரியல் அறிவியல், கலை மற்றும் மானிடவியல் மற்றும் அடிப்படை அறிவியல் போன்ற 6 வெவ்வேறு பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. ஜே-கேட், கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கான தனிப்பயனாக்கப்பட்ட வள-பகிர்வு தளமாக வழங்கப்படும் ஜே-கேட் தனிப்பயன் உள்ளடக்கக் கூட்டமைப்பு எனப் பெயரிடப்பட்ட ஒரு நீட்டிக்கப்பட்ட பதிப்புடன் இணைக்கப்பட்டுள்ளது.[7][8]

மேலும் பார்க்கவும் தொகு

  • கல்வி தரவுத்தளங்கள் மற்றும் தேடுபொறிகளின் பட்டியல்
  • மைக்ரோசாஃப்ட் கல்வித் தேடல்
  • கூகுள் இசுகாலர்
  • வணிக மற்றும் மேலாண்மை வழக்குகளின் தெற்காசிய இதழ்

மேற்கோள்கள் தொகு

  1. "About J-Gate".
  2. "Journal Discovery Platforms Helping Technology Research". Tech Story. 13 February 2018. https://techstory.in/journal-discovery-platforms-helping-technology-research/. 
  3. "Discovery Platform J Gate Designed To Aid Researchers". SME Street. https://smestreet.in/digital-india/discovery-platform-j-gate-designed-to-aid-researchers/. 
  4. "Informatics Flagship Product J-Gate". Informatics Product. Archived from the original on 2022-10-07. பார்க்கப்பட்ட நாள் 2022-11-22.
  5. "Research Simplified – J-Gate, an answer to a Researcher’s Quest!". The Scipreneur. 27 December 2017. https://www.thescipreneur.com/research-simplified-j-gate-an-answer-to-a-researchers-quest/. 
  6. Sathyanarayana, N. V. (2008). "Open Access and Open J-Gate" (in en). DESIDOC Journal of Library & Information Technology 28 (1): 57–60. doi:10.14429/djlit.28.1.153. பன்னாட்டுத் தர தொடர் எண்:0976-4658. https://publications.drdo.gov.in/ojs/index.php/djlit/article/view/153. பார்த்த நாள்: 2022-11-22. 
  7. Khiste, Gajanan P.; Maske, Dnyaneshwar B.; Deshmukh, Rahul K. (2018). "Analysis of Publication Productivity of Consortia by J-Gate Database" (in en). Research Journal of Humanities and Social Sciences 9 (1): 277. doi:10.5958/2321-5828.2018.00050.5. பன்னாட்டுத் தர தொடர் எண்:0975-6795. 
  8. ""Progress Through Partnership" Consortia Based e-Resource Subscription Initiatives in India". ResearchGate (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-06-12.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜே-கேட்&oldid=3729174" இலிருந்து மீள்விக்கப்பட்டது