ஞானசௌந்தரி (ஜெமினி)

ஜெமினி கணேசனின் தமிழ் திரைப்படம்

ஞானசௌந்தரி 1948 ஆம் ஆண்டில் ஜெமினி கலையகத்தினால் தயாரிக்கப்பட்டு வெளியான ஒரு வரலாற்றுத் தமிழ்த் திரைப்படம் ஆகும். இதே பெயரில் (ஞானசௌந்தரி) இதே திரைக்கதையுடன் இதே ஆண்டில் சிட்டாடல் நிறுவனம் ஒரு திரைப்படத்தை வேறு நடிகர்களுடன் வெளியிட்டிருந்தது. இரண்டையும் வேறுபடுத்துவதற்காக இத்திரைப்படம் ஜெமினியின் ஞானசௌந்தரி எனவும், மற்றையது சிட்டாடலின் ஞானசௌந்தரி எனவும் விளம்பரப்படுத்தப்பட்டன. ஜெமினியின் திரைப்படம் வெளியான போது சீட்டாடலின் ஞானசௌந்தரி மிக வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்தது. ஜெமினியின் ஞானசௌந்தரி பெரும் தோல்வியடைந்தது.[1] படம் படுதோல்வியடைந்ததை அடுத்து, ஜெமினி ஸ்டூடியோசின் அதிபர் எஸ். எஸ். வாசன் படத்தின் பிரதிகள் அனைத்தையும் திரும்பப் பெற்றுக் கொண்டு, அவற்றை எரித்து விட்டார்.[2] இதனால், இத்திரைப்படத்தின் பிரதிகள் எதுவும் இப்போது கிடைக்கவில்லை.

ஞானசௌந்தரி
ஜெமினியின் ஞானசௌந்தரி திரைப்பட விளம்பரம் (சூன் 1948 பேசும் படம்)
இயக்கம்முருகதாசா
தயாரிப்புநாயினா
மூலக்கதைஞானசௌந்தரி நாடகம்
திரைக்கதைகொத்தமங்கலம் சுப்பு
கி. ரா.
நாயினா
இசைஎம். டி. பார்த்தசாரதி
நடிப்புஎம். கே. ராதா
வி. எஸ். சுசீலா
டி. ஆர். இராமச்சந்திரன்
ப. கண்ணாம்பா
நாராயணராவ்
ஒளிப்பதிவுஎம். நடராஜன்
படத்தொகுப்புஎன். ஆர். கிருஷ்ணசுவாமி
கலையகம்ஜெமினி
வெளியீடுசூன் 18, 1948 (1948-06-18)(இந்தியா)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

ஜெமினியின் ஞானசௌந்தரி முருகதாசாவின் இயக்கத்தில் நாயினாவின் தயாரிப்பில் வெளிவந்தது. இதன் பாடல்களை பாபநாசம் சிவன், கொத்தமங்கலம் சுப்பு, கே. வி. வேணு ஆகியோர் எழுத, எம். டி. பார்த்தசாரதி இசையமைத்திருந்தார். ஜெயசங்கர், நடராஜ் ஆகியோர் நடனங்களை அமைத்திருந்தனர்.[3]

திரைக்கதை தொகு

நடிப்பு தொகு

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஞானசௌந்தரி_(ஜெமினி)&oldid=3880975" இலிருந்து மீள்விக்கப்பட்டது