ஜோசெலின் ஜில்

ஜோசெலின் ஜில் (Jocelyn Gill) (1916–ஏப்பிரல் 26, 1984[1]) ஒரு அமெரிக்க வானியலாளர் ஆவார். இவர் நாசாவில் பணிபுரிந்தார்.

ஜோசெலின் ஜில்
Jocelyn Gill
பிறப்பு1916
அரிசோனா
இறப்புஏப்பிரல் 26, 1984
சிஞ்சினாட்டி, ஓகியோ
தேசியம்அமெரிக்கர்
பணியிடங்கள்நாசா

வாழ்க்கை தொகு

இவர் மவுண்ட் கோலியோக் கல்லூரியில் ஆய்வக உதவியாளராகவும் வானியல் பயிற்றுநராகவும் பணிபுரிந்தார். பின்னர் இவர் மசாசூசட் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியமர்த்தப்பட்டார். இவர் தன் முனைவர் பட்டத்தை 1959 இல் யேல் பலகலைக்கழகத்தில் பெற்ரார்.[2][3][4] இவர் 1961 இல் நாசாவில் சேர்ந்தார். இங்கே இவர் ஆளுடைய விண்வெளித் திட்டத்தில் ஆய்வுகள் மேற்கொண்டு 1963 முதல் 1966 வரை விண்வெளி பறத்தல் அறிவியலில் தலைமைப் பொறுப்பை வகித்தார். மேலும் இவர் ஜெமினி விண்வெளித் திட்ட்த்திலும் பணிபுரிந்துள்ளார்.[3] இவர்1963 இல் சூரிய ஒளிமறைப்பு வெண்வெளி பயணத்தில் கலந்துகொண்டு, சூரிய ஒளிமுகட்டை ஆய்ந்த்தோடு விண்வெளி வீரர்களுக்கு வானியல் பாடமும் பயிற்றுவித்துள்ளார். வழக்கமாக இவர்களுக்கு வானியல் அறிவு தேவைப்படுவதில்லை.[2]

இவர் அமெரிக்க அறிவியல் மேம்பாட்டுக் கழகத்தின் ஆய்வுறுப்பினர் ஆவார். இவர் 166 இல் கூட்டமைப்பின் பெண் விருதைப் பெற்ரார்.[3] இவருக்கு பன்மை இதய நார்த்துடிப்பு நோய் இருப்பது கண்டறியப்பட்டது. இவர் 1966 இல் தேசிய பன்மை இதய நார்த்துடிப்பு நோய்க் கழகத்தின் அந்த ஆண்டின் சிறந்த பெண்மணியாகத் தேர்வு செய்யப்பட்டு அக்கழக விருதையும் பெற்றுள்ளார்.[5] இவர் அந்நோயால் 1984 இல் தன் 67 ஆம் அகவையில் இறந்தார்.[6]

மேற்கோள்கள் தொகு

  1. https://familysearch.org/ark:/61903/1:1:VKGH-CSN
  2. 2.0 2.1 Vern Haughland (July 1, 1963). "Jocelyn Gill -- She's Set Her Sights On The Stars". St. Petersburg Times: p. 40. https://news.google.com/newspapers?id=T5pPAAAAIBAJ&sjid=MlIDAAAAIBAJ&pg=6915%2C427480. பார்த்த நாள்: 29 March 2014. 
  3. 3.0 3.1 3.2 Marilyn Ogilvie, Joy Harvey (2000). Biographical Dictionary of Women in Science. Routledge. பக். 1019. https://books.google.com/books?id=rUCUAgAAQBAJ&pg=PA1019. பார்த்த நாள்: 29 March 2014. 
  4. Tiffany K. Wayne (2011). American Women of Science Since 1900. 1. ABC-CLIO. பக். 433. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:1598841580. https://books.google.com/books?id=gPGZJ_YuMwgC&pg=PA433. பார்த்த நாள்: 29 March 2014. 
  5. "Woman Space Scientist Honored". The Kansas City Times: p. 12. 16 June 1966. https://www.newspapers.com/clip/822631/the_kansas_city_times/. பார்த்த நாள்: 5 August 2014.   
  6. "Death of Dr. Jocelyn Gill, Nasa Chief". CWSP Gazette: A Newsletter of the Committee on the Status of Women in Physics of the American Physical Society 4 (4). November–December 1984. http://www.aps.org/programs/women/reports/gazette/upload/fall84.pdf. பார்த்த நாள்: 29 March 2014. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜோசெலின்_ஜில்&oldid=2896192" இலிருந்து மீள்விக்கப்பட்டது